ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறிய கோஹ்லிக்கு அபராதம்

954
Virat-Kohli

தென்னாபிரிக்க அணியுடன் தற்போது நடைபெற்று வருகின்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது கிரிக்கெட் விளையாட்டின் நன்மதிப்பை மீறிய குற்றச்சாட்டடில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு போட்டி சம்பளத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கோணத் தொடரின் முதல் போட்டியில் புதிய மாற்றங்களுடன் இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு (2017)

தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியாதென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி ஆடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், நேற்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா 307 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணியின் தலைவர் கோஹ்லி 153 ஓட்டங்களை பெற்று புதிய சாதனையும் படைத்தார். அத்துடன், அணித் தலைவராக 8ஆவது தடவையாக 150 ஓட்ட மைல்கல்லையும் எட்டினார். இதனால் அணித் தலைவர் பதவியில் டொன் பிராட்மேனின் சாதனையை அவர் சமன் செய்தார்.

இதனையடுத்து தென்னாபிரிக்கா அணி தமது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. அவ்வணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ஓட்டங்களை எடுத்திருக்கும்போது திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சிறிது நேரத்தில் மழை நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கியது. அப்போது பௌண்டரி எல்லை மிகவும் ஈரப்பதமாக இருந்தது. இதனால் பந்து ஈரமானது. ஈரமான பந்தால் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய திணறினார்கள்.  

700 விக்கெட்டுகள், 7,000 ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்த டில்ருவன் பெரேரா

இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ருவன் பெரேரா, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களையும் 7,000 ஓட்டங்களையும் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஆகவே, விராட் கோஹ்லி மைதான நடுவர் மைக்கல் கோபிடம் புகார் அளித்தார். ஆனால் விராட் கோஹ்லியின் புகாரை நடுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த கோஹ்லி, பந்தை தரையில் வேகமாக வீசினார்.

பின்னர் 29ஆவது ஓவர் முடிவில் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய விராட் கோஹ்லி, டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை அழைத்துக் கொண்டு போட்டி நடுவர் கிறிஸ் போர்ட் இடம் முறையிட்டார்.

மைதான நடுவரிடம் வாக்குவாதம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக பந்தை தரையில் வீசியதும் ஐசிசியின் வீரர்கள் நன்னடத்தை விதிக்கு மாறானது என மைதான நடுவர் மைக்கேல் கொக் புகார் அளித்தார்.

இந்நிலையில், விராட் கோஹ்லி தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக விதிப்பதற்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்க வகை செய்யும் ஒரு டிமெரிட் புள்ளியும் (குறை மதிப்பு) வழங்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 24 மாதங்களுக்குள் மேலும் 4 குறை மதிப்புப் புள்ளிகளை கோஹ்லி பெற்றுக்கொண்டால், .சி.சியின் புதிய விதிமுறைகளின்படி, ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒரு நாள் அல்லது 2 T-20 போட்டிகளில் விளையாடுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்படும்.

முன்னதாக, கடந்த வருடம் இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது .சி.சியின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க