ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி

77
Image - news.rooter.io

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது அடுத்த மாத ஆரம்பத்தில் இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டுக்கு குறுகியகால சுற்றுப்பயணம் மேற்கொண்டு அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள குறித்த இருதரப்பு தொடரில் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட டி20 தொடர் போன்ற இரு தொடர்கள் நடைபெறவுள்ளது. குறித்த சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணையை அயர்லாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.  

உலகக் கிண்ணத்தின் துரதிஷ்ட பதிவுக்குள்ளான இலங்கை அணி

ஒருநாள் சர்வதேச தொடருக்கான அட்டவணை

  • 1 ஜூலை – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – பிரேடி
  • 4 ஜூலை – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – பெல்பாஸ்ட்
  • 7 ஜூலை – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – பெல்பாஸ்ட்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நடைமுறையிலுள்ள ஒருநாள் சர்வதேச அணிகளின் தரவரிசைப்படி ஜிம்பாப்வே அணி 54 தரவரிசை புள்ளிகளுடன் 11 ஆவது இடத்திலும், அயர்லாந்து அணி 45 தரவரிசை புள்ளிகளுடன் 12 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

டி20 சர்வதேச தொடருக்கான அட்டவணை (அனைத்து டி20 போட்டிகளும் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது)

  • 10 ஜூலை – முதலாவது டி20 சர்வதேச போட்டி – பெல்பாஸ்ட்
  • 12 ஜூலை – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – பிரேடி
  • 14 ஜூலை – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – பிரேடி

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நடைமுறையிலுள்ள டி20 சர்வதேச அணிகளின் தரவரிசைப்படி ஜிம்பாப்வே அணி 192 தரவரிசை புள்ளிகளுடன் 13 ஆவது இடத்திலும், அயர்லாந்து அணி 182 தரவரிசை புள்ளிகளுடன் 15 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

இதேவேளை சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இருதரப்பு கிரிக்கெட் தொடரை நிறைவு செய்ததன் பின்னர் அயர்லாந்து அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

சிறப்புமிக்க லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள குறித்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியானது அடுத்த மாதம் (ஜூலை) 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் அணியானது கடந்த 2017 ஜூன் 22 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட் அந்தஸ்து பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் அயர்லாந்து அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டியொன்றில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்திலிருந்து முழுமையாக விலகும் நிலையில் ஷிகர் தவான்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நடைமுறையிலுள்ள டெஸ்ட் அணிகளின் தரவரிசைப்படி இங்கிலாந்து அணி 105 தரவரிசை புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. ஆனால் அயர்லாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள காரணத்தினால் இன்னும் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<