ஒட்டுமொத்த அணியின் திறமைக்கு கிடைத்த வெற்றி: கோஹ்லி

241
Getty

உலகக் கிண்ணப் போட்டிகளில் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் அணியை வீழ்த்த கிடைத்தமை ஒட்டுமொத்த அணியின் திறமைக்கும் கிடைத்த வெற்றியாகும் என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ரோஹித்தின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 22 ………..

ரோஹித் சர்மாவின் அபார சதம், விராத் கோஹ்லி, கே.எல் ராகுலின் அற்புதமான இன்னிங்ஸ், குல்தீப், பாண்டியாவின் திருப்புமுனை விக்கெட் ஆகியவற்றின் உதவியுடன் மென்செஸ்டரில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியின் 22ஆவது லீக் ஆட்டத்தில் டக்வர்த் லூவிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய கே.எல் ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய வீரர்கள் ஒருநாள் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியிருந்தமை இந்தப் போட்டியின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, இந்தியா இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

இந்த நிலையில், வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,

”இந்த ஆடுகளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் அவதானிக்கவில்லை. எனினும், போட்டியின் முதலாவது இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறுவதை அவதானிக்க முடிந்தது. ஆனாலும், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றால் நாங்களும் முதலில் பந்துவீசுவதற்கு ஆயத்தமாக இருந்தோம். எதிரணியினரின் சரியான இடங்களில் பந்துவீசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்.

அதேபோல, ரோஹித் மீண்டும் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவருடைய அபார ஆட்டத்தால் தான் நாங்கள் முதல் போட்டியிலும் வெற்றியீட்டினோம். மறுமுனையில் ரோஹித்துக்கு ராகுல் சிறந்ததொரு இணைப்பாட்டத்தினை வழங்கியிருந்தார்.

உண்மையில் தான் ஒரு சிறந்த ஒருநாள் வீரர் என்பதை ரோஹித் மீண்டும் நிரூபித்துக்காட்டினார். அதுமாத்திரமின்றி, ஒரு அணியாக ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசியிருந்தார், பாபர் அசாம் மற்றும் பக்கர் சமான் ஆகியோர் குல்தீப்பினுடைய பந்துகளை எதிர்த்தாட முயற்சித்தனர். ஆனாலும், அவருக்கு தொடர்ந்து பந்துவீச வழங்க வேண்டும் என நான் நினைத்தேன்.

உண்மையில் பாபர் அசாமின் விக்கெட்டை குல்தீப் கைப்பற்றியது மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையில் இந்த உலகக் கிண்ணத்தில் இதுதான் அவருடைய சிறந்த போட்டியாக இருக்கும் என நம்புகிறேன்.

அத்துடன், பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி எம்மை வீழ்த்தியிருந்தனர். ஆனால், இந்தப் போட்டியை எடுத்துக் கொண்டால் சற்று உணர்ச்சி வசமானது. தவறுகள் இடம்பெறலாம். நாம் அந்த கண்ணோட்டத்தில் இருந்து அவர்களை அணுக முடியாது.

அதேபோல, முடிவு என்னவாக இருந்தாலும், நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்” என்றார்.

ஒருநாள் அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து கோஹ்லி சாதனை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ………

இதேநேரம், புவனேஸ்வர் குமாரின் உபாதை குறித்து இதன்போது கருத்து வெளியிட்ட கோஹ்லி, ”புவிக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் 2 அல்லது 3 போட்டிகளில் அவருக்கு விளையாட முடியாமல் போகும். அவர் எமது அணியில் உள்ள முக்கியமான வீரர்.

எனவே, அவருக்கு மீண்டும் இறுதி பதினொருவர் அணியில் விளையாட வேண்டிவரும். அதுவரை அவருக்குப் பதிலாக மொஹமட் சமி விளையாடுவார்” என குறிபிட்டார்.

இந்திய அணி தமது அடுத்த லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் (22), மேற்கிந்திய தீவுகள் (27), இங்கிலாந்து (30) ஆகிய அணிகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<