தொடர்ச்சியாக இரண்டு முறை டயலொக் லீக் போட்டிகளில் சம்பியன் மற்றும் சென்ற வருடத்தில் நடைபெற்ற 3 தொடரினதும் வெற்றியாளர்களான, மலையகத்தைச் சேர்ந்த கண்டி கழகமானது மறுமுறையும் தனது வெற்றி ஓட்டத்தைத் தொடர இவ்வருடமும் காத்திருக்கிறது.

கண்டி விளையாட்டுக் கழக பகுதி

19 ஆம் நூற்றாண்டிலே, இலங்கை வந்த பிரித்தானியர்கள் முதன் முதலில் கண்டி கழகத்தை ஒரு ஹொக்கி கழகமாகவே உருவாக்கினர். பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரக்பி அறிமுகப்படுத்தப்பட்டதோடு, நித்தவல மைதானத்தின் உருவாக்கத்துடன் அப்பகுதியில் இக்கழகம் பிரபலம் பெற்றது

1992 ஆம் ஆண்டு க்ளிபர்ட் கிண்ண வெற்றியுடன் ஆரம்பமான கண்டி அணியின் பொற்காலம் 25 ஆண்டுகளாக மாறாது உள்ளது. இதுவரையில் 17 முறை லீக் வெற்றியாளர்களாகவும், 20 முறை க்ளிபர்ட் கிண்ண சம்பியனாகவும் கண்டி கழகம் காணப்படுகின்றது. 2000 ஆம் ஆண்டு லீக் கிண்ணத்தை வென்ற கண்டி கழகமானது, 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 12 முறை லீக் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

கடினமான இரண்டு வருடங்களின் பின்னர், ஷோன் விஜேசிங்க 2013/2014 ஆம் வருட போட்டிகளில் பாசில் மரிஜா மற்றும் ரொஷான் வீரரத்னவின் உதவியுடன் மீண்டும் 3 தொடரிலும் வெற்றியீட்டினார். கடந்த வருடம் கண்டி கழகமானது  அணிக்கு 7 பேர் கொண்ட போட்டிகள், லீக் மற்றும் க்ளிபர்ட் ஆகிய மூன்று தொடரிலும் வெற்றிபெற்றது.

தலைவராக நியமிக்கப்பட்டார் ரொஷான் வீரரத்ன

சென்ற வருடம் பாசில் மரிஜாவின் உபாதையின் போது அணியினை வழிநடத்தி வெற்றியின் பாதையில் அழைத்து சென்றவர் ரொஷான் வீரரத்ன. பழைய கிங்ஸ்வூட் கல்லூரி அணி, இலங்கை அணி மற்றும் இலங்கை அணிக்கு 7 பேர் கொண்ட அணிகளின் வீரரான இவருக்கு தலைமைத்துவம் ஒன்றும் புதிதல்ல. மேலும் நட்சத்திர வீரர்கள் பலரை அணி உள்ளடக்கி இருப்பது அவருக்கு பக்கபலமாகும் .

2008 ஆம் ஆண்டு கண்டி கழகம் சார்பாக முதன் முதலில் விளையாடிய இவ் இளைய வீரரத்ன சகோதரர் தனது திறமையின் காரணமாக இலங்கை அணியிலும் இடம் பிடித்தார்.

முக்கிய வீரர்கள்

இம்முறை புதிதாக இணைந்த தனுஷ்க ரஞ்சன் மற்றும் காஞ்சன ராமநாயக்க கண்டி அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளனர். இலங்கை அணி வீரரான தனுஷ்க ரஞ்சன் தனது சிறப்பான ஆட்டத்தால் கண்டி அணியின் பின் வரிசையை கண்டிப்பாகப் பலப்படுத்துவார்.

Dialog Rugby League Hub

சென்ற வருடம் வெளிக்காட்டிய திறமையினால் இலங்கை அணியில் இடம் பிடித்த தனுஷ் தயான் இவ்வருடமும் விங் நிலையில் தமது திறமையை வெளிக்காட்டவுள்ளார்.

இசிபதன அணியின் பழைய வீரரான கானுக திஸ்ஸானாயக கண்டி அணியில் இவ் வருடம் முதன் முதலாக விளையாடவுள்ளார். முன் வரிசையில் பலம் மிக்க வீரரான இவர் மூத்த வீரர்களான கிஷோர் ஜெஹான், தமித் திஸ்ஸானாயக மற்றும் பியுமால் மச்சநாயக ஆகியோருடன் இணைந்து கண்டி அணியின் முன் வரிசையைப் பலப்படுத்தவுள்ளார்.

ஜேசன் திஸாநாயக்க, ஸ்ரீநாத் சூரியபண்டார, அனுருத்த வில்வார ஆகியோர் காயம் காரணமாக முதல் வாரத்தில் விளையாடாத நிலையில், கண்டி கழகமானது வீரர்கள் காயம் அடைவது தொடர்பான விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பயிற்றுவிப்பாளர்கள்

சென்ற வருட பயிற்றுவிப்பாளரான ஷோன் விஜேசிங்க இம்முறையும் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகிறார். சென்ற வருடம் கண்டி அணியை சிறப்பாக வழிநடத்திய இவ் பழைய கண்டி அணி வீரர் இம்முறையும் கண்டி அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வார் என்பதில் ஐயமில்லை.

பழைய கண்டி அணி வீரர் நாலக வீரக்கொடி துணை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றவுள்ளதோடு, கபில டி சில்வா முகாமையாளராக கடமையாற்றுகிறார்.

2016/17ஆம் ஆண்டுக்கான கண்டி அணி

[a-team-showcase-vc ats_team_id=”2138961″]