விஸ்டன் விருதுக்கு கோஹ்லி, ராஷித் கான், மிதாலி தேர்வு

332

கிரிக்கெட்டின் பைபிள் என புகழப்படும் விஸ்டன் சஞ்சிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக விராத் கோஹ்லியும், சிறந்த வீராங்கனையாக மிதாலி ராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள T20 வீரருக்கான விருதை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ராஷித் கான் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

பெட் கம்மின்ஸின் உபாதையால் மாலிங்கவுக்கு மும்பை அணியில் வாய்ப்பு கிட்டுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய வேகப்பந்து

1889ஆம் ஆண்டு முதல் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இவ்விருது வழங்கப்படும். இதில், இந்தாண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லியும், இந்திய மகளிர் அணியின் தலைவி மிதாலி ராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2017இல் நடைபெற்ற அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 2,818 ஓட்டங்களைக் குவித்த கோஹ்லி, மூன்று இரட்டைச் சதங்கள் உள்ளடங்கலாக ஐந்து சதங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றிருந்ததோடு, இரட்டைச் சதம் தவிர்ந்த ஏனைய இரண்டு சதங்களைப் பெற்றபோது ஆட்டமிழக்காமலிருந்தார்.

2003ஆம் ஆண்டு முதல் பல பிரிவுகளாக வழங்கப்பட்டு வருகின்ற சிறந்த வீரருக்கான விருதுகளை இந்தியா சார்பாக முன்னதாக 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் முறையே விரேந்திர ஷேவாக்கும், 2010ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலி ராஜ் தெரிவாகியுள்ளார். கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்ற மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீராங்கனையாகவும் சாதனை படைத்தார்.

காயங்களால் இலங்கை அணியில் தொடரும் சோகம்

நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக முன்னணி வீரர்கள்

இதுதவிர, இவ்வாண்டு முதல் வழங்கப்படுகின்ற சிறந்த T20 வீரர் விருதை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ராஷித் கான் பெற்றுக்கொள்ளவுள்ளார். அண்மைக்காலமாக ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் அசத்தி வருகின்ற ராஷித் கான், அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக ஒரு நாள் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராக புதிய உலக சாதனை படைத்திருந்தார்.

இதேநேரம், உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியின் 3 வீராங்கனைகள் இவ்விருதுக்கு தேர்வாகி உள்ளனர். விஸ்டன் விருது பெறும் 5 பேரில் 4 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, உலகக் கிண்ணம் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் அன்யா ஷெர்ஷோபிள், அணியின் தலைவி ஹீதர் நைட், துடுப்பாட்ட வீராங்கனை நட்டாலி சிவர் ஆகியோரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீராங்கனை ஷாய் ஹோப், இங்கிலாந்து கவுண்டி அணியான எசெக்ஸின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி போர்ட்டர் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற போட்டிகளில் பிரகாசித்த வீராங்கனைகள் இந்த ஐவரில் தெரிவாகுவது குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, இவ்வாண்டு விஸ்டன் சஞ்சிகையின் அட்டைப் படத்தில் அன்யா ஷெர்ஷோபிள் இடம்பெற்றுள்ளார். விஸ்டன் சஞ்சிகையின் அட்டைப் படத்தில் பெண்னொருவர் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும். உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை அன்யா ஷெர்ஷோபிள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.