ஜப்னா சுப்பர் லீக் இறுதி மோதலில் வேலணை வேங்கைகள் – ஜப்னா பந்தேர்ஸ்

177

முதலாவது ஜப்னா சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடர் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ள நிலையில் பிளே ஓப் சுற்று கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருந்தன.  

ஜப்னா பந்தேர்ஸ் அணியினர் முதலாவது தகுதிப்போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், இரண்டாவது தகுதிப்போட்டியில் அரியாலை வொறியர்ஸ் அணியினை 29 ஓட்டங்களால் வெற்றிகொண்ட வேலணை வேங்கைகள் அணியினர் முதலாவது ஜப்னா சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தமது  இடத்தினை உறுதிசெய்துகொண்டது.

ஜெப்னா சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜெப்னா பந்தேர்ஸ்

முதலாவது ஜெப்னா சூப்பர் லீக் போட்டித் தொடரின் ப்லே ஓப் (play off)

ஜப்னா பந்தேர்சிற்கெதிரான போட்டியில் 32 ஓட்டங்களினால் தோல்வியடைந்திருந்த வேலணை வேங்கைகள் மற்றும் கொக்குவில் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக 8 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றிருந்த அரியாலை வொரியர்ஸ்  ஆகிய அணியினர் இறுதி போட்டிக் கனவுடன், தகுதிப் போட்டியில் மோதியிருந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை வொரியர்ஸ் அணியின் தலைவர் செல்டனினால் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு அழைக்கப்பட்டிருந்தனர் வேங்கைகள்.

வேலணை வேங்கைகள் இந்த போட்டிக்காக கடந்த போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்த அணித்தலைவர் மணிவண்ணனது சேவையினை பெற முடியாது போயிருந்த அதேவேளை, கடந்த போட்டியில் பங்கெடுக்காத அணியின் விக்கெட் காப்பாளர் ஆதி அணிக்கு திரும்பியிருந்தார்.

வேங்கைகளிற்கு மிகச்சிறந்த ஆரம்பம் ஒன்றினை பெற்றுக்கொடுத்தனர் ஞானானந்தஷர்மா, பானுஜன் இணை. இவ்விருவரும் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அmதனைத் தொடர்ந்து ஞானானந்தாஷர்மா (19), ஆதி (3) மற்றும் பானுஜன் (39) ஆகிய மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வேங்கைகளின் ஓட்டம் பெறும் வேகத்தில் சரிவு ஏற்பட்ட்து.

Photos: Ariyalai Warriors vs Nallur Broncos | Jaffna Super League 2018

ThePapare.com | Murugaiah Saravanan | 27/01/2019 Editing and re-using images without permission of

மத்திய வரிசையில் சத்தியன் பெற்றுக்கொடுத்த 23 ஓட்டங்கள், பின்வரிசையில் லிங்கநாதன் பெற்றுக்கொடுத்த அதிரடியான 25 ஓட்டங்கள் மற்றும் உதிரிகளாக கிடைக்கப்பெற்ற 21 ஓட்டங்களுடன் 166 என்ற ஓரளவிற்கு பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டனர் வேலணை வேங்கைகள்.

அரியாலை வொரியர்ஸ் அணி சார்பில் லோகதஸ்வர் 14 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பதிலிற்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய அரியாலை வொரியர்ஸ்  முதலாவது பந்திலேயே மதுசனின் விக்கெட்டினை பறிகொடுத்தனர். அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்டவீரர் துவாரகசீலன் 12 ஓட்டங்கள் பெற்றிருக்கையில் சத்தியனால் வெளியேற்றப்பட்டார்.  ஜெரிக் துசாந்த் 32 ஓட்டங்களுடனும், கோபிராம் மற்றும் பிரியலக்சன் முறையே 27, 23 ஓட்டங்களினையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்துவந்த வீரர்களும் ஓட்டங்களை பெறுவதற்கு தடுமாற, 18 ஆவது ஒவரில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அரியாலை வொரியர்ஸ் 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். கோகுலன்l 3 விக்கெட்டுகளையும் சத்தியன்,உதயசாந்த் மற்றும் லிங்கநாதன், மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

Photos : Velanai Vengaikal vs Pannai Tilko Gradiators | Jaffna Super League 2018/19

ThePapare.com | Jeyendra Logendran | 21/01/2019 Editing and re-using images without permission of

பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட வேலணை வேங்கைகள் இறுதிப் போட்டிக்கு தமது இடத்தினை உறுதிசெய்தனர். அதேவேளை தோல்வியடைந்த அரியாலை வொரியர்ஸ்  அணியினர் மூன்றாவது இடத்தில் இந்த பருவகால ஜெப்னா சுப்பர் லீக்கினை நிறைவு செய்தனர்.  

எதிர்வரும் சனிக்கிழமை(09) மாலை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் தொடரின் பலம்வாய்ந்த அணிகளாக திகழும் ஜப்னா  பந்தேர்ஸ் மற்றும் வேலணை வேங்கைகள்  முதலாவது ஜப்னா  சூப்பர் லீக்கின் சம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

ஆடடநாயகன்லிங்கநாதன் (வேலணை வேங்கைகள்)

போடடிச்சுருக்கம்

வேலணை வேங்கைகள் 166/7 (20)பானுஜன் 39, லிங்கநாதன் 25, சத்தியன் 23, லோகதீவார் 2/14

அரியாலை வொரியர்ஸ் 137 (17.3)ஜெரிக் துசாந்த் 32,கோபிராம் 27, பிரியலக்சன் 23, கோகுலன் 3/33, உதயசாந்த் 2/19,  சத்தியன் 2/26, லிங்கநாதன் 2/36

போட்டி முடிவு 29 ஓட்டங்களால் வேலணை வேங்கைகள் வெற்றி