ரொனால்டோ விளையாடாததற்கு எதிராக வழக்கு தொடரும் ரசிகர்கள்

521
©Getty image

தென் கொரியாவில் நட்புறவு போட்டி ஒன்றில் ஆடிய ஜுவன்டஸ் கழகத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திற்கு வராமல் இருக்கையிலேயே இருந்ததால், தென் கொரிய கால்பந்து ரசிகர்கள் இழப்பீடு கேட்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.  

வெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு

இலங்கை தேசிய கால்பந்து அணியில் இணைந்துகொள்ளுமாறு வெளிநாட்டை…

கேலீக் ஓல் ஸ்டார் அணிக்கு எதிராக சோலில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நடைபெற்ற இந்த நட்புறவுப் போட்டியில் போர்த்துக்கலின் ரொனால்டோ குறைந்தது 45 நிமிடங்களாவது ஆடுவார் என்று ஏற்பாட்டுக் குழுவினர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்

இதனை நம்பி சோலின் உலகக் கிண்ண அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டிக்காக 65,000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததோடு, அரங்கு முழுவதும் ரசிகர்கள் குழுமினர். எனினும், இதனை பொருட்படுத்தாது ரொனால்டோ போட்டி முழுவதும் மேலதிக வீரராகவே (Extra player) இருந்தார்.  

இவ்வாறு ரொனால்டோ ஆடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையதள குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழக்கறிஞரை நாடுயுள்ளது.  

ரொனால்டோவை பார்க்கவே பலரும் டிக்கெட்டுகளை வாங்கினார்கள். ஜுவான்டஸுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பாஸ்டா நிறுவனம், ரொனால்டோ குறைந்தது 45 நிமிடங்கள் விளையாடுவார் மற்றும் ரசிகர்களுக்கு கையெழுத்திடும் நிகழ்வு ஒன்றை நடத்துவார் என்று ஒப்பந்தம் செய்திருத்தது என்று ரசிகர்கள் தரப்பு வழக்கறிஞரான கிம் மின் கிட், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்

இலங்கை கால்பந்து பயிற்றுவிப்பாளருக்கு எதிராக முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு

இலங்கை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நிசாம் பகீர் அலியிடம் இருந்து…

இந்நிலையில், தலா ஒரு டிக்கெட்டுக்கு 59 டொலர் இழப்பீட்டுடன் டிக்கெட் தரகுக் கட்டணம் மற்றும்மன வேதனைக்காகஒவ்வொன்றுக்கும் தலா 847 டொலர் இழப்பீடாகக் கோரி ரசிகர்கள் வழக்குத் தொடுக்கவுள்ளனர்.    

”சாதாரணமாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் டிக்கெட்டுகளின் விலையை வாதிகளுக்கு திருப்பித் தருவது வழக்கமாக இருந்தாலும், நிறுவனம் கால்பந்து நட்சத்திரத்தின் ரசிகர்களிடம் பிரயோசனம் பெற பொய்யாக விளம்பரப்படுத்தியிருக்கும் நிலையில் இந்த வழக்கு வித்தியாசமானது என்று கிம் குறிப்பிட்டார்.    

நிறுவனம் முறையான இழப்பீட்டை வழங்காத பட்சத்தில் அடுத்த வாரம் அளவில் இந்த வழக்கை தொடுக்கப்போவதாக கடந்த செவ்வாயன்று கிம் தெரிவித்தார்

ஜுவான்டஸ் தனது ஆசிய சுற்றுப்பயணத்தை கடந்த ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பித்து சிங்கப்பூரை அடைந்தது. அடுத்த நாள் அந்த அணி சர்வதேச சம்பியன்ஷிப் நட்புறவுக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தின் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணியை எதிர்கொண்டது.

இதனைத் தொடர்ந்து அந்த இத்தாலி கழகம் புறப்படும் விமானம் தாமதித்ததால் தென் கொரியாவில் நட்புறவுப் போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்னரே அந்நாட்டை அடைந்தது

இந்த நட்புறவுப் போட்டிக்கான டிக்கெட்டுகள் கடந்த ஜூலை 3 ஆம் திகதி வெளியிடப்பட்டு வெறும் இரண்டரை மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்தன. இந்த டிக்கெட்டுகளின் விலை 25 டொலர் தொடக்கம் 338 டொலர்கள் வரை இருந்தன.  

ஆர்ஜன்டீனா வென்ற போட்டியில் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை

கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரில் சிலி அணியை 2-1 என்ற கோல்…

இந்தப் போட்டியில் ரொனால்டோ விளையாடாததால் கோபமடைந்த சில ரசிகர்கள் மைதானத்தில் வைத்து ரொனால்டோவின் ஆர்ஜன்டீன போட்டியாளரான மெஸ்ஸியின் பெயரை கூறி கோசமிட்டனர்

இந்நிலையில் ஜுவான்டஸ் தமது ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கவில்லை என்று போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது

பல தென் கொரிய ரசிகர்களும் சமூக ஊடகங்களில் ரொனால்டோ மீது கோபத்தை வெளியிட்டு வருகின்றனர்

அவர் 60,000 ரசிகர்களை ஏமாற்றினார், எங்களை இழிவுபடுத்தினார் என்று ஒரு ரசிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்நான் இனியும் ரொனால்டோ ரசிகனல்லஎன்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்