ஜெப்னா சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜெப்னா பந்தேர்ஸ்

270

முதலாவது ஜெப்னா சூப்பர் லீக் போட்டித் தொடரின் ப்லே ஓப் (play off) சுற்றுப்போட்டிகள் இன்றயதினம் (02) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. முதலாவது தகுதி போட்டியில் சந்தோசினுடைய அதிரடி துடுப்பாடத்தின் உதவியுடன் ஜெப்னா பன்தேர்ஸ் அணியினர் வேலணை வேங்கைகள் அணியினை 32 ஓட்டங்களால் வெற்றிபெற்று முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். ஜெரிக் துசந்தினுடைய ஹெட்றிக் உள்ளடங்கலான 5 விக்கெட்டுகள் மற்றும் துவாரகசீலன் ஆட்டமிழக்காமல் பெற்ற 70 ஓட்டங்களின் உதவியுடன், கொக்குவில் ஸ்டார்ஸ் அணியினை 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற அரியாலை வொரியர்ஸ் அணியினர் இரண்டாவது தகுதி போட்டியில் இன்று வேலணை வேங்கைகளை எதிர்த்து மோதவுள்ளனர்.

பிளே ஓப் வாய்ப்பை தவறவிட்ட நல்லூர்; பந்தேர்ஸிற்காக அரைச்சதம் கடந்த சந்தோஷ்

முதலாவது ஜெப்னா சுப்பர் லீக் தொடரின் இறுதிக் குழு நிலைப் போட்டிகள் கடந்த…

ஜெப்னா பந்தேர்ஸ் எதிர் வேலணை வேங்கைகள்

குழு நிலை போட்டிகளில் தோல்விகள் எதனையும் சந்திக்காத வேங்கைகள் மற்றும் ஜெப்னா பன்தேர்ஸ் அணியினர் நேரடியான இறுதிப்போட்டி வாய்ப்பினை பெறுவதற்காக இன்றய போட்டியில் களமிறங்கியிருந்தனர்.

வேங்கைகளால் முதலாவதாக துடுப்பெடுத்தாடுவதற்கு அழைக்கப்பட்டிருந்த பன்தேர்சின் ஆரம்ப துடுப்பாட்ட்வீரர் கல்கோகன் மற்றும் நம்பிக்கைக்குரிய வீரர் மோகன்ராஜ் ஆகியோரது விக்கெட்டுக்களை வேலணை வேங்கைகள் 11 ஓட்டங்களுக்குள் சாய்த்தனர்.

மூன்றாவது விக்கெட்டிற்காக  அணித்தலைவர் அருண் சந்தோசுடன் ஜோடி சேர, கடந்த போட்டியைப் போன்று தனது அதிரடி ஆட்டத்தினை சந்தோஷ் தொடர்ந்தார்.

சத இணைப்பாட்டமொன்றினை பகிர்ந்திருந்த வேளையில் பிரிஷங்கரின் பந்துவீச்சில் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சந்தோஷ் மேலும் ஒரு சதத்தினை துரதிஷ்டவசமாக தவறவிட்டார்.

அருண்குமாரின் 39 ஓட்டங்கள் மற்றும் சுரேந்திரனின் 16 ஓட்டங்களுடன் 179 ஓட்டங்களை பெற்ற பந்தேர்ஸ்,180 என்ற பலமான வெற்றி இலக்கினை எதிரணிக்கு நிர்ணயித்தனர்.

பந்துவீச்சில் பிரிசங்கர் மற்றும் சத்தியன் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

வேலணை வேங்கைகளின் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். வேங்கைகளின் துடுப்பாடத்தில் நம்பிக்கைக்குரிய வீரராக திகழ்ந்துவரும் சத்தியனும் 43 ஓட்டங்களுடன் மோகன்ராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க பன்தேர்சின் வெற்றி உறுதியானது.

பின்வரிசையில் லிங்கநாதன் பெற்றுக்கொடுத்த 22 ஓட்டங்கள் மற்றும் உதிரிகளாக கிடைத்த 19 ஓட்டங்களுடன் வேலணை வேங்கைகள் 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஜெப்னா பன்தேர்ஸ், தோல்விகள் ஏதுமின்றி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

 ஆட்டநாயகன் – சந்தோஷ் (ஜெப்னா பன்தேர்ஸ்)

போட்டியின் சுருக்கம்

ஜெப்னா  பந்தேர்ஸ் – 179/6 (20) – சந்தோஷ்  86,அருண் குமார் 36, பிரிசங்கர் 2/25, சத்தியன் 2/30

வேலணை வேங்கைகள் – 147 (19.2) – சத்தியன் 43, லிங்கநாதன் 22, மோகன்ராஜ் 3/22, சுரேந்திரன் 3/18, பிரசன்ன 2/27

போட்டி முடிவு – ஜெப்னா பந்தேர்ஸ் 32 ஓட்டங்களால் வெற்றி

கொக்குவில் ஸ்டார்ஸ் எதிர் அரியாலை வொரியர்ஸ்

இரண்டு குழுக்களிலும் இரண்டாவது இடத்தினை பிடித்த கொக்குவில் ஸ்டார்ஸ், அரியாலை வொரியர்ஸ்  அணியினர் தமது இறுதிப்போட்டி வாய்ப்பினை தக்கவைப்பதற்கு இந்த விலகல் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியிருந்தனர்.

தலை உபாதை பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ள குசல் பெரேரா

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில்…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை வொரியர்ஸ் அணியின் தலைவர் செல்டன் களத்தடுப்பினை தேர்வு செய்ய, கொக்குவில் ஸ்டார்ஸ் அணியினர் துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கினர்.

கொக்குவில் ஸ்டார்ஸ் 24 ஒட்டங்களினை பெற்றிருக்கையில் ஜான்சன், ஜெயரூபன், வினோத் ஆகிய மூவரையும் தொடர்ச்சியான மூன்று பந்துகளில் வெளியேற்றிய ஜெரிக் துசாந்த் தொடரின் முதலாவது ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

ஐந்தாம் இலக்கத்தில் களம் நுழைந்த தின் பெற்றுக்கொடுத்த 40 ஓட்டங்களின் உதவியுடன் 141 என்ற வெற்றி இலக்கினை கொக்குவில் ஸ்டார்ஸ் அணியினர் நிர்ணயித்தனர்.

பந்துவீச்சில் அசத்திய முன்னாள் யாழ் மத்திய கல்லூரி வீரர் ஜெரிக் துசாந்த் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி, தொடரின் சிறந்த பந்துவீச்சு பெறுதியினை பதிவு செய்திருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய அரியாலை வொரியர்ஸ் அணிக்கு  துவாரகசீலன், ஜெரிக் துசாந்த் ஜோடி சத இணைப்பாட்டம் ஒன்றினை பெற்றுக்கொடுக்க போட்டியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற அரியாலை வொரியர்ஸ் அணி தமது கிண்ண கனவினை தக்கவைத்துக் கொண்டனர்.

முன்னாள் சென். ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் துவாராகசீலன் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களினையும், பந்துவீச்சில் அசத்திய ஜெரிக் துசாந்த் 40 ஓட்டங்களினையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.

ஆட்டநாயகன் – ஜெரிக் துசாந்த் (அரியாலை வொரியர்ஸ்)

போட்டியின் சுருக்கம்

கொக்குவில் ஸ்டார்ஸ் – 140 (18.5) – எட்வர்ட் எடின் 41, ஜெரிக் துசாந்த் 5/34

அரியாலை வொரியர்ஸ் – 143/2 (16.3) – துவாராகசீலன் 70*, ஜெரிக் துசாந்த் 40, வாமனன் 2/32

போட்டி முடிவு – அரியாலை வொரியர்ஸ் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>>போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<