நடுவரின் தீர்ப்பை அவமதித்ததாக ஜோ ரூட் மீது குற்றச்சாட்டு

573

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, நடுவர்களின் தீர்ப்பை அவமதித்த குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை சிதைவுப் புள்ளியொன்றை வழங்கியுள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணியின் டில்ருவான் பெரேராவுக்கு ஆட்டமிழப்பை வழங்கவில்லை என்ற காரணத்துக்காக, நடுவரின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என ஜோ ரூட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

“46 ஓட்டங்கள் முன்னிலையானது அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” – திமுத் கருணாரத்ன

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய…

நேற்றைய தினம் இங்கிலாந்து அணியின் 76 ஆவது பந்து ஓவரை மொயீன் அலி வீசிய நிலையில், பந்து நேரடியாக டில்ருவான் பெரேராவின் காலில் பட்டு, களத்தடுப்பாளரிடம் சென்றது. குறித்த பந்தை பிடியெடுத்தவுடன் இங்கிலாந்து வீரர்கள் நடுவர் மெரைஸ் எரஸ்மஸிடம் ஆட்டமிழப்பை கோரினர். எனினும் நடுவர், ஆட்டமிழப்பை வழங்க மறுத்தார். இதனால் ஏமாற்றமடைந்த ஜோ ரூட், ஆடுகளத்தையும், பந்தையும் காலால் உதைத்ததுடன், நடுவரின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தலையை அசைத்தார்.

“46 ஓட்டங்கள் முன்னிலையானது அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” – திமுத் கருணாரத்ன

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய…

இதனை அவதானித்த நடுவர்கள், ஆடுகளத்தை சேதப்படுத்தியமை மற்றும் நடுவர்களின் தீர்ப்பை அவமதித்தமை என்ற ரீதியில் அவர் மீது குற்றம் சுமத்தினர். ஆட்டநேர முடிவின் பின்னர் போட்டி மத்தியஸ்தர் எண்டி பைகிரொப்ட்டின் விசாரணையில் ஜோ ரூட், தான் குற்றமிழழைக்கவில்லை என கூறியிருந்தார். எனினும் அதனை ஏற்க மறுத்த எண்டி பைகிரொப்ட் அவருக்கு ஐ.சி.சி விதிமுறைப்படி ஒரு சிதைவுப் புள்ளியை வழங்கினார்.

ஐ.சி.சி விதிமுறைப்படி ஜோ ரூட் முதலாம் தர குற்றத்தை புரிந்திருந்தமையால், அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக அதிகாரபூர்வ எச்சரிக்கை விடுக்க முடியும் என்பதுடன், அதிக பட்ச தண்டனையாக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீத அபராதத் தொகையுடன், ஒன்று அல்லது இரண்டு சிதைவுப் புள்ளிகளை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<