கொஹ்லி, விளியர்ஸ் மீண்டும் அசத்தல் – பெங்களூருக்கு அபார வெற்றி

1168
AB De Villiers and Virat Kohli

60 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 48ஆவது போட்டி நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி விராத் கொஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் தலைவர் விராத் கொஹ்லி முதலில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதன்படி களமிறங்கிய கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி முதல் விக்கட்டுக்காக வெறுமனே 14 ஓட்டங்களை மட்டுமே பகிர்ந்தது. ரொபின் உத்தப்பா 2 ஓட்டங்களோடு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து களத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பின் ஜோடி சேர்ந்த கவ்தம் கம்பீர் மற்றும் மனீஷ் பாண்டி ஜோடி 2ஆவது விக்கட்டுக்காக சிறந்த ஒரு இணைப்பாட்டதைப் பெற்றுக் கொடுத்தது. இவர்கள்  2ஆவது விக்கட்டுக்காக 88 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கவ்தம் கம்பீர் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அதன் பின் களம் புகுந்த அதிரடி வீரர் யூசுப் பதான் 6 ஓட்டங்களோடு ஆட்டம்  இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சகலதுறை வீரர் என்டர் ரசல் பெங்களூர் பந்து வீச்சாளர்களை நன்கு பதம் பார்த்தார். அவர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றார். இதற்கிணங்க நயிட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. நிதானமாகவும் விளாச வேண்டிய பந்துகளை  விளாசியும் ஆடிய மனீஷ் பாண்டி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றார்.  பெங்களூர் அணி சார்பாக பந்துவீச்சில் ஸ்ரீநத் அரவிந்த் 2 விக்கட்டுகளைக் கைப்பற்ற இக்பால் அப்துல்லாஹ் மற்றும் யுஸ்வேந்த்ரா சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.

டக்வொர்த் லீவிஸ் ஒரு குப்பை – ஸ்டீபன் ப்ளெமிங்

பதிலுக்கு 184 என்ற பாரிய இலக்குடன் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான க்றிஸ் கெயில் மற்றும் விராத் கொஹ்லி ஜோடி களம் இறங்கியது. கடந்த போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய க்றிஸ் கெயில் இப்போட்டியில் அபாரமாக விளையாடி விராத் கொஹ்லியோடு இணைந்து பெங்களூர் அணிக்கு எதிர்பார்க்கப்பட்ட சிறந்த வேகமான ஒரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தார். முதல் விக்கட்டுக்காக இந்த ஜோடி 45 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் இருக்கும் போது க்ரிஸ் கெயில் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 49 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சுனில்  நரேனின் பந்து வீச்சில் எல்.பி.டப்ளியு முறையில் ஆட்டம்  இழந்து வெளியேறினார்.

ஆனால் அதன் பின் விராத் கொஹ்ளியோடு ஜோடி சேர்ந்த 360o என்று வர்ணிக்கப்படும் .பி.டி.விளியர்ஸ் போட்டியை ஓவருக்கு ஓவர் பெங்களூர் பக்கம் திருப்பினார். மிக அபாரமாக விளையாடி நயிட் ரைடர்ஸ் பந்துவீச்சாளர்களை திணறச் செய்த இந்த ஜோடி இறுதிவரை சிறப்பாக விளையாடி 18.4 ஓவர்களில் பெங்களூர் அணி போட்டியை வெற்றி பெறச் செய்ய உதவியது. கடந்த போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த  .பி.டி.விளியர்ஸ் இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 59 ஓட்டங்களையும், இவ்வருட ,பி.எல் தொடரில் 3 சதங்களைப் பெற்ற பெருமைக்குரிய பெங்களூர் அணியின் தலைவர் விராத் கொஹ்ளி இப்போட்டியிலும் மிக மிக அற்புதமாக விளையாடி 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 75 ஓட்டங்களைப் பெற்றார். இவர்கள் இருவரும் ஆட்டம் இழக்காது 2ஆவது விக்கட்டுக்காக இறுதிவரை வீழ்த்தப்படாத 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தார்கள். இவர்களின் அசத்துதல் மூலம் பெங்களூர் அணி 8 பந்துகள் மீதமிருக்க 9 விக்கட்டுகளால் கொல்கத்தா அணியை தோல்வி அடையச் செய்தது.  நயிட் ரைடர்ஸ் அணி சார்பாகப் பந்து வீச்சில் வீழ்ந்த ஒரு விக்கட்டை சுனில் நரேன் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் தலைவர் விராத் கொஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.

ஐ.பி.எல் இலிருந்து வீடு திரும்புகிறார் மெக்ஸ்வல்

அத்தோடு இன்றைய போட்டியில் தான் பெற்ற 75 ஓட்டங்களோடு .பி.எல் கிரிக்கட் வரலாற்றின் ஒரு பருவகாலத்தில் ஒரு வீரரால் பெறப்பட்ட அதி கூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற பெருமையை விராத் கொஹ்லி தன் வசமாக்கினார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு க்றிஸ் கெயிலால் 733 ஓட்டங்களும், 2013ஆம் ஆண்டு மைக் ஹசியினால் 733 ஓட்டங்களும் பெறப்பட்டு இருந்தமையே தனி ஒரு வீரரால் ஒரு .பி.எல் பருவகால போட்டித் தொடரில் பெறப்பட்ட அதி கூடிய ஓட்டங்களாகக் காணப்பட்டது. தற்போது 9ஆவது .பி.எல் பருவ காலத்தில்  விராத் கொஹ்லி இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் வெறுமனே 12 போட்டிகளில் இந்த ஓட்டங்களைப் பெற்று இருப்பது அவர் கிரிக்கட் உலகில் தலைசிறந்த வீரர் என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்