.பி.எல் தொடரில் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர்அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் போராட்டத்தை முறியடித்து டேவிட் வோனர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

இவ்வருட கிரிக்கெட் சமர்களின் சிறப்பாட்டங்களின் தொகுப்பு

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி தொடக்க வீரர்களாக அணித் தலைவர் வோனர்தவான் ஜோடி களமிறங்கியது.

அதில் 7 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கிறிஸ் மோரிஸ் வேகத்தில் வோனர் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்தார் கேன் வில்லியம்சன். இருவரும் டெல்லி பந்து வீச்சை சிதறடிக்க, அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயரத் தொடங்கியது.   

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த ஐதராபாத் அணி 191 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியில் தவான் 70 (50) ஓட்டங்களையும், வில்லியம்சன் 89 (51) ஓட்டங்களையும் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தனர். டெல்லி சார்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக வந்த சஞ்சு சம்சன்சாம் பில்லிங்ஸ் இருவரும் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் சாம் பில்லிங்ஸ் 13 (9) ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயர், சஞ்சு சம்சனுடன் இணைந்து அதிரடி காட்ட அணியின் ஓட்ட வேகம் அதிகரித்தது.

சஞ்சு சம்சன் 42 (33) ஓட்டங்களிலும், நாயர் 33 (23) ஓட்டங்களிலும் வெளியேற, பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர்மெதிவ்ஸ் ஜோடி அதிரடி காட்டத் தொடங்கியது.

எனினும் கடைசி ஓவருக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்த சித்தார்த் கவுல், அபாரம் காட்டி வந்த மெதிவ்சின் (31) விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்று, 15 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

கிறிஸ் கெயிலின் அரிய சாதனையுடன் குஜராத் லயன்சை வீழ்த்தியது பெங்களூர்

அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 (31) ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணியின் சார்பாக சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : 191/4(20) – கேன் வில்லியம்சன் 89(51), தவான் 70(50), மோரிஸ் 4/26

டெல்லி டேர்டெவில்ஸ் : 176/5(20) – ஸ்ரேயாஸ் ஐயர் 50 (31), சஞ்சு சம்சன் 42 (33), மத்தியுஸ் 31(23), சிராஜ் 2/39