யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை வீழ்த்திய கொடிகாமம் கஜபா இராணுவ றெஜிமண்ட் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

வடக்கின் சிறந்த 7 கரப்பந்து அணிகள் பங்கு கொண்ட இந்த சுற்றுத் தொடரில் A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. A குழுவில் நான்கு அணிகளும், B குழுவில் 3 அணிகளும் அங்கம் வகித்தன. குழு மட்டத்தில் அனைத்து அணிகளும் ஏனைய அணியுடன் மோதிய பின்னர் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்குத் தெரிவாகின.

மன்னார் மாவட்ட அணியை பெனால்டியில் வீழ்த்திய யாழ் மாவட்ட அணி வடக்கின் சம்பியனாகியது

குழு A

  1. யாழ்ப்பாணம் புத்தூர் வளர்மதி அணி
  2. யாழ்ப்பாணம் ஆவரங்கால் மத்தி அணி
  3. யாழ்ப்பாணம் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி
  4. கொடிகாமம் கஜபா இராணுவ றெஜிமண்ட் அணி

குழு B

  1. யாழ்ப்பாணம் இளவாலை மத்தி அணி
  2. மன்னார் மாவட்ட அணி
  3. கிளிநொச்சி மாவட்ட அணி

குழு A இற்காக இடம்பெற்ற போட்டிகளின் முழு முடிவுகளின்படி, தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற கொடிகாமம் கஜபா இராணுவ றெஜிமண்ட் அணி குழு மட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றது. தாம் விளையாடிய போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் அடைந்த யாழ்ப்பாணம் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி குழு மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியது.

அதேபோன்று குழு B யில் தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மன்னார் மாவட்ட அணி குழு மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியது. அதேபோன்று, ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்ற இளவாலை மத்தி அணியும் குழு B யில் இருந்து அரையிறுதிக்குத் தெரிவாகியது.

16 வயதுக்கு உட்பட்ட இலங்கை கால்பந்து அணிக்கான தெரிவு இவ்வாரம்

குழு மட்டப் போட்டிகளின் முடிவுகள்

குழு A

  • புத்தூர் வளர்மதி 1-2 ஆவரங்கால் மத்தி
  • கஜபா இராணுவ றெஜிமண்ட் 2-1 இந்து இளைஞர்
  • புத்தூர் வளர்மதி 0-2 இந்து இளைஞர்  
  • ஆவரங்கால் மத்தி 0-2 கஜபா இராணுவ றெஜிமண்ட்
  • புத்தூர் வளர்மதி 0-2 கஜபா இராணுவ றெஜிமண்ட் அணி
  • ஆவரங்கால் மத்தி 1-2 இந்து இளைஞர்

குழு B

  • இளவாலை மத்தி அணி 0-2 மன்னார் மாவட்ட அணி
  • கிளிநொச்சி மாவட்ட அணி 1-2 இளவாலை மத்தி அணி
  • கிளிநொச்சி மாவட்ட அணி 0-2 மன்னார் மாவட்ட அணி

அரையிறுதிச் சுற்று

முதலாவது அரையிறுதியில் குழு A யில் முதலிடம் பெற்ற கொடிகாமம் கஜபா இராணுவ றெஜிமண்ட் அணியும் குழு B யில் இரண்டாம் இடம் பெற்ற இளவாலை மத்தி அணியும் மோதிக்கொண்டன.

தேசிய மட்ட போட்டிகளின் அனுபவம் மிக்க வீரர்களைக் கொண்ட இராணுவ தரப்பினர் தமது முதல் செட்டினை 25:14 என இலகுவாக வெற்றி கொண்ட போதும், அடுத்த செட்டை 23:25 என இழந்தனர்.

எனினும் அடுத்த இரண்டு செட்களையும் அபாரமாக ஆடிய கொடிகாமம் கஜபா இராணுவ றெஜிமண்ட் அணி 25:11, மற்றும் 25:18 என இலகுவாக வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

மன்னார் மாவட்ட அணிக்கும் ஆவரங்கால் இந்து இளைஞர் அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. சம பலம் கொண்ட இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தில் 5 செட்களும் விளையாடப்பட்டன.

இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்று தீர்மானிக்க முடியாத நிலையில் நீண்டுகொண்டு சென்ற முதல் செட்டை 32:31 என மன்னார் அணி கைப்பற்றியது. எனினும் அடுத்த செட்டை 25:17 என இந்து இளைஞர் வீரர்கள் தம் வசப்படுத்தி, ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர்.

இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் அனித்தா

பின்னர் மீண்டும் இரு அணிகளும் அபாரம் காட்டி இறுதி வரை போராட, மூன்றாவது செட்டை 25:23 என இரு புள்ளி வித்தியாசத்தில் மன்னார் மாவட்ட அணி வெற்றி கொண்டது. எனினும் மன்னார் இந்து இளைஞர் அணியினர் நான்காவது செட்டை 25:16 என கைப்பற்றியதால் வெற்றியைத் தீர்மானிப்பதற்கான இறுதி செட் விளையாடப்பட்டது.  

இறுதி செட்டும் ஏனைய செட்களைப் போன்றே மிகவும் போராட்டம் மிக்கதாக இருந்தது. இந்த செட்டின் இறுதியில் 17:15 என வெற்றி பெற்ற இந்து இளைஞர் அணி 2-3 என்ற செட் கணக்கில் முன்னிலையடைந்து கிண்ணத்திற்கான இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

மிகவும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற கொடிகாமம் கஜபா இராணுவ றெஜிமண்ட் அணி மற்றும் மன்னார் மாவட்ட அணிக்கு இடையிலான இறுதிப் போட்டியின் முதல் செட்டை 25:14 என்ற புள்ளிகள் வீதத்தில் படைத்தரப்பினர் தன்னகப்படுத்தினர். எனினும் அவர்கள், இரண்டாவது செட்டை 17:25 என இழந்தனர்.

பின்னர் இடம்பெற்ற இரண்டு செட்களையும் முறையே 27:25 மற்றும் 25:19 என கைப்பற்றிய கொடிகாமம் கஜபா இராணுவ றெஜிமண்ட் அணியினர் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98ஆவது நிறைவுக் கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த தொடருக்கான சிறந்த வீரராக கொடிகாமம் கஜபா இராணுவ றெஜிமண்ட் அணியின் ரத்நாயக்க தெரிவாகினார்.