இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு

160
Junior National Championship

பெரும்பாலான சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்ள வருடமாக 2018 அமையவுள்ளது. எனவே இவ்வாண்டு இலங்கை வீரர்களுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அதிக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. அதிலும் குறிப்பாக, கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்கள் இவ்வருடம் பல சர்வதேச மெய்வல்லுனர் தொடர்களில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

தேசிய இளையோர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

56ஆவது இளையோர் (கனிஷ்ட) மெய்வல்லுனர் விளையாட்டுப்…

எனினும், முன்னதாக இத்தொடரினை ஏற்பாட்டாளர்கள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்திருந்த போதிலும், சுகததாஸ சுவட்டு மைதானத்தின் நிர்மானப் பணிகள் நிறைவுபெறாத காரணத்தால், அதனை ஒத்திவைப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து, சுகததாஸ விளையாட்டரங்கின் நிர்வாகத்தினரின் உறுதிப்படுத்தலை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக நேற்று(22) நடைபெற்ற இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது.

எனினும், இத்தொடரினை மீண்டும் ஏப்ரல் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்டாளர்கள் இன்று அறிவித்தனர்.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுகததாஸ சுவட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் எதிர்பார்த்த காலத்திற்குள் முழுமையாக பூர்த்தியாகாத காரணத்தினால் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரை சித்திரை புதுவருடத்திற்குப் பிறகு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையும், ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டிகள் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையும் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

Photos: Athletic Junior National Championship – Media Briefing

ThePapare.com | Viraj Kothalawala | 22/03/2018 Editing…

இந்நிலையில், 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை இலங்கை ஒட்டோமொபைல் சங்கத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில்,

”இப்போட்டித் தொடரானது ஒவ்வொரு வருடமும் கனிஷ்ட வீரர்களுக்காக நடத்தப்படுகின்ற முக்கியமான தொடராகும். இதற்கு வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் அதிகளவான வீரர்கள் கலந்துகொள்கின்றனர். எனவே, கடந்த காலங்களைப் போல போட்டித் தன்மை கொண்ட போட்டித் தொடராக இது அமையவுள்ளது” என்றார்.

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து 2 ஆயிரத்து 520 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். 16, 18, 20 மற்றும் 23 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் 16 மற்றும் 18 வயதுப் பிரிவுகளில் அதிகளவான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், 20 மற்றும் 23 வயதுப் பிரிவுகளில் வீராங்கனைகளின் பங்குபற்றல் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதுதொடர்பில் பாலித பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், ”குறிப்பிட்ட ஒருசில போட்டிகளுக்கு மாத்திரம் அதிகளவான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதால், தகுதிச் சுற்றுக்களை நடத்திய பிறகு இறுதிப் போட்டியை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அடைவுமட்டங்களை பூர்த்தி செய்கின்ற வீரர்களின் காலப்பதிவுகளை மாத்திரம் பதிவுசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வீராங்கனைகளின் பங்குபற்றலானது தொடர்ந்து குறைவடைந்து வருகின்றமை இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிய நகர்வல ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்களுக்கு ஏமாற்றம்

ஆசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டித்..

இதேநேரம், இப்போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள் எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஜப்பானின் புஜி நகரில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் என்பவற்றில் பங்கேற்கபதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ”தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் 20 வயதுக்குட்பட்ட வீரர்கள் மாத்திரம் தான் கலந்துகொள்ள முடியும். எனினும், 100, 400 மீற்றர், 4X100 அஞ்சலோட்டம், 3,000 மீற்றர் தடைதாண்டல், பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டம் போன்ற போட்டிகளில் மாத்திரம் 16 மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுதுகின்ற வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், போட்டித் தொடரின் இறுதி நாளன்று விசேட தெரிவுப் போட்டியொன்றை அவர்களுக்காக நடத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

அத்துடன், இப்போட்டித் தொடரின் மூலம் தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்காக தெரிவு செய்யப்படுகின்ற வீரர்களுக்கு கொழும்பில் தங்கியிருந்து விசேட பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

மைதான நிகழ்ச்சிகளுக்கான அடைவு மட்டங்கள்

ஆண்கள் பிரிவு

போட்டி 20 வயதின் கீழ் 18 வயதின் கீழ் 16 வயதின் கீழ்
உயரம் பாய்தல் 1.85 M 1.75 M 1.60 M
கோலூன்றிப் பாய்தல் 3.40 M 3.40 M
நீளம் பாய்தல் 6.35 M 6.15 M 5.90 M
முப்பாய்ச்சல் 13.00 M 12.50 M 11.00 M
குண்டு போடுதல் 10.50 M 11.50 M 11.50 M
பரிதி வட்டம்             36.00 M 34.00 M 36.00 M
ஈட்டி எறிதல்       48.00 M 46.00 M 45.00 M

பெண்கள் பிரிவு

போட்டி 20 வயதின் கீழ் 18 வயதின் கீழ் 16 வயதின் கீழ்
உயரம் பாய்தல் 1.50 M 1.45 M 1.40 M
கோலூன்றிப் பாய்தல் 2.60 M 2.40 M
நீளம் பாய்தல் 4.90 M 4.80 M 4.60 M
முப்பாய்ச்சல் 11.00 M 10.50 M 10.00 M
குண்டு போடுதல் 10.00 M 10.00 M 8.50 M
பரிதி வட்டம்             26.00 M 24.00 M 22.00 M
ஈட்டி எறிதல்       28.00 M 26.00 M 25.00 M