16 வருட சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

211
Image Courtesy - Zee News

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 16 வருடங்களாக முறியடிக்கப்படாத இந்திய அணியின் சாதனையை இன்று (27) முறியடித்துள்ளார். அவருடன் சேர்ந்து செடீஸ்வர் புஜாராவும் சதமடித்து ஓரே போட்டியில் இரண்டு வீரர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் ஆஸி. அணிக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று (26) பாக்சிங் டே (Boxing day) டெஸ்ட் போட்டியாக ஆரம்பமாகியது.

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. தனது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளை விடவும் அதிகூடிய ஓட்டத்தை இந்த போட்டியில் பதிவு செய்திருந்தது.

முதலாவது இன்னிங்சுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் மொத்தமாக 443 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன் போது இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் செடீஸ்வர் புஜாரா சதமடித்து அணியின் ஓட்டத்தை அதிகரிக்க காரணமாக இருந்தார். மறுமுனையில் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பக்கபலமாக இருந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார்.

அது மாத்திரமல்லாமல் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய மயங்க் அகர்வாலும் இந்திய அணிக்கு ஓட்ட எண்ணிக்கையை அதிகரிப்பதில் பக்க பலமாக இருத்தார்.

குறித்த முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின் போது இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அணித்தலைவருமான விராட் கோஹ்லி சாதனைகளுக்கு மேல் சாதனையாக மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு நடைமுறை ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி சார்பாக ராஹுல் ட்ராவிட் பெற்றிருந்த அதிகூடிய ஓட்டங்கள் (1137 ஓட்டங்கள்) என்ற சாதனையை இன்று (27) விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.  

2002 ஆம் ஆண்டு ட்ராவிட்டால் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை முறியடிப்பதற்கு விராட் கோஹ்லி எனும் வீரரினால் 16 ஆண்டுகள் தேவைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமல்லாமல் ஒரு நடப்பாண்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக ஓட்டங்களை பெற்ற சர்வதேச வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த வரிசையில் முதலிடத்தில் தென்னாபிரிக்க வீரர் கிரேம் ஸ்மித் திகழ்கின்றார். இதன் வரிசைப் பட்டியல் பின்வருமாறு,

  • கிரேம் ஸ்மித் (தென்னாபிரிக்கா) – 1212 ஓட்டங்கள் (2008)
  • வி.ஐ.வி ரிச்சட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) – 1154 ஓட்டங்கள் (1976)
  • விராட் கோஹ்லி (இந்தியா) – 1138 ஓட்டங்கள் (2018)
  • மொஹிந்தர் அமர்நாத் (இந்தியா) – 1137 ஓட்டங்கள் (2002)
  • அலஸ்டயர் குக் (இங்கிலாந்து) – 1061 ஓட்டங்கள் (2010)

இதேவேளை மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான செடீஸ்வர் புஜாரா இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் அவரும் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

67 டெஸ்ட் போட்டிகளில் 112 இன்னிங்சுகளில் விளையாடியுள்ள புஜாரா இந்த சதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 17 சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.

இதன் மூலம் இவர் 16 சதங்களுடன் இருந்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியின் சாதனையை முந்தியுள்ளார். இதேவேளை இந்திய வீரர் வீ.வீ.எஸ் லக்ஷ்மனின் சாதனையையும் தற்சமயம் சமன் செய்துள்ளார்.

தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன்

மேலும் ஒரே தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அத்துடன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதமடித்த 5 ஆவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (1999), விரேந்திர செவாக் (2003), விராட் கோஹ்லி (2014), அஜிங்கியா ரேஹானே (2014) ஆகியோர் உள்ளனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க