ஐ.சி.சி. இன் அபராதத்தினை எதிர்கொள்ளும் ஜேசன் ரோய்

3709
©GETTY IMAGES

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய், போட்டி நடுவரை அவமதித்த குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) அபராதத்தினை பெற்றுள்ளார்.  

27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு …..

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, நேற்று (11) பேர்மிங்கம் நகரில் நடைபெற்றது.

இந்த அரையிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி நிர்ணயம் செய்த சவால் குறைந்த வெற்றி இலக்கான 224 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணி, குறித்த வெற்றி இலக்கினை 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 226 ஓட்டங்களுடன் அடைந்தது. மேலும், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஒன்றுக்கு 27 ஆண்டுகளின் பின்னரும் தெரிவாகியது.  

இவ்வாறாக விடயங்கள் அனைத்தும் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்த நிலையிலேயே, இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ரோயிற்கு அபராதம் விதிக்கப்பட்ட  துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த உலகக் கிண்ண அரையிறுதியில் இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலிய அணியினை தோற்கடிக்க அரைச்சதம் (85) ஒன்றுடன் உதவிய ஜேசன் ரோய் தனது ஆட்டமிழப்பு தொடர்பில் மைதான நடுவர் குமார் தர்மசேனவுடன் முரண்பட்டதோடு, ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட பின்னர் மைதானத்தினை விட்டு வெளியேறவும் மறுத்திருந்தார். இதனாலேயே ரோயிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜேசன் ரோயிற்கு நன்னடத்தை விதிமீறல் புள்ளிகள் இரண்டும் வழங்கப்பட்டிருக்கின்றது. அதன்படி, ஜேசன் ரோய் தனது தவறுக்காக தற்போது போட்டிக் கட்டணத்தில் 30% இணை அபராதமாக செலுத்த வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.  

வீரர்களின் புகைப்படங்களை எரித்த இந்திய இரசிகர்கள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று ……..

“ரோய் சர்வதேச போட்டி ஒன்றில் நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு காட்டியமைக்காக ஐ.சி.சி. இன் வீரர்கள் விதிமுறை சரத்து 2.8 இணை மீறி நடந்துள்ளது இனம் காணப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு போட்டிக்கட்டணத்தில் 30% அபராதமும், நன்னடத்தை விதிமீறல் புள்ளிகள் இரண்டும் வழங்கப்படுகின்றது.” என ஐ.சி.சி குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், ஜேசன் ரோய் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் செய்த தனது தவறை ஒத்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை அவுஸ்திரேலிய அணியினை தோற்கடித்த இங்கிலாந்து, கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் சந்திக்கின்றது

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<