இந்தியாவுக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ்

BCCI

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதலாவது சுழல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்தார். 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று (17) ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை அவர் 38 ஆவது ஓவரில் வீழ்த்திய போது 100 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார்.

லோக்கேஷ் ராகுலின் அதிரடியோடு அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

ராஜ்கோட்டில் நேற்று (17) நடைபெற்று……

ராஜ்கோட்டில் நேற்று அவர் அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை ஒரே ஓவரில் வீழ்த்தியது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஹர்பஜன் சிங் 76 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்ததுடன், குல்தீப் யாதவ் 58 ஆவது போட்டியில் 100 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தினார்

மொஹமட் ஷமி 56 போட்டிகளிலும், பும்ரா 57 போட்டிகளிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்ட, குல்தீப் யாதவ் 58 போட்டிகளில் எட்டி 3 ஆம் இடத்தில் திகழ்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 2 தடவைகள் ஹெட்ரிக் எடுத்து குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இவர் 44 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 

அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் இரண்டாவது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 

ரோஹித் 7000 ஓட்டங்கள்

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா 13 ஓட்டங்களை எடுத்த போது ஒருநாள் அரங்கில் 7000 ஓட்டங்களை அதிவேகமாக எடுத்த முதல் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார். 

இவர் 137 இன்னிங்சுகளில் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் ஹஷிம் அம்லா 147 இன்னிங்சுகளில் 7000 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

160 இன்னிசுகளில் 7000 ஓட்டங்களை எடுத்த இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 3 ஆவது இடத்திலும், இலங்கையின் திலகரத்ன டில்ஷான் (165) நான்காவது இடத்திலும் உள்ளனர். 

ராகுல் 1000 ஓட்டங்கள்

லோகேஷ் ராகுல் 64 ஓட்டங்களை எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ஓட்டங்களை (27 இன்னிங்ஸ்) எடுத்தார். விராட் கோஹ்லி (24), ஷிகர் தவான் (24), அதிவேகமாக 1000 ஓட்டங்களை எடுத்த இந்திய வீரர் ஆவர்.

ரிஷப் பண்ட்டிற்குப் பதிலாக புதுமுக வீரர் பரத்துக்கு அழைப்பு

அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது…

கோஹ்லி அபாரம்

இந்தப் போட்டியில் 78 ஓட்டங்களை எடுத்த விராட் கோஹ்லி, சர்வதேச அரங்கில் தலைவராக அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் அலன் போர்டரை (11, 062 ஓட்டங்கள்) முந்தி, ஐந்தாவது இடம்பெற்றார். கோஹ்லி 171 போட்டிகளில் 11, 119 ஓட்டங்களை எடுத்துள்ளார். 

முதல் நான்கு இடத்தில் ரிக்கி பொண்டிங், கிரஹம் ஸ்மித், பிளெமிங், டோனி ஆகியோர் உள்ளனர். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<