டெஸ்ட் சகலதுறை வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த ஜேசன் ஹோல்டர்

311

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி)  வெளியிட்டுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய டெஸ்ட் தரவரிசையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் சகலதுறை வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை வெற்றி

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே …

பார்படோஸில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 8வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இரட்டைச் சதம் விளாசியதுடன், இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியதன் ஊடாக இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். ஜேசன் ஹோல்டர் கடந்த சில  தினங்களுக்கு முன்னர் ஐசிசி அறிவித்திருந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தார். தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 202* ஓட்டங்களை விளாசிய இவர், தன்னுடைய அதி சிறந்த துடுப்பாட்ட பிரதியையும் பதிவு செய்துள்ளார்.

அத்துடன், இவர் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் மற்றும் துடுப்பாட்ட வீரர் கீடொன் ஜென்னிங்ஸ் ஆகிய முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த பிரகாசிப்புகளின் படி 440 புள்ளிகளை பெற்றுள்ள இவர், பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹசன் மற்றும் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை பின்தள்ளி முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அதே நேரம், சிறந்த துடுப்பாட்டத்தின் ஊடாக துடுப்பாட்ட தரவரிசையிலும் 25 இடங்கள் முன்னேறி 33வது இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ், ஜெய் ரிச்சட்சன், மெர்னஸ் லெபுச்செங் மற்றும் ட்ராவிஷ் ஹெட் ஆகியோர் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், இலங்கை அணியின் சுரங்க லக்மால் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரும் ஓரளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.

பெட் கம்மின்ஸ் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், தென்னாபிரிக்க வீரர் வெரோன் பில்லெண்டரை பின்தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், அறிமுக வீரர் ஜெய் ரிச்சட்சன் (5 விக்கெட்டுகள்) 80வது இடத்திலிருந்து தன்னுடைய முன்னேற்றத்தை ஆரம்பித்துள்ளார். இவர்களை தவிர சிறந்த துடுப்பாட்டத்தை வழங்கியிருந்த ட்ராவிஷ் ஹெட் 43வது (17 இடங்கள் முன்னேற்றம்) இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், மெர்னஸ் லெபுச்செங் 21 இடங்கள் முன்னேற்றத்துடன் 84வது இடத்தை பிடித்துள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களைக் வீழ்த்திய ரங்கன ஹேரத்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  …

இலங்கை அணியை பொருத்தவரை எவ்வித பெரிய மாற்றங்களும் இல்லாத நிலையில், அரைச் சதம் கடந்த நிரோஷன் டிக்வெல்ல துடுப்பாட்ட வரிசையில் 37வது இடத்தை பிடித்துள்ளார். இவருடன், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுரங்க லக்மால் பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் 31வது இடங்களை பிடித்துள்ளார்.