தான் எட்டிய சாதனைகள் குறித்த மகிழ்ச்சியுடன் விடைபெறும் சங்கக்கார

1028

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, தான் அதிகம் கிரிக்கெட்டை இழக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.  

தனது கடைசி முதல்தரப் போட்டியில் இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக ஆடிய 39 வயதான சங்கக்கார லங்கர்ஷர் அணிக்கு எதிராக தான் விளையாடிய கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களை பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று முடிவடைகிறது.

புதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி

எனினும் இலங்கையை விட மோசமான வரலாற்றினைக் கொண்ட கிரிக்கெட் அணிகள்…

134 டெஸ்ட் போட்டிகளில் 12,400 ஓட்டங்களை பெற்றிருக்கும் சங்கக்கார டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டம் பெற்றோர் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

“சிலவேளை நீண்ட காலம் நின்றுபிடித்து இருக்க முடியும் என்றபோதும் தாமதிப்பதை விடவும் விரைவாக விடைபெறுவது சிறந்தது என்றே எப்போதும் நான் கருதுவேன்” என்று சங்கக்கார தனது ஓய்வு குறித்து குறிப்பிட்டார்.

வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி தனது 40ஆவது வயதை எட்டும் இடது கைது துடுப்பாட்ட வீரரான சங்கக்கார, முதல்தர கிரிக்கெட்டில் மொத்த 20,911 ஓட்டங்களை பெற்றிருக்கும் நிலையில் ஓய்வு பெறுகிறார்.

இதில் அவர் இந்த பருவகாலத்தில் கௌண்டி சம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக பெற்ற சுமார் 1,500 ஓட்டங்களும் அடங்கும். இதன் ஓட்ட சராசரி 106.50 ஆகப் பதிவாகின்றது.

BBC Sport செய்திச் சேவைக்கு அவர் அளித்த போட்டியில் கூறியதாவது,

“கிரிக்கெட்டை நான் அதிகம் இழப்பேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது ஒரு நல்ல விடயமாகும். பெரும்பாலான வீரர்கள் கவலை, ஏமாற்றம், வருத்தம் என்று பல விடயங்களுடனேயே எப்போதும் ஓய்பெற்று செல்கின்றனர்.

எல்லோருக்கும் இருப்பதுபோல் ஒருசில ஏமாற்றங்களுடனேயே நான் ஓய்வு பெறுகிறேன். ஆனால் எனது ஆட்ட முறை மற்றும் எட்டிய சாதனைகள் பற்றி நான் முழுமையாக மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்பதுவே எல்லா விளையாட்டினதும் அழகு. யார் ஓய்வு பெறுகிறார், யார் புதிதாக வருகிறார் என்பது பெரிய விடயமல்ல. எம் அனைவரையும் விடவும் விளையாட்டு என்பது சிறப்பானதாகும்” என்று சங்கக்கார கூறினார்.

சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம்

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில், இலங்கை…

எனினும், T-20 போட்டிகளிலும் சிறந்த பதிவுகளைக் கொண்டுள்ள சங்கக்கார வெளிநாட்டு T-20 போட்டிகளில் 2018 வரை தொடர்ந்து ஆட உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு போதுமான திறமை இருப்பதாக, ஓர் இளைஞராக இருந்தபோது தான் நம்பவில்லை என்றே சங்கக்கார குறிப்பிட்டிருந்தார்.

சங்கக்காரவை விடவும் (28,016) இந்தியாவின் சச்சின் டென்டுல்கர் (34,357) மாத்திரமே அனைத்துவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் பெற்றுள்ளார். அதேபோன்று இலங்கைக்காக அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவராகவும் அவர் உள்ளார்.

சங்காவைத் தவிர இலங்கைக்காக மஹேல ஜயவர்தன (11,814) மாத்திரமே 10,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.

சங்கக்கார டர்ஹம், வொர்விக்ஷயர் மற்றும் சர்ரே ஆகிய மூன்று இங்கிலாந்து கௌண்டி அணிகளுக்காக விளையாடியபோதும் தனது கடைசி பருவத்திலே முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டில் அவர் விளையாடிய 16 கௌண்டி சம்பியன்ஷிப் இன்னிங்ஸ்களில் எட்டு சதங்களுடன் 1,491 ஓட்டங்களை பெற்றார். இது இந்த பருவத்தில் வீரர் ஒருவரின் அதிக ஓட்டங்களாகவும் இருந்தது.

கடந்த மே மாதம் லோட்ஸ் மைதானத்தில் நடந்த மிடில்செக்ஸ் அணியுடனான போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற அவர், தனது அணி குறித்த ஆட்டத்தை சமநிலையில் முடிப்பதற்கு பாரிய அளவில் உதவினார்.

கடந்த ஜுனில் யொக்ஷயர் அணியுடனான ஒருநாள் போட்டியில் சங்கக்கார பெற்ற 121 ஓட்டங்கள் மூலம் அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 ஆவது சதத்தை பெற்று சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க