ஊக்கமருந்து சர்ச்சையினால் ரஷ்யாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை

111

ரஷ்ய நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி பதக்கம் வென்றமை பலமுறை நிரூபிக்கப்பட்டதால், அடுத்தாண்டு தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஈடுபட அந்த நாட்டுக்கு தடை விதிப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிய பாடசாலைகள் நகர் வல ஓட்டத்தில் இலங்கைக்கு 2 சம்பியன் பட்டங்கள்

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான நகர் வல ஓட்ட சம்பியன்ஷிப்…

மெய்வல்லுனர் அரங்கில் அதிகளவு பதக்கங்ளை வெல்லும் நோக்கில் ரஷ்ய நாட்டு மெய்வல்லுனர் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானது. இதற்கு ரஷ்ய அரசும் ஆதரவாக இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த வருடம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்களுக்கு பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. எனினும், சர்வதேச ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தால் ரஷ்ய வீரர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அதில் தேறிய வீரர்களுக்கு மாத்திரம் ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், 2016 மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்நாட்டைச் சேர்ந்த் 1000இற்கும் அதிகமான வீரர்கள் (30 விளையாட்டுக்கள்) ஊக்கமருந்து பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக 2014இல் சோர்ச்சியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் 20 ரஷ்ய வீரர்களுக்கு கடந்தமாதம் வாழ்நாள் தடை விதிக்கவும் சர்வதேச ஒலிம்பிக் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையிலேயே ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அடுத்தாண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் பேரவை தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் இறுதி முடிவெடுக்க சுவிட்சர்லாந்தின் லொசன்னே நகரில் சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் கூட்டம் நேற்று (05) நடைபெற்றது. ரஷ்ய அதிகாரிகளின் உதவியுடன் வீர, வீராங்கனைகள் ஊக்கமருத்து பயன்படுத்தியது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக காரசாரமான விவதாங்களுடம் தெரிவிக்கப்பட்டன. இதன்போது, பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தன.

தடகள மன்னன் போல்ட்டுக்கு உருவச்சிலை; மீண்டும் சேதமாக்கப்பட்ட மெஸ்சியின் உருவச்சிலை

தடகள மன்னன், ஓய்வுபெற்ற உசைன் போல்ட்டுக்கு சொந்த…

அத்துடன், குறித்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாமுவேல் ஸ்மிட் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் சுமார் 17 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின்படி சமர்பிக்கப்பட்ட அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன. அவ்வறிக்கையில் சர்வதேச ஊக்கமருந்து சட்டவிதிகளை மீறியதாக அந்நாட்டு அரசுக்கும், மெய்வல்லுனர் வீரர்களுக்கும் எதிராக பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

REUTERS

இவ்வனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு ரஷ்யாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவர் தோமஸ் பட்ச் அறிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் ஒலிம்பிக் விளையாட்டின் நன்மதிப்புக்கு மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தியிருந்ததாகவும், இனிமேலும் ஊக்கமருந்து சர்ச்சையில் எந்தவொரு வீரரும் ஈடுபடக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக்..

எனவே, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் ரஷ்ய ஒலிம்பிக் சங்கத்தை இரத்து செய்யவதாகவும், அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் அலெக்ஸான்டர் சுகேவ்வின் உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.

Photo by Shaun Botterill

அத்துடன், இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பேரவையுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு ரஷ்யாவின் பிரதமர் விடாலி முட்கோ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இதில் அந்நாட்டு பிரதமரும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான விடாலி, அடுத்த வருடம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ரஷ்ய வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஊக்கமருந்து பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சர்வதேச ஒலிம்பிக் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் பழைமையான விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் வரலாற்றில் ஊக்கமருந்து சர்ச்சையில் நாடொன்றுக்கு தடைவிதிக்கப்பட்டமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.