பல சாதனைகளைப் பதிந்த வோர்னர் – பெயார்ஸ்டோவின் இணைப்பு

143
IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் (RCB) அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வோர்னர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோர் சாதனை இணைப்பாட்டத்தை பகிர்ந்துள்ளனர்.

Video – உலகக்கிண்ணம் நெருங்கும் நிலையில் மாலிங்க ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது சரியா? தவறா? – Cricket Kalam 10

தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த….

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் பணிப்பின் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 231 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. இதில், ஆரம்ப ஜோடியாக களமிறங்கிய டேவிட் வோர்னர் (100*) மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் (114) இருவரும் சதம் கடந்திருந்தனர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்படி, பெங்களூர் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

வோர்னர் மற்றும் பெயார்ஸ்டோவின் சாதனை

ஒருவருட தடைக்கு பின்னர் இம்முறை ஐ.பி.எல். தொடரில் களமிறங்கியுள்ள டேவிட் வோர்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம் மற்றும் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 254 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இவருடன் துடுப்பெடுத்தாடி வரும் ஜொனி பெயார்ஸ்டோவும் கடந்த மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடி 198 ஓட்டங்களை குவித்துள்ளார். இவ்வாறு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர்கள், நேற்றைய போட்டியில் முதல் விக்கெட்டுக்காக 185 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர்.

இவர்களின் இந்த இணைப்பாட்டம் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒட்டுமொத்த அதிகூடிய இணைப்பாட்டங்களின் வரிசையில் 6வது இடத்தையும் பிடித்துள்ளது. ஐ.பி.எல். தொடரை பொருத்தவரை 2016ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோஹ்லி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்ட 229 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக உள்ளது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் மிகப்பெரிய வெற்றி

பெங்களூர் அணிக்கு எதிராக நேற்றைய தினம் ஹைதராபாத் அணி பெற்றுக்கொண்ட வெற்றி, அந்த அணி ஓட்டங்கள் (118 ஓட்டங்கள்) அடிப்படையில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக பதிவாகியுள்ளது.

ரிஷப் பாண்டிடம் கிரிக்கெட் கற்றுக்கொண்ட ஒலிம்பிக் நாயகன்

இந்தியாவுக்கு முதற்தடவையாக அண்மையில் ….

இதற்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஹைதரபாத் அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. குறித்த வெற்றிதான் அவர்களின் மிகப்பெரிய வெற்றியாக பதிவாகியிருந்தது. இந்த சாதனையை ஹைதராபாத் அணி தற்போது கடந்துள்ளது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிகூடிய ஓட்டம்

நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 231 ஓட்டங்களை குவித்ததன் ஊடாக ஐ.பி.எல். வரலாற்றில் அந்த அணி தங்களுடைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்துள்ளது. இதற்கு முன்னர் 2017ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பெற்ற 209/3 ஓட்டங்கள்  அந்த அணியின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<