சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில் கடந்த வாரம் கோலாகலமாய் ஆரம்பமாகியிருந்த கிழக்கு மாகாண உள்ளூர் அணிகள் பங்குபெறும் ஸ்பீட் T-20 தொடரின் முதல் வாரப் போட்டிகளில், தொடரில் பங்கு கொள்ளும் முன்னணி அணிகள் செல்வாக்கு செலுத்தியிருந்தன.

ஸ்பீட் T-20 கிரிக்கெட் தொடர் கிழக்கில் கோலாகலமாக ஆரம்பம்

‘ஒற்றுமைக்கான கிரிக்கெட்’ (Cricket for Unity) என்னும் தொனிப் பொருளில் கிழக்கு மாகாணப் பிராந்தியத்தில் காணப்படும்..

ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ப்ரேவ் லீடர்ஸ் கழகம்

குழு D இணைச் சேர்ந்த சாய்ந்தமருதின் முன்னணி கழகங்கள் இரண்டும் மோதிக்கொண்ட, இத்தொடரின் ஆரம்பப் போட்டியில் இரு அணிகளும் போட்டியின் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தியிருந்தன.

எனினும், ஹொலி ஹீரோஸ் கழகத்தின் நட்சத்திர வீரர் பொன்சேக்கா பந்து வீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் திறன்பட செயற்பட்டு தனது அணியின் வெற்றியினை உறுதி செய்ததோடு போட்டியின் ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.  

போட்டியின் சுருக்கம்

பிரேவ் லீடர்ஸ்  – 136/8, அஜ்வத் 29, அஸ்மி 28, பொன்சேக்கா 31/2, ரஜீப் 32/2

ஹொலி ஹீரோஸ் – 137/4, முஸ்பிக் 34, நஜா  31, தாஜூன் 23/2, சர்ஜூன் 18/2

போட்டி முடிவுஹொலி ஹீரோஸ் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி


கெலியோன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ஹரிகேன்ஸ் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில், நாணய சுழற்சியினை தமதாக்கிக்கொண்ட மாளிகைக்காடு கெலியோன்ஸ் அணி, கல்முனை ஹரிகேன்ஸ் அணியினை முதலில் துடுப்பாடச் செய்து, 117 ஓட்டங்களுக்குள் அவ்வணியை கட்டுப்படுத்தியது.

பின்னர், விரைவாக பதிலுக்கு துடுப்பாடிய கெலியோன்ஸ் அணி, வெற்றி இலக்கைக் கடந்து குழு A இல் முதல் வெற்றியினைப் பெற்றுக் கொண்டது. ஹரிகேன்ஸ் அணியில் சகல துறைகளிலும் அப்ராஜ் ஜொலித்திருந்தும் அது அவரது அணியின் வெற்றிக்கு கை கொடுத்திருக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

ஹரிகேன்ஸ் – 117/10, சாஜஹான் 27, அப்ராஜ் 21, இம்தியாஸ் 8/2, சன்ஜீவன் 35/2

கெலியோன்ஸ் – 118/4, சர்ஜுன் 27, பைனூஸ் 27, அப்ராஜ் 21/2, சபாஹீர் 31/2

போட்டி முடிவுகெலியோன்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி


ஓஸ்மானியன் விளையாட்டுக் கழகம் எதிர் டொப் ஹீரோஸ் விளையாட்டுக் ககழகம்

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த குழு A இற்கான இப்போட்டி இரு அணிகளினதும் வல்லாதிக்கம் காரணமாக இறுதியில் சமநிலை அடைந்தது.

போட்டியின், ஆட்ட நாயகனாக சிறந்த சகல துறை ஆட்டத்திற்காக சாய்ந்தமருது ஒஸ்மானியன் அணியின் நபீல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கல்முனை டொப் ஹீரோஸ் அணியின் சம்ரிக் அதிரடியாக ஆடி 32 பந்துகளில் 39 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஒஸ்மானியன் – 152/6, நபீல் 34, இர்சாத் 23, அப்ரி 32/3, றிஸ்கான் 21/1

டொப் ஹீரோஸ் – 152/8, சம்ரிக் 39, பயாஸ் 22, நபீல் 24/2, அரபாத் 41/2

போட்டி முடிவுபோட்டி சமநிலை அடைந்தது.


டொப் ரேங் விளையாட்டுக் கழகம் எதிர் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம்

குழு C இற்கான இப்போட்டியின், நாணய சுழற்சியினை கைப்பற்றிக்கொண்ட கல்முனை டொப் ஹீரோஸ் அணி எதிரணிக்கு துடுப்பாடும் சந்தர்ப்பத்தை வழங்க, சாய்ந்தமருது அணியினர் இர்சாத் பெற்றுக்கொண்ட அதிரடி அரைச் சதத்துடன், 167 ஓட்டங்களைக் குவித்தது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி; ஒரு நாள் தொடர் இலங்கை A வசம்

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்று முடிந்திருக்கும்…

பின்னர், பதிலுக்கு துடுப்பாடிய கல்முனை டொப் ரேங் அணி அரங்கினை அதிர வைத்தது. SH. றிகாஸ் 52 பந்துகளில் பெற்றுக்கொண்ட 88 ஓட்டங்களுடன் அவ்வணி வெற்றியிலக்கினை எட்டியது.

அதிர வைக்கும் தனது அதிரடி துடுப்பாட்டத்திற்காக போட்டியின் ஆட்ட நாயகனாக றிகாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, கிழக்கிலங்கையிலும் பந்தினை நொறுக்ககூடிய வீரர்கள் உண்டென்பதையும் அவர் நிரூபித்தார் .

போட்டியின் சுருக்கம்

சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் – 167/9, இர்சாத் 68, சப்ரான் 25/2, நிப்ராஸ் 12/1

டொப் ரேங் கழகம் – 171/6, றிகாஸ் 88, நைஸர் 30, றிகாஸ் 18/1

போட்டி முடிவுரொப் ரேங் விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி


முபோ விளையாட்டுக் கழகம் எதிர் பிளையிங் ஹொர்ஸஸ் விளையாட்டுக் கழகம்

சாய்ந்தமருதினை சேர்ந்த இரு அணிகள் பலப்பரீட்சை நடாத்திய குழு E இற்கான இப்போட்டியில், முபோ விளையாட்டுக் கழகத்தினால் வழங்கப்பட்ட வெற்றி இலக்கினை ராஜூதீன் மற்றும் ரம்சீன் ஆகியோரின் அதிரடியுடன் பிளையிங் ஹொர்ஸஸ் கழகம் கடந்தது.

பந்து வீச்சிலும் திறம்பட செயற்பட்டு, துடுப்பாட்டத்தில் அதிரடியாகவும் ஆடியிருந்த M.J.M. ராஜூதீன் எதிரணிப் பந்து வீச்சாளர்களுக்கு அதிக நெறுக்கடி கொடுத்தது, மொத்தமாக 55 பந்துகளில் 71 ஓட்டங்களை விளாசி, தனது அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்திருந்தார். அதேபோன்று, ரம்சீனும் சிறந்த முறையில் ஆடி அரைச் சதம் கடந்திருந்தார்.

முதலில் துடுப்பாடியிருந்த முபோ விளையாட்டுக் கழகத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த அஸ்கர் வெறும் 19 பந்துகளில் 43 ஓட்டங்களினைப் பெற்றிருந்தும், துரதிஷ்டவசமாக அவரது அணிக்கு அது கைகூடியிருக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

முபோ விளையாட்டுக் கழகம் – 145/7, அஸ்கர் 43, ரிஸ்வீன் 21, ராஜூதீன் 21/2, றிப்னாஸ் 21/2

பிளையிங் ஹொர்ஸஸ் – 147/2, ராஜூதீன் 71, ரம்சீன் 51, சிராசீன் 28/1

போட்டி முடிவுபிளையிங் ஹொர்ஸஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு <<