ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார்

95

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

மன்செஸ்டர் யுனைடட் எதிர் வட்போர்ட்

ப்ரூனோ பெர்னாண்டோ தனது புதிய கழகத்திற்காக முதல் கோலை பெற்ற நிலையில் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. 

1000ஆவது போட்டியில் விளையாடிய ரொனால்டோ: அடுத்தடுத்து 4 கோல்கள் பெற்ற மெஸ்ஸி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் …..

இதன்மூலம் முதல் நான்கு இடங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில்  5 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் மன்செஸ்டர் யுனைடட் 3 புள்ளிகளாலேயே பின்தங்கி உள்ளது. 

மறுபுறம், கடந்த டிசம்பரில் மன்செஸ்டர் யுனைடட்டை வீழ்த்தியபோதும் வட்போர்ட் இந்த தோல்வியினால் தகுதி இழப்பு நிலையான 19 ஆவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த நான்கு போட்டிகளில் அந்த அணி எந்த வெற்றியையும் பதிவுசெய்யவில்லை.       

எனினும் இந்தப் போட்டியை மன்செஸ்டர் யுனைடட் தடுமாற்றத்துடனேயே ஆரம்பித்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே வட்போர்ட் முன்கள வீரர் ட்ரோய் டீனிக்கு கோல் பெற பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அதனை அவர் தவறவிட்டார். 

இந்நிலையில் 42 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்குள் வட்போர்ட் கோல்காப்பாளர் பென் பொஸ்டர் கீழே வீழ்த்தியதால் கிடைத்த ஸ்பொட் கிக்கை பெர்னாண்டஸ் கோலாக மாற்றினார். பெர்னாண்டஸ் கடந்த ஜனவரியில் ஸ்போர்டிங் லிபோன் அணியில் இருந்து மன்செஸ்டர் யுனைடட்டிற்கு 47 மில்லியன் பௌண்ட்களுக்கு ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.      

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் வட்போர்ட் சார்பில் டீனி பந்தை மன்செஸ்டர் யுனைடட் வலைக்கு செலுத்தியபோதும் அது வீடியோ நடுவர் உதவி நாடப்பட்டது. அப்போது பந்து கிரேக் டோசனில் கைகளில் பட்டது உறுதியானதை அடுத்து கோல் நிராகரிக்கப்பட்டது.  

இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக அமிர் அலஜிக் நியமனம்

இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய தலைமைப் ……

இந்நிலையில் 58 ஆவது நிமிடத்தில் அன்தோனி மார்சல், யுனைடட் சார்பில் இரண்டாவது கோலை புகுத்தினார். தொடர்ந்து போட்டி முடிவதற்கு 15 நிமிடங்கள் இருக்கும்போது மேசன் கிரீன்வூட் மேலும் ஒரு கோலை பெற்று யுனைடட்டின் வெற்றியை இலகுவாக்கினார்.   

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் செல்சியை 2-0 என தோற்கடித்த யுனைடட் அணி இந்தப் பருவத்தில் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெறுவது இது மூன்றாவது தடவையாகும். 

ஆர்சனல் எதிர் எவர்டன்

பெர்ரி எமரிக் அபுமயங்கின் இரட்டை கோல் உதவியுடன் எவர்டர் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சனல் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

போட்டியின் முதல் நிமிடத்திலேயே சிறப்பாக வழங்கப்பட்ட ப்ரீ கிக்கை ஆர்சனல் தடுக்கத் தவறியதால் டொமினிக் கெல்வேர்ட் லுவிஸ் தலையால் முட்டி எவர்டன் அணியை முன்னிலை பெறச் செய்தார். 

ஆரம்ப நிமிடங்களிலேயே காயமுற்ற சீட் கொலசினக்கிற்கு பதில் வீரராக அனுப்பப்பட்ட பதின்ம வயது புகாவோ சகா வந்த விரைவிலேயே பரிமாற்றிய பந்தைக் கொண்டு எட்வர்ட் நிகடியா ஆர்சனல் சார்பில் பதில் கோல் திருப்பினார்.  

இந்நிலையில் அபுமயங் 33 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் ஆர்சனல் போட்டியில் முன்னிலை பெற்றபோதும் ரிச்சார்ல்சன் பதில் கோல் திருப்ப மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.  

முதல் பாதி ஆட்டம் 2-2 என முடிவுற்ற நிலையில் இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்திலேயே நிகொலஸ் பபே உதைத்த பந்தை ஆறு யார்ட் பெட்டிக்கு சற்று வெளியில் நின்று தலையால் முட்டிய அபுமயங் கோலாக மாற்றினார்.  

ஆர்சனல் ஒரு வாரத்திற்குள் நியூகாசில் யுனைடட்டிற்கு எதிராக 4-0 என ப்ரீமியர் லீக் வெற்றி மற்றும் ஐரோப்பிய லீக்கில் ஒலிம்பிக்காவுக்கு எதிராக 1-0 என வெற்றி என்று அடுத்தடுத்து மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது. 

இதன்படி, ஐந்து போட்டிகளில் ஆர்சனல் பெறும் நான்காவது வெற்றி இதுவென்பதோடு 2020இல் தோல்வியுறாத அணியாக நீடித்து வருகிறது. ப்ரீமியர் லீக்கில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கும் ஆர்சனல் சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறும் முதல் நான்கு இடங்களை பிடிக்க ஏழு புள்ளிகளால் பின்தங்கியுள்ளது.  

மறுபுறம் 36 புள்ளிகளுடன் 11 ஆவது இடத்தில் நீடிக்கு எவர்டன் கடந்த 24 ஆண்டுகளில் ஆர்சனல் அணியை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் போர்டியுக்ஸ்

போர்டியுக்ஸ் அணியை 4-3 என தோற்கடித்த பரிஸ் செயின்ட் ஜெர்மைன் லீக் 1 புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகள் வித்தியாசத்துடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனினும், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். 

வலன்சியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அடலான்டா: டொட்டன்ஹாமுக்கு நெருக்கடி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (20) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் ….

மார்குயின்ஹோஸ் இரட்டை கோல் பெற எடிசன் கவானி PSG சார்பில் 200 ஆவது கோலை பெற கிலியன் ம்பப்பே 65 ஆவது நிமிடத்தல் மற்றொரு கோலை பெற்றதன் மூலம் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது. 

இதன்மூலம் PSG 26 போட்டிகளில் 65 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றபோதும் அந்த அணியின் தலைவர் தியாகோ சில்வா காயம் காரணமாக விளையாட முடியாதிருப்பதோடு நெய்மார் போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றது அந்த அணிக்கு பின்னடைவாகும்.   

மறுபுறம் போர்டியுக்ஸ் அணி ஹ்வாங் உயி ஜோ, பப்லோ மற்றும் ரூபன் மூலம் கோல்கள் பெற்று கடைசி நிமிடம் வரை எதிரணிக்கு சவால் கொடுத்தது. அந்த அணி தற்போது 35 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தில் உள்ளது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<