சன்ன தோண்டிய புதைகுழிக்கு அவரே காரணம் – திரு.ரொட்ரிகோ

433

.பி.சன்ன அவருடைய புதை குழியை தோண்டுவது அவருடைய செயல்களாலேயேதான், ஆனால் அவருடைய நிலைமைக்கு காற்பந்தாட்ட சம்மேளனமே காரணம் என்று நம்மையும் புதைகுழியில் தள்ளிவிடப்பார்க்கிறார்என்று இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடக மற்றும் நிதித் தலைவர் திரு.ரஞ்சித் ரொட்ரிகோ அவர்கள் தெரிவித்தார்.

சூப்பர் 8 சுற்று இவ்வார இறுதியில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், மாற்றப்பட்ட திகதிகள் குறித்து அறியத்தரும் ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்ற வேளையில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் .பி.சன்ன பாதிக்கப்பட்டது பற்றி வினவப்பட்டது.

காற்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஊடக மற்றும் நிதித் தலைவர் திரு.ரஞ்சித் ரொட்ரிகோ அவர்கள் .பி.சன்னவிற்கு எந்த ஒரு பரிதாபமும் இல்லாமல் பதில் அளித்தார். அவரது வாழ்க்கையை அவரே வடிவமைத்தார் எனவும் அதற்கு சம்மேளனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது எனவும் கூறினார்.

சன்ன 16 வருடங்கள் இலங்கை காற்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு தலைவராகவும் பொறுப்பேற்று இருந்தார். அதுமட்டுமில்லாது உள்ளூர் போட்டிகளில் விளையாடும்பொழுது இலங்கையின் பிரசித்தி பெற்ற கழகங்களான ரத்னம், ப்ளூ ஸ்டார், சொலிட் ஆகிய கழகங்களில் விளையாடி இலங்கையிலேயே அதிகம் சம்பளம் பெறும் வீரரில் ஒருவராகத் திகழ்ந்தார். ஆனால் அவருடைய காற்பந்தாட்ட வாழ்க்கையில் கஷ்டகாலம் 2010இல் அவர் போட்டி நிர்ணயம் செய்ததால் 1 வருடம் இடைநிறுத்தப்பட்டதில் இருந்து துவங்கியது.

திரு.ரொட்ரிகோ தெரிவித்த கருத்தின்படிஅவரை இடைநிறுத்திய காலத்தின் போது அவருடைய வாழ்க்கையை சீரமைத்துக்கொள்ள பல கவர்ச்சிகரமான தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. எனினும் அவர் அதை விரும்பவில்லை. அவர் எப்போதும் அதை விட மேலதிகமாகவே எதிர்பார்த்தார்.”

இக்காலப் பகுதியில் திரு.சரத் வீரசேகர, டீமோ நிறுவனத்தில் சன்னவிற்கு தொழில் பெற்றுத் தருவதற்கு உதவினார். அதுவும் வேலைக்கு சமூகமளிக்காது விளையாடிக்கொண்டே சம்பாதிக்கும் வாய்ப்போடு அத்தொழில் அமைந்திருந்தது.”

மேலும் கருத்து தெரிவித்த திரு.ரொட்ரிகோ, ”எப்போதும் சம்மேளனம் வீரர்களுக்கு சாதகமாகவே செயல்படுகின்றது எனினும் வீரர்களும் சில விடயங்களில் பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் நாட்டிற்காக விளையாடும் பொழுது உணவு, பிரயாணம், தங்கும் வசதி மற்றும் வாழும் செலவுகளையும் தாண்டி அவர்களின் நலத்திற்காக சம்மேளனம் சிலசமயம் ஒப்பந்தத்தையும் மீறி அவர்களுக்கு பல வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

முழுமையாக வீரர்களின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்க இலங்கை ஒன்றும் முதற்தர நாடில்லை என்பதை உள்நாட்டு வீரர்கள் புரிந்து கொண்டு நிலையான வாழ்க்கையை வாழ கடினமாக உழைக்க வேண்டும்என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த திரு.ரொட்ரிகோஎமது சம்மேளனம் பழைய வீரர்களுக்கான பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. முன்னைய வீரர்களின் திறமைகள் பயன்படுத்தப்பட்டு காற்பந்தாட்டத்தை வளர்ப்பதே இந்த முகாமின் நோக்கமாகும். இந்த வாய்ப்பை சன்ன பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவ் முகாமில் கலந்துக்கொண்ட டட்லி ஸ்டெயின்வால் இவ் முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்து அனுமதிப்பத்திரம் பெற்று தற்போது பல அணிகளுக்கு பயிற்றுவிப்பாளராக உள்ளார்” எனத் தெரிவித்தார்.

சன்னவைப் பொறுத்த வரையில் அவரது எண்ணங்கள் ஐரோப்பிய வீரர்களை போன்று அமைந்து இருக்கலாம். எனினும் இலங்கையில் விளையாட்டின் தரத்தை பொறுத்தமட்டில் அது சாத்தியமற்றது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

திரு.ரொட்ரிகோ அவர்கள் இவ்விடயத்தில் மிகவும் அதிருப்தி அடைந்ததிற்குக் காரணம் இவ்வாறு ஒரு விடயம் நடப்பது இதுவே முதல் முறை என்பதால் ஆகும். “காற்பந்தாட்டத்தை விட குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விளையாட்டுகளில் கூட இவ்வாறு சம்பவம் நடைப்பெற்றது இல்லை. இச்சம்பவம் ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் எமது சம்மேளனத்தில் எண்ணையை ஊற்றியது போல் அமைந்தது. மேலும் சன்னவின் அளவிற்கு கூட பிரசித்தம் அடையாத ஏனைய கிரிக்கட் மற்றும் காற்பந்தாட்ட வீரர்கள் கூட எதோ ஒரு விதத்தில் தமது வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொண்டு தமக்கும், தமது விளையாட்டுக்கும், உரிய அதிகார சபைக்கும் எந்த ஒரு கலங்கமும் ஏற்படாத வகையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.”

இறுதியாக கருத்து தெரிவித்த திரு.ரொட்ரிகோவிளையாட்டில் பிரகாசிக்க எண்ணும் வீரர்கள் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இலங்கையின் விளையாட்டின் தரம் முன்னேற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்என நிறைவு செய்தார்.

ஒரு உயர் அதிகாரி வெளியிட்ட இவ்வாறான கருத்தின் மூலம் உண்மையிலேயே தவறு சன்னவின் மீதா அல்லது சம்மேளனத்தின் மீதா என்பது குழப்பமாகியுள்ளது.