புனிதர்களின் கால்பந்து சமர் சமநிலையில் முடிவு

81

கொழும்பு CR&FC மைதானத்தில் இன்று (25) நடைபெற்ற புனித ஜோசப் மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான 25 ஆவது “புனிதர்களின் கால்பந்து சமர்” 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவை பெனால்டி உதைகள் மூலம் தீர்மானிப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் முயன்றபோதும் போதிய வெளிச்சமின்மை காரணமாக முடியாமல்போனது.

ரியல் மெட்ரிட் தீர்க்கமான வெற்றி: இங்கிலாந்து கழகங்களுக்கு இலகு வெற்றி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலை போட்டிகள்…..

இதன்படி கடந்த முறை சம்பியனான புனித ஜோசப் கல்லூரி தொடர்ந்தும் கௌரவ ஸ்டான்லி அபேசேகர மற்றும் அருட்தந்தை ஜோ விக்ரமசிங்க கிண்ணத்தை தக்கவைத்துகொண்டது. 

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக CR மைதானம் ஈரலிப்புடனும் வழுக்கும் தன்மையுடனும் இருந்ததால் குறித்த நேரத்திற்கு போட்டியை ஆரம்பிக்க முடியாமல்போனது. 

இந்நிலையில் போட்டி ஆரம்பித்தபோது ஜோசப் வீரர்கள் வலுவான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தினர். இதனால் அடிக்கடி தமது கோல் எல்லையை ஆக்கிரமித்த ஜோசப் வீரர்களை கட்டுப்படுத்த புனித பேதுரு கல்லூரி சற்று போராட வேண்டி இருந்தது. 

புனித ஜோசப் கல்லூரியின் முன்கள வீரர்களான சலன ப்ரமன்த மற்றும் செனால் சன்தேஷ் எதிரணியின் பாதுகாப்பு அரணை அடிக்கடி முறியடித்து முன்னேறியதை காண முடிந்தது. எனினும் அவர்களுக்கு எதிராக புனித பேதுரு கோல் காப்பாளர் ஒரு அரண் போல் செயற்பட்டார்.  

எனினும் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் வைத்து இடது பக்க கோனர் திசையில் இருந்து வந்த பந்தை செனால் சன்தேஷ் கோலாக மாற்றி புனித ஜோசப் கல்லுரியை முதல் பாதியில் முன்னிலை பெறச் செய்தார்.  

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 1 – 0 புனித பேதுரு கல்லூரி

முதல் பாதியில் தவறுகளை இழைத்து பலவீனமான ஆட்டம் ஒன்றை வெளியிப்படுத்திய புனித பேதுரு கல்லூரி மாறுபட்ட அணி ஒன்றாக இரண்டாவது பாதியில் களமிறங்கியது. அதுவரை பந்தை தன்வசம் தக்கவைத்து ஆதிக்கம் செலுத்திய புனித ஜோசப் வீரர்களுக்கு புனித பேதுரு அணியினர் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் இரண்டாவது பாதயின் ஆரம்பத்திலேயே மொஹமட் செயிட் பெற்ற சிறப்பான கோல் மூலம் அந்த அணி போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது. கோல் கம்பத்தின் இடது பக்க மூலைக்கு பந்தை தனது தலையால் முட்டி அவர் அந்த கோலை புகுத்தினார். 

அவுஸ்திரேலியாவில் இலங்கை அணியின் ஆதிக்கம் எவ்வாறு இருக்கும்?

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று…..

இந்நிலையில் இரு அணிகளும் கடைசி 30 நிமிடங்களில் வெற்றி கோல் ஒன்றுக்காக போராடியபோதும் அது முடியாமல்போனது. 

இதன்போது கடந்த ஆண்டு போட்டியில் சிறந்த வீரராக தேர்வான புனித ஜோசப் அணியின் சலன ப்ரமன்தவுக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அவர் உதைத்த ப்ரீ கிக் கோல் கம்பத்தில் பட்டும்படாமலும் வெளியேறியது. 

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 1 – 1 புனித பேதுரு கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித ஜோசப் கல்லூரி – செனால் சன்தேஷ் 40’
புனித பேதுரு கல்லூரி – மொஹமட் செயிட் 50’ 

>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<