வருடாந்த ஒரு நாள் போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி இலகு வெற்றி

141
Richmond College vs Mahinda College

ரிச்மண்ட் கல்லூரி மற்றும் மஹிந்த கல்லூரி அணிகள் மோதிக்கொள்ளும் வருடாந்த ஒரு நாள் போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி அணி 8 விக்கெட்டுக்களினால் இலகு வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.  அதன்படி, பொறுப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய நவோத் பரணவிதான 66 ஓட்டங்களைக் குவித்து மஹிந்த கல்லூரிக்கு நம்பிக்கையளித்தார்.

எனினும் சிறப்பாக பந்து வீசிய ரிச்மண்ட் கல்லூரியின் பந்து வீச்சாளர்கள் எதிரணியின் ஏனைய விக்கெட்டுக்களை வேகமாக வீழ்த்த மஹிந்த கல்லூரி அணியை 169 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.

அவுஸ்திரேலிய தொடரில் இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட அணிக்கு தலைவராக கமிந்து மெண்டிஸ்

சந்துன் மெண்டிஸ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் அவிந்து தீக்ஷண 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்த, மஹிந்த கல்லூரி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணியை மீட்டெடுப்பதற்காக ஓரளவு சிறப்பாக செயற்பட்ட நவோத் பரணவிதான தவிர பிரமீத் ஹன்சிக (31) மாத்திரமே மஹிந்த கல்லூரி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார்.

இதன்படி 170 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பெடுத்தாடி எதிரணியை நிலைகுலையச் செய்தது. 19 வயதிற்குட்பட்ட இலங்கை கனிஷ்ட அணியின் தலைவரான கமிந்து மெண்டிஸ் அபாரமாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 84 ஓட்டங்கள் குவிக்க, ரிச்மண்ட் கல்லூரியானது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெறும் 33.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.

[rev_slider dfcc728]

இதன்மூலம் இந்த வருடத்திற்கான இரு பாடசாலைகளுக்கும் இடையிலான ஒரு நாள் சமரின் கிண்ணத்தை ரிச்மண்ட் கல்லூரி தன்வசப்படுத்திக்கொண்டது.

அவருக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கிய ஆதித்ய சிறிவர்தன 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதன்படி ரிச்மண்ட் கல்லூரி 8 விக்கெட்டுக்களினால் இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி: 169 (46.4) – நவோத் பரணவிதான 66, பிரமீத் ஹன்சிக 31,  சந்துன் மெண்டிஸ் 3/30, அவிந்து தீக்ஷண 2/29

ரிச்மண்ட் கல்லூரி: 172/2 (33.3) – கமிந்து மெண்டிஸ் 84*, ஆதித்ய சிறிவர்தன 38

முடிவு: ரிச்மண்ட் கல்லூரி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி