உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கவிந்து இஷான் சந்தேகம்

284

லாவோஸ் அணிக்கு எதிரான முதல் நட்புறவு போட்டியின்போது இலங்கை கால்பந்து அணி வீரர் கவிந்து இஷானின் இடது தோள்பட்டை பகுதியில் உபாதை ஏற்பட்டது. இதன் காரணமாக மாகாவு அணிக்கு எதிரான எதிர்வரும் பிஃபா உலகக் கிண்ண மற்றும் AFC ஆசிய கிண்ண பூர்வாங்க தகுதிகாண் முதல் கட்டப் போட்டியில் அவர் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

லாவோசுடனான இரண்டாவது மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

இலங்கை மற்றும் லாவோஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது நட்புறவு கால்பந்து…

கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியின் முதல் கட்ட ஆட்டத்தில் இம்மாதம் (ஜூன்) 6ஆம் திகதியும் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் 11 ஆம் திகதியும் மகாவு அணியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. இதற்கான முக்கிய தயார்படுத்தலாகவே இலங்கை அணி லாவோஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

லாவோஸுடனான முதல் நட்புறவுப் போட்டியில் 85 ஆவது நிமிடம் வரை முன்னிலை பெற்றிருந்த இலங்கை, கடைசி நிமிடங்களில் கொடுத்த கோல்கள் மூலம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் 4ஆவது நிமிடத்தில் கவிந்து இஷானின் தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டது. இலங்கை அணியின் உப தலைவரான அவர் பந்தை பெறும் போராட்டத்தின்போது இரு லாவோஸ் வீரர்களுக்கு இடையே சிக்கியதாலேயே இந்த உபாதை ஏற்பட்டது.

கால்பந்து உலகை வியக்க வைக்கவுள்ள 2022 உலகக் கிண்ணம்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி…

அவரது திறமை மற்றும் அனுபவம் அணிக்கு தேவையான நிலையில் தகுதிகாண் சுற்றின் முதல்கட்ட போட்டியில் சுகம்பெற்று களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் அந்தப் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு குறைவான காலமே இருக்கும் நிலையில் அவர் மீண்டு வருவதில் சந்தேக நீடிக்கிறது.

விமானப்படை விளையாட்டுக் கழக வீரரான கவிந்து இஷான் இலங்கை தேசிய அணிக்காக நீண்ட காலம் விளையாடி வரும் ஒருவர். இந்த அனுபவத்தின் காரணமாக, அணியின் தலைவர் சுஜான் பெரேராவுக்கு பங்களிப்பு வழங்க துணைத் தலைவராக கவிந்து இஷான் அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<