ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் இலங்கை அணியின் முகாமையாளர் பதவிநீக்கம்

115

ஜப்பானின் கிபு நகரில் இம்மாதம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட அனில் வீரசிங்கவை பதவிநீக்கம் செய்ய விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம்

வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த…

இதனையடுத்து, குறித்த போட்டித் தொடரில் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர் அணியின் முகாமையாளராகவும், பயிற்சியாளராகவும் சுசன்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த மாதம் நிறைவுக்கு வந்த மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை அணியின் முகாமையாளராக அனில் வீரசிங்க கடமையாற்றினார்.

எனினும், குறித்த போட்டித் தொடரிற்காக கொழும்புக்கு வருகை தந்து விடுதியில் தங்கியிருந்த கனிஷ்ட வீரர்களை அவ்வப்போது மனம் புண்படும் வகையில் திட்டி மோசமாக நடந்துகொண்டதாகவும், தனது கடமைகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர்மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து மெய்வல்லுனர் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் இறுதி அறிக்கை இரு தினங்களுக்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரிற்கான இலங்கை குழாத்தின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட அனில் வீரசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக இலங்கையின் அனுபவமிக்க பயிற்சியாளர்களுள் ஒருவரான சுசன்த பெர்னாண்டோவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம், எதிர்வரும் 5ஆம் திகதி ஜப்பானை நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மறுநாளான 6ஆம் திகதிதான் இலங்கை குழாம் ஜப்பானை சென்றடையவுள்ளது.

ஆனாலும் குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்கள் நேற்று (31) கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். எனினும், ஜப்பான் தூதுவராலயத்தினால் வெளியிடப்படுகின்ற அவர்களுக்கான விஸா இதுவரை கிடைக்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இலங்கை வீரர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி ஜப்பானை நோக்கி புறப்படுவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பயண களைப்புடன் எந்தவொரு பயிற்சிகளையும் முன்னெடுக்காமல் 7ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் நாள் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு பங்குபற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவையனைத்துக்கும் இலங்கை குழாத்தின் முன்னாள் முகாமையாளர் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டாலும், அவரது நடத்தை குறித்து ஏற்பட்ட சர்ச்சை மற்றும் பதவிநீக்கம் உள்ளிட்ட விடயங்களினால் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களுக்கு அசாதாரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளத்தில் நடத்துவதற்கு தீர்மானம்

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய…

எது எவ்வாறாயினும், இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 12 இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் இலங்கை அணிக்காக பதக்கங்களை வென்று கொடுக்கவுள்ள முக்கிய வீரர்களாக அருண தர்ஷன (200, 400 மீற்றர்), அமாஷா டி சில்வா (100, 200 மீற்றர்) மற்றும் டிலிஷி ஷியாமலி குமாரசிங்க (800 மீற்றர்) ஆகியோர் விளங்குகின்றனர்.

அத்துடன், இம்முறை போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் நான்கு தர 400 அஞ்சலோட்டத்திற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் என வெவ்வேறு அணிகள் பெயரிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

எனவே, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் தொடர் வரலாற்றில் இதுவரை காலமும் நடைபெற்ற 17 அத்தியாயங்களில் பங்கேற்றிருந்த இலங்கை அணி, நான்கு தங்கங்கள், பத்து வெள்ளிப் பதக்கங்களையும், ஆறு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.