அதிரடி காட்டிய இசுரு உதான டி20 தவரிசையில் அசுர முன்னேற்றம்

1129

அதிரடி மூலம் தனது துடுப்பாட்ட திறமையை நிரூபித்த இலங்கை அணியின் சகலதுறை வீரர் சுரு உதான டி20 வீரர்களின் புதிய தரவரிசையில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டிலும் உயர்ந்த நிலைகளை அடைந்துள்ளார்.

தென்னாபிரிக்க மண்ணுக்கு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று (24) நிறைவுக்கு வந்திருந்த நிலையில், குறித்த தொடரின் பின்னரான தரவரிசை மாற்றங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (25) வெளியிட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்களின் கவனயீனத்தால் தொடரை முழுமையாக இழந்த இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான T20 போட்டியிலும், துடுப்பாட்ட வீரர்களின்…

குறித்த டி20 தொடரை தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்து 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.

டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை

வெளியிடப்பட்டுள்ள புதிய துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையின்படி, தொடரில் இரண்டு அரைச்சதங்களுடன் மொத்தமாக 139 ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருது வென்ற ரீஸா ஹென்ட்ரிக்ஸ் தனது வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளுடன் 26 நிலைகள் உயர்ந்து 647 தரவரிசை புள்ளிகளுடன் 15ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

மேலும், தென்னாபிரிக்க அணித்தலைவர் ஜே.பி டுமினி 7 நிலைகள் உயர்ந்து 32ஆவது நிலையையும், ரைஸி வென்டர் டைஸன் 33 நிலைகள் உயர்ந்து 41ஆவது நிலையையும் அடைந்துள்ளனர்.

இலங்கை அணி சார்பாக ஒரு பந்துவீச்சாளராக டி20 அணியில் உள்வாங்கப்பட்டு அதிரடி ஆட்டத்தின் மூலம் இரசிகர்களை வியக்க வைத்து தொடரில் அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களை (132) பதிவு செய்த இசுரு உதான துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசையில் 106 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகூடிய துடுப்பாட்ட தவரிசை புள்ளிகளுடன் (189) 144ஆவது நிலையை அடைந்துள்ளார்.

மேலும், இலங்கை அணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல 19 நிலைகள் உயர்ந்து 78ஆவது நிலையையும், குசல் மெண்டிஸ் 191 நிலைகள் உயர்ந்து 167ஆவது நிலையையும் அடைந்துள்ளனர்.

மாலிங்க மும்பை அணியுடன் இணைவார்: மஹேல நம்பிக்கை

உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாண…

துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசையின் படி பாக். வீரர் பாபர் அஸாம் 885 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

டி20 பந்து வீச்சாளர்களின் தரவரிசை

தொடரில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான அண்டில் பெஹ்லுக்வாயோ வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளுடன் முதல் தடவையாக பந்து வீச்சாளர்களின் தவரிசையில் முதல் 10 நிலைகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் 649 தரவரிசை புள்ளிகளுடன் 14 நிலைகள் உயர்ந்து 10ஆவது நிலையை அடைந்துள்ளார்.

மேலும், தென்னாபிரிக்க அணி சார்பாக கிறிஸ் மொரிஸ் 2 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் (601) 18ஆவது நிலையையும், சுழற்பந்து வீச்சாளரான தப்ரிஸ் ஷம்ஷி 41 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் (534) 35ஆவது நிலையையும் அடைந்துள்ளனர்.

இலங்கை அணி சார்பாக, தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் (593) 12 நிலைகள் உயர்ந்து 21ஆவது நிலையை அடைந்துள்ளார்.

மேலும், தொடரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஓட்டவிகித சராசரியை (6.41) பதிவு செய்த இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க 11 நிலைகள் உயர்ந்து 42ஆவது நிலையை அடைந்துள்ளார். அத்துடன் துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது பந்துவீச்சிலும் பிரகாசித்த இசுரு உதான வாழ்நாள் அதிகூடிய புள்ளிகளுடன் 12 நிலைகள் உயர்ந்து 51ஆவது நிலையை அடைந்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் புதிய தரவரிசையின்படி ஆப்கான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் 780 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

அணிகளின் தரவரிசை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கடையிலான குறித்த தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் டி20 சர்வதேச அணிகளின் தரவரிசையில் தென்னாபிரிக்க அணி 118 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும், இலங்கை அணி 86 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் காணப்பட்டன.

குறித்த தொடரை தென்னாபிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியதன் அடிப்படையில் தென்னாபிரிக்க அணிக்கு 2 தரவரிசை புள்ளிகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளை, தொடரை இழந்த இலங்கை அணிக்கு 2 தரவரிசை புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது.

இந்த மாற்றத்தின் பின்னர் தென்னாபிரிக்க அணி 120 புள்ளிகளை பெற்றுள்ளது. நான்காமிடத்தில் காணப்படும் அவுஸ்திரேலிய அணியும் 120 புள்ளிகளுடன் காணப்பட்டாலும் தசம புள்ளிகள் அடிப்படையில் ஆஸி. அணி முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தென்னாபிரிக்க அணி தொடர்ந்தும் ஐந்தாமிடத்திலேயே நீடிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் தினத்தை அறிவித்த மாலிங்க

இங்கிலாந்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பிறகு ஒருநாள் அரங்கிலிருந்தும்…

இலங்கை அணி 2 தரவரிசை புள்ளிகளை இழந்தும் (84) தொடர்ந்து ஒன்பதாவது இடத்திலேயே காணப்படுகின்றது. இலங்கையை பின்தொடர்ந்து காணப்படுகின்ற பங்களாதேஷ் அணி 77 புள்ளிகளுடனேயே காணப்படுகின்றமை இதற்கான காரணமாகும்.

சர்வதேச டி20 அணிகளின் புதிய தரவரிசை

  1. பாகிஸ்தான் – 135 புள்ளிகள்
  2. இந்தியா – 122 புள்ளிகள்
  3. இங்கிலாந்து – 121 புள்ளிகள்
  4. அவுஸ்திரேலியா – 120 புள்ளிகள்
  5. தென்னாபிரிக்கா – 120 புள்ளிகள்
  6. நியூசிலாந்து – 116 புள்ளிகள்
  7. மேற்கிந்தியதீவுகள் – 98 புள்ளிகள்
  8. ஆப்கானிஸ்தான் – 93 புள்ளிகள்
  9. இலங்கை – 84 புள்ளிகள்
  10. பங்களாதேஷ் – 77 புள்ளிகள்
  11. ஸ்கொட்லாந்து – 61 புள்ளிகள்
  12. ஜிம்பாப்வே – 55 புள்ளிகள்
  13. நெதர்லாந்து – 52 புள்ளிகள்
  14. நேபாளம் – 43 புள்ளிகள்
  15. ஐக்கிய அரபு இராச்சியம் – 43 புள்ளிகள்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க