இவ்வருட ஒலிம்பிக் தின நிகழ்வுகள் அம்பாறையில்

171

ஒலிம்பிக் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 23ஆம் திகதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடத்திற்கான ஒலிம்பிக் தின நிகழ்வுகளை நாளை (23ஆம் திகதி) அம்பாறை மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உலகில் உள்ள மிகப் பெரிய சம்மேளங்களில் ஒன்றான சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 1894ஆம் அண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் காரணமாகவே, குறித்த தினத்தில் ஒலிம்பிக் தினம் கொண்டாட்டப்பட்டு வருகின்றது.

விளையாட்டின் மூலம் ஒற்றுமை மற்றும் அமைதியைக் கட்டியெழுப்ப மற்றொரு முயற்சி

ஜக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு ஆகியன இணைந்து 2014ஆம்..

அந்த வகையில், இம்முறை இலங்கையில் இடம்பெறும் குறித்த தின நிகழ்வுகள்ஒலிம்பிக் விழுமியங்களுக்கான கல்விச் செயற்பாடுமற்றும்ஒலிம்பிக் விழுமியங்களுக்கான கலை காட்சிபோன்ற பிரதான கருக்களில் இடம்பெறவுள்ளன.

ஆசிரியர்களுக்கான செயலமர்வாக இடம்பெறவுள்ளஒலிம்பிக் விழுமியங்களுக்கான கல்விச் செயற்பாடுகுறித்த நிகழ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் அம்பாறை டி.எஸ் சேனனாயக்க கல்லூரியில் இடம்பெறவுள்ளன.

அதேபோன்று, ஒலிம்பிக் விழுமியங்களுக்கான கலை காட்சிகள் அம்பாறை மகாவாபி விகாரையில் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வுகளின் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு சிறுவர்களுக்கான ஒலிம்பிக் தின ஓட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பங்கு கொள்ளும் மாணவர்கள் அனைவரும் குறித்த ஓட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

இந்நிகழ்வு குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த இலங்கை ஒலிம்பிக் குழுவின் தேசிய கற்கைகள் பணிப்பாளர் S. கோபினாத், ”ஒவ்வொரு வருடமும் இலங்கையிலும் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு இம்முறை அம்பாறையில் கொண்டாடப்பட உள்ளது. இதில், விளையாட்டின் மூலம் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் முறைகள் குறித்து விஷேட அறிவுரைகள் வழங்கப்படும்.

யுத்தத்தின் பின்னரான இந்நாட்டில் அனைத்து இன, மத மக்களிடமும் அமைதி அவசியமாகின்றது. எனவே, ஒலிம்பிக் விழுமியங்களை உணர்த்துவதன்மூலம் சமூகத்தில் உன்னதமானவர்களை உருவாக்கலாம்” எனத் தெரிவித்தார்.

விளையாட்டுடன் தொடர்புடைய இவ்வாறான முக்கிய தின நிகழ்வுகளை கொண்டாடும் முறைமை தற்பொழுது இலங்கையில் சற்று அதிரித்து வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச விளையாட்டு தின நிகழ்வுகள் இம்முறை முதல் முறையாக யாப்பாணத்தில் விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.