இங்கிலாந்து அணியில் விளையாடவுள்ள மே.தீவுகள் வீரர்

1745

மேற்கிந்திய தீவுகளில் பிறந்து இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்துள்ள இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர், அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் மற்றும் ஆஷஷ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பினை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்படுத்தியுள்ளது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 55

இலங்கையை சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு …..

வெளிநாட்டு வீரர்கள் இங்கிலாந்து தேசிய அணியில் விளையாடுவதற்கு குறைந்தது 7 வருடங்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி மூன்று வருடங்களாக குறைத்ததிருக்கும் பட்சத்திலேயே ஜொப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து தேசிய அணியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து அணியில் விளையாடுவதற்கான காலவரையரையை குறைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (29) லோர்ட்ஸில் நடைபெற்ற பணிப்பாளர் சபை சந்திப்பின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜொப்ரா ஆர்ச்சர் (23) மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸில் பிறந்து, மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடியிருந்தார். எனினும், கடந்த 2015ம் ஆண்டு கௌண்டி அணியான சசெக்ஸில் இணைந்த அவர், இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.

எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அப்போதைய சட்டத்தின் படி, ஜொப்ரா ஆர்ச்சர் 7 வருடங்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் எனவும், 2022ம் ஆண்டுக்கு பின்னரே இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், தற்போது 7 வருடங்கள் என்ற காலவரையரை 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதால், ஆர்ச்சர் எதிர்வரும் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை உத்தேச அணி

இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில்….

இதன்படி, ஆர்ச்சர் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இங்கிலாந்து தேசிய அணியில் விளையாட தகுதிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆச்சர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் T10 லீக்கில் விளையாடி வருவதுடன், இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக்பேஷ் லீக்குக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து அணியுடன் அவரால் இணைய முடியும் என கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜொப்ரா ஆர்ச்சர், சர்வதேச T20 தொடர்களில் விளையாடி வருவதுடன், இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியிர் லீக் தொடரில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக 8 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<