ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் ஐ.சி.சி.யின் கமிட்டி குழுத் தலைவர் கும்ப்ளே

889
Anil Kumble

இந்திய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 57 பேர் விண்ணப்பித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை பி.சி.சி.ஐ. தெரிவித்தது.

இந்திய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி காலியாக இருக்கிறது. பயிற்சியாளராக இருக்க விரும்புபவர்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

அத்தோடு கடந்த 10ஆம் திகதி வரை அதற்கான அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

ஆங்கில மண்ணில் பாகிஸ்தான் தடுமாறும் – மலிக்

இந்த காலக்கெடு முடிந்த நிலையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 57 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பதாக கிரிக்கெட் சபை தெரிவித்தது.

இந்திய அணியின் முன்னாள் இயக்குனர் ரவிசாஸ்திரி தெரிவுக் குழுத் தலைவர் சந்தீப் பட்டேல், விக்ரம் ரத்தோர், பிரவீன் ஆமரோ, வெங்கடேஷ் பிரசாத், பல்வீந்தர்சிங் சாந்து, சுரேந்திரபாவே, ரிஷிகேஷ் கனித்கர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த  டேவ் வட்மோர், கில்லஸ்பி, ஸ்டூவர்ட்லா ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பதாக பெயர்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும், ஐ.சி.சி.யின் கமிட்டி குழுத் தலைவருமான கும்ப்ளேயும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பதாக கிரிக்கெட் சபை தகவலை வெளியிட்டுள்ளது. கும்ப்ளே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் சபைக்கு மின்னஞ்சல் மூலம் அவர் தனது விண்ணப்பத்தை அனுப்பி உள்ளார்.

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த கும்ப்ளே 132 டெஸ்ட் மற்றும் 271 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில்  619 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ள இவர் 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்