உலகக் கிண்ணத்தில் கலக்க காத்திருக்கும் சகலதுறை வீரர்கள்

353

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. எதிர்வரும், 30ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இருதுறைகளிலும் வலுச்சேர்ப்பதற்கு பல முன்னணி வீரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.   

ஆஸி. வீரருக்கு பந்து வீசுவதற்கு பயிற்றுவித்த லசித் மாலிங்க

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (27) நடைபெற்ற உலகக் கிண்ண பயிற்சிப்…

உலகக் கிண்ணத்தை வெல்ல ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். இருப்பினும், ஒரு அணியின் வெற்றிக்கு சகலதுறை வீரர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இம்முறை உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறையிலும் கலக்க காத்திருக்கின்ற ஒருசில முக்கிய வீரர்கள் தொடர்பிலான விபரங்களை இந்தக் கட்டுரை வழங்கவுள்ளது.  

அன்ட்ரூ ரசல் (மேற்கிந்திய தீவுகள்)

அண்மைக்காலமாக டி-20 அரங்கில் அதிக வலுவுடன் பந்தை மைதானத்துக்கு வெளியே அடித்தாடுகின்ற திறமை படைத்த வீரர்களில் அன்ட்ரூ ரசல் முக்கிய வீரராக உள்ளார்.

நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தனியொரு துடுப்பாட்ட வீரராக பல்வேறு போட்டிகளில் வெற்றியை தேடிக் கொடுத்திருந்தார் இந்த அதிரடி மன்னன்.

சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான 31 வயதான அன்ட்ரூ ரசல், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அவ்வப்போது விளையாடி வருகின்ற ரசல், இதுவரை 52 ஒருநாள் போட்டிளில் விளையாடி 998 ஓட்டங்களையும், 65 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.  

அதுமாத்திரமின்றி, இப்பருவகாலத்தில் அவர் விளையாடிய 14 டி-20 போட்டிகளில் 58 சிக்ஸர்களுடன் 510 ஓட்டங்களைக் குவித்தார்

வேகப் பந்துவீச்சாளராகவும், சிறந்த களத்தடுப்பாளராகவும் விளங்குகின்ற ரசலின் அண்மைக்கால பெறுபேறுகள் இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும். அதேபோல, அவரது சிக்ஸர் மழை உலகக் கிண்ணத்திலும் தொடர்ந்தால் பல சாதனைகளை முறியடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

போட்டிகள் -52

ஓட்டங்கள் – 998

விக்கெட்டுகள் – 65

ஹர்திக் பாண்டியா (இந்தியா)

இந்தியாவின் அதிரடி சகலதுறை வீரராக வளர்ந்துவரும் 25 வயதான ஹர்திக் பாண்டியா, முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகின்ற பந்துவீச்சாளராகவும், எந்தவிதமான ஆடுகளத்திலும் ஓட்டங்களை குவிக்கின்ற திறன் படைத்த வீரராகவும் உள்ளார்.  

இவர் கடந்த காலங்களில் நடைபெற்ற ஒருசில முக்கியமான போட்டிகளில் இந்திய அணிக்காக தனது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் அதிக ஓட்டங்களையும் குவித்திருந்தார். 2017 சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 46 பந்துகளில் 76 ஓட்டங்களை விளாசியிருந்தார். அதேபோல, அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சென்னையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 83 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.  

மேலும், அவரைப் போல அதிரடியாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து பந்துவீச்சிலும் குறிப்பிடும்படி செயல்படும் வீரர் தற்போது இந்திய அணியில் இல்லை என்றே கூற வேண்டும். நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் போட்டித் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 91.00 என்ற சராசரியுடன் 402 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இம்முறை உலகக் கிண்ணத்திலும் ஹட்ரிக் எடுக்க எதிர்பார்க்கும் லசித் மாலிங்க

வயது அதிகரித்துச் செல்கின்ற போதிலும், இலங்கையின் வேகப்பந்து நட்சத்திரமான லசித் மாலிங்கவின் திறமை குறையவில்லை…

எனவே, தொடர்ந்து நல்ல போர்மில் ஹர்திக் பாண்டியா இருப்பதால் இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்காக பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டிகள் – 45

ஓட்டங்கள் – 731

விக்கெட்டுகள் – 44

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

தற்போது 27 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த வருடம் இரவு நேர களியாட்ட விடுதியில் சர்ச்சையில் சிக்கி, பல பிரச்சினைகளுக்குப் பின்னர் அணிக்கு திரும்பியதிலிருந்து துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் தன்னை மெருகேற்றி உள்ளார்.  அண்மைக்காலமாக இவரது களத்தடுப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அத்துடன் இம்முறை ஐ.பி.எல் தொடரில் எதிர்பார்த்தளவு பென் ஸ்டோக்ஸ் பிரகாசித்த தவறினாலும், ஒருநாள் போட்டிகளில் தேவையான நேரத்தில் ஓட்டங்களைக் குவித்து பந்துவீச்சிலும் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமாத்திரமின்றி, சொந்த மண்ணில் விளையாடுவது இவருக்கு மேலும் பலம் சேர்க்கும் என தெரிவிக்கப்படுகின்றது.  

போட்டிகள் -83

ஓட்டங்கள் – 2196

விக்கெட்டுகள் – 63

மார்கஸ் ஸ்டொனிஸ் (அவுஸ்திரேலியா)

அண்மைக்காலமாக அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக 29 வயதான மார்கஸ் ஸ்டொய்னில் விளங்குகிறார். நடுத்தர ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய இவர், இறுதியாக இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியின் கடைசி ஓவரில் யோர்கர், ஷோர்ட் போல் என வித்தியாசமான பந்துகளை வீசி , வெறும் 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். சூழ்நிலைக்கு ஏற்ப நுணுக்கமான துடுப்பாட்ட யுக்திகளை கையாண்டு ஓட்டங்களைக் குவிப்பதில் கைதேர்ந்தவராகவும் இவர் உள்ளார்.  

போட்டிகள் -33

ஓட்டங்கள் – 963

விக்கெட்டுகள் – 26

சகீப் அல் ஹசன் (பங்களாதேஷ்)

.சி.சியின் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சகீப் அல் ஹசன், இம்முறை உலகக் கிண்ணத்தில் அனுபவமிக்க சகலதுறை வீரராக களமிறங்கவுள்ளார். சுழல் பந்துவீச்சில் அணிக்குத் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது போல, துடுப்பாட்டத்தில் அவ்வப்போது ஓட்டங்களைக் குவித்து வருகின்றார்.  

எனவே, அவருடைய அனுபவம் இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணிக்கு மிகப் பெரிய உந்துசக்தியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

போட்டிகள் -198

ஓட்டங்கள் – 5,717

விக்கெட்டுகள் – 249

திசர பெரேரா (இலங்கை)

இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு அனுபவமிக்க வேகபந்துவீச்சு சகலதுறை வீரரான திசர பெரேரா, இக்கட்டான சூழ்நிலையில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்து வருகின்றார்.

உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள அணித் தலைவர்கள் பற்றிய சிறப்புப் பார்வை

கிரிக்கெட் உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகக்…

இவ்வருட முற்பகுதியில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் அதிரடி காட்டிய திசர பெரேரா, அதற்குப் பிறகு நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறினார். எனினும், இம்முறை உலகக் கிண்ணத்தில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை திறன்படச் செய்வார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

போட்டிகள் -154

ஓட்டங்கள் – 2147

விக்கெட்டுகள் – 170

கிளென் மெக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள அனுபவமிக்க சகலதுறை வீரர்களில் ஒருவராக கிளென் மெக்ஸ்வெல் விளங்குகிறார். அண்மைக்காலமாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தடுமாறி வந்த மெக்ஸ்வெல், இறுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கெதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறையிலும் பிரகாசித்திருந்தார்.

போட்டிகள் -100

ஓட்டங்கள் – 2700

விக்கெட்டுக்கள் – 50

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<