”ஜெய் கோ” என்ற பாடலுடன் ஆரம்பமான பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் போட்டிகளின் கோலாகலமான ஆரம்ப நிகழ்வுகள் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி என்பவற்றுடன் நேற்று ஆரம்பமாகியது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குறிய இந்த தொடர்.

IPL போட்டிகளை பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இலங்கை ரசிகர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சற்றே ஓய்ந்திருக்கும் வேளையில்..

நேற்றைய தினம் (புதன்கிழமை) ஹைதராபாத்தில் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விரேந்திர செவாக், சௌரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஷ்மன் ஆகிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளான வினோத் ராய், சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி, ராஜீவ் சுக்லா ஆகியோர் இவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கினர்.

ஆரம்ப நிகழ்வின்போது
ஆரம்ப நிகழ்வின்போது @IPL official site

இதனைத் தொடர்ந்து ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் மற்றும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் தலைவர்களான விராட் ஹோலி மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் இருவரும் இணைந்து பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் கிண்ணத்தினை அறிமுகம் செய்து வைத்ததுடன், நடப்புச் சம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் 2017ஆம் ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்துடன் வலம் வந்தார்.

இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டுக்கான .பி.எல் தொடர் விண்னைப் பிளந்த வண்ண வானவேடிக்கைகள் மற்றும் நடிகை எமி ஐாக்சனின் துள்ளல் நடனம் என்பவற்றுடன் ஆரம்பமானது.

இந்த பருவகால ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி வரை 41 நாட்களுக்கு நடைபெறவுள்ளன. எட்டு அணிகள் விளையாடவுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 14 போட்டிகளில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள்பிளேஓப்சுற்றில் விளையாட தகுதி பெறும்.

ஆரம்ப நிகழ்வின்போது
ஆரம்ப நிகழ்வின்போது @IPL official site

முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஹைதராபாத் வெற்றி

பத்தாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஹைதராபாத் அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களுர் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அதிர்ச்சி கொடுக்குமா இன்று ஆரம்பமாகும் 10ஆவது ஐ.பி.எல்?

விறுவிறுப்பிற்கும், சுவாரசியங்களுக்கும் என்றுமே பஞ்சம் இல்லாத இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் திருவிழாவின்..

துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய யுவராஐ் சிங் 7 பெளண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கலாக 62 ஓட்டங்களையும், ஹென்றிக்ஸ் 3 பெளண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கலாக 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.  அதேபோன்று, ஷிகர் தவான் 5 பெளண்டரிகள் அடங்களாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்

ஆரம்ப நிகழ்வின்போது @IPL official site
ஆரம்ப நிகழ்வின்போது @IPL official site

இதனைத் தொடர்ந்து 208 என்ற வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பெங்களுர் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 35 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் பெங்களுர் அணி சார்பில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எவரும் பிரகாசிக்கவில்லை என்றாலும் கிறிஸ் கெயில் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

பந்து வீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் அஷிஷ் நேரா, புவனேஸ் குமார் மற்றும் ரஷிட் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

இந்த போட்டியில் 62 ஓட்டங்கள் குவித்த யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

முதல் போட்டியிலேயே நடப்புச் சம்பியன் ஹைதராபாத் அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்று, தமது வெற்றி நடையை ஆரம்பித்துள்ளது.