எவரெஸ்ட் மலையை தொட்டார் ஜொஹான்

163

எவரெஸ்ட் மலை உச்சியை இலங்கை நேரப்படி நேற்று (22) அதிகாலை 5.40 மணிக்கு தொட்ட ஜொஹான் பீரிஸ், உலகின் உயரமான மலை உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையராக சாதனை படைத்தார். அவர் தற்போது மலை உச்சியில் இருந்து கீழிறங்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைய காத்திருக்கும் இரண்டாவது இலங்கையர்

உலகின் மிக உயரமான மலைச் சிகரமாக விளங்குகின்ற எவரெஸ்ட் சிகரத்தை …

எவரெஸ்ட் மலையை தொட்ட இலங்கையின் முதலாமவரான ஜயன்தி குரு உதும்பலவின் 2016 ஆம் ஆண்டு பயணத்தில், அவருக்கு உதவியாக ஜொஹானும் பங்கேற்றிருந்தார். எனினும், அவரது ஒட்சிசன் தொட்டி சரியாக இயங்காததை அடுத்து மலையுச்சியை எட்டுவதற்கு 440 மீற்றர்கள் தூரம் இருக்கும் நிலையில் வேதனையோடு திரும்பினார்.

அந்தக் கவலை காரணமாக தான் தொடங்கியதை முடிக்கும் இலட்சியத்துடன் ஜொஹான் கடந்த ஆண்டு முழுவதும் பயிற்சிகளில் ஈடுபட்டார். மீண்டும் மலையேறும் தனது முயற்சி பற்றிய அறிவிப்பை அவர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியிட்டதோடு ‘ஜொஹானுடன் எவரெஸ்ட் ஏறுவோம்’ என்ற பிரசாரத்திலும் ஈடுபட்டு பொதுமக்களையும் தனது பயணத்தில் பங்கேற்கச் செய்தார். இதற்காக வெறும் 100 ரூபா அறவிடப்பட்டது.

கடந்த ஏப்ரல் ஆரம்பத்தில் இலங்கையில் இருந்து புறப்பட்ட ஜொஹான் எவரெஸ்ட் மலை அடித்தள முகாமில் அதிக நேரத்தை செலவிட்டார். இதன்போது மலையேற்றம் மற்றும் இறக்கத்தின்போது அதற்கான சூழலுக்கு முகம்கொடுப்பதற்கான ‘சுழற்சிகள்’ என்று அழைக்கப்படும் பல பயிற்சிகளையும் பூர்த்தி செய்தார்.

கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளில் இராணுவ – கடற்படை அணிகள் அபாரம்

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும், சன்குவிக் லங்கா நிறுவனமும்…

கடந்த மே மாதம் 19 ஆம் திகதி அந்த அடித்தள முகாமில் இருந்து விடைபெற்ற ஜொஹான்,  23 ஆம் திகதி மலையுச்சியை அடைவதற்கு திட்டமிட்டபோதும் காலநிலை மாற்றங்கள் காரணமாக அவரால் முன்கூட்டியே மலையுச்சியை தொட முடிந்துள்ளது.  

ஜொஹான் தற்போது மலையில் இருந்து இறங்க ஆரம்பித்திருப்பதோடு அது மலையேறுவதை விடவும் கடினமானது என்று கருதப்படுகிறது. அவர் அடித்தள முகாமை அடைவதற்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஜொஹான் விடாமுயற்சியின் மூலம் பெற்ற இந்த சாதனையை ஒட்டி ThePapare.com மகிழ்ச்சி அடைவதோடு அவர் பாதுகாப்பாக மலையில் இருந்து இறங்குவதற்கு பிரார்த்திக்கிறது. ஜொஹானின் பயணத்தின் புதிய தகவல்களை தெரிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்.  

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…