ஜோன் டார்பட் விளையாட்டு விழாவில் வடக்கு கிழக்கிற்கு இரண்டு தங்கம், மூன்று வெள்ளி

179
Snr Tarbet Day 01 article

பாடசாலை வீர வீராங்கனைகள் பங்குகொள்ளும் இலங்கையின் மிகவும் பழமை மிக்க தடகள போட்டித் தொடரான ஜோன் டார்பட் விளையாட்டு விழா 85 ஆவது முறையாக கடந்த 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெற்றது.

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் 13 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன், மகளிர் பிரிவில் ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் ஆடவர் பிரிவில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன.

110m தடை தாண்டல் போட்டியை 14.06 வினாடிகளில் நிறைவு செய்த புனித ஜோசப் கல்லூரியின் ஷெஹான் காரியவசம் மற்றும் தூரம் பாய்தல் போட்டியில் 5.98 மீற்றர் தூரத்தை பதிவு செய்த தர்மாசோக கல்லூரியின் ரித்மா நிஷாதி முறையே விளையாட்டு விழாவின் சிறந்த வீரராகவும் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மொத்த புள்ளிகளின் அடிப்படையில் சம்பியன் பட்டம் வென்ற பாடசாலைகள்

மகளிர் பிரிவு

  • மூன்றாம் இடம்  – லைசியம் சர்வதேச பாடசாலை – 76 புள்ளிகள்
  • இரண்டாம் இடம் – சுமணா பெண்கள் பாடசாலை, இரத்தினபுரி – 92 புள்ளிகள்
  • முதலாம் இடம் – ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி, வலல – 253 புள்ளிகள்

ஆடவர் பிரிவு

  • மூன்றாம் இடம் – ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி, வலல – 130 புள்ளிகள்
  • இரண்டாம் இடம் – புனித பெனடிக்ட் கல்லூரி – 133 புள்ளிகள்
  • முதலாம் இடம் – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு – 138 புள்ளிகள்

வடகிழக்கு வீர வீராங்கனைகள் பெற்ற வெற்றிகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஐந்து இளம் வீர வீராங்கனைகள் பதக்கங்களை வென்று தமது பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தங்கப் பதக்கம்

  • புவிதரன் – கோலுன்றிப் பாய்தல் (U18) – சாவகச்சேரி இந்துக் கல்லூரி
  • டிலக்ஷன் – கோலுன்றிப் பாய்தல் (U20) – தெல்லிப்பளை மஹாஜன கல்லூரி

வெள்ளிப் பதக்கம்

  • பானுஜன் – கோலுன்றிப் பாய்தல் (U18) – சாவகச்சேரி இந்துக் கல்லூரி
  • பிரகாஷ்ராஜ் – தட்டெறிதல் (U20) – பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி
  • உதயவாணி ஈட்டி எறிதல் (U20) – பட்டித்திடல் மகா வித்தியாலயம்