மார்க் அடைரின் அபார பந்துவீச்சில் ஆப்கானை வீழ்த்தியது அயர்லாந்து

137
Image Courtesy -AFP

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெல்பாஸ்ட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் போல் ஸ்டேர்லிங் மற்றும் வில்லியம் போர்டர்பீல்ட் ஆகியோரது அரைச் சதங்கள் மற்றும் மார்க் அடைரின் அசத்தல் பந்துவீச்சின் உதவியால் 72 ஓட்டங்களினால் அயர்லாந்து அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. இதனால், அவ்வணி 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

மொசாடிக், சர்கார் அபாரம்: வரலாறு படைத்த பங்களாதேஷ் அணி

மேற்கிந்திய தீவுகள் – பங்களாதேஷ் அணிகள் மோதிய முத்தரப்பு….

உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக ஐக்கிய இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரை 10 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

இந்த நிலையில், அயர்லாந்துஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று (19) பெல்பாஸ்ட் நகரில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் குல்பதீன் நயீப் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கினார்.

இதன்படி, களமிறங்கிய அயர்லாந்து அணி தடுமாற்றத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. ஜேம்ஸ் மெக்கலம் மற்றும் அண்டி போல்பெர்னி ஆகியோர் தலா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற அயர்லாந்து அணி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், மூன்றாவது விக்கெட்டுக்காக, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் போல் ஸ்டேர்லிங்குடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் வில்லியம் போர்டர்பீல்ட் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

இலங்கை ஏ அணியில் விளையாடுவதை புறக்கணித்த சந்திமால்

இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வாய்ப்பை இழந்த……

நிதானமாக ஓட்டங்களை குவித்த இருவரும் 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ஷித் கானின் பந்தில் வில்லியம் போர்டர்பீல்ட் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய போல் ஸ்டேர்லிங் 71 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனையடுத்து வந்த பின்வரிசை வீரர்களும் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, அயர்லாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களைக் குவித்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அப்தாப் அலாம் மற்றும் தல்வத் சத்ரான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷித் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், ஓரளவு இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்திருந்தனர். மொஹமட் ஷெசாத் (02), ரஹ்மத் ஷா(04), ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய் (14) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.   

தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த அவ்வணி ஒரு கட்டத்தில் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

எனினும், தொடர்ந்து வந்த அஸ்கர் ஆப்கான் (29), மொஹமட் நபி (27), அணித் தலைவர் குல்பதின் நயீப் (20) ஆகியோர் ஆறுதல் கொடுக்க, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஏமாற்றம் கொடுத்தனர்.

அதிகம் பேசப்படாத இலங்கையின் நாயகன் டில்ஹார பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கெட் அணி இப்போது பலராலும்…..

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 35.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 மாத்திரமே பெற்று 72 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

அயர்லாந்து அணி சார்பில் 23 வயதான வலதுகை வேகப் பந்துவீச்சாளரான மார்க் அடைர் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, போய்ட் ரென்கின் 3 விக்கெட்டுகளையும், டிம் முர்டேங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்த வெற்றியானது அயர்லாந்து அணி 5 போட்டிகளின் பிறகு பெற்றுக்கொண்ட முதல் வெற்றியாகப் பதிவாகியது. இறுதியாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அவ்வணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை (21) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து அணி – 210/10 (48.5) – போல் ஸ்டேர்லிங் 71, வில்லியம் போர்டர்பீல்ட் 53, கெவின் பிரையன் 32, அப்தாப் அலாம் 3/28, தல்வத் சத்ரான் 3/35, ஷித் கான் 2/41

ஆப்கானிஸ்தான் அணி – 138/10 (35.4) – அஸ்கர் ஆப்கான் 29, மொஹமட் நபி 27, குல்பதின் நயீப் 20, மார்க் அடைர் 4/19, போய்ட் ரென்கின் 3/40, டிம் முர்டேங் 2/12

முடிவு அயர்லாந்து அணி 72 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<