ரியல் மெட்ரிட்டுக்கு இலகு வெற்றி: ஜுவன்டஸை மீட்டார் ரொனால்டோ

85

ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களில் முக்கிய போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (31) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு

ரியல் மெட்ரிட் எதிர் லெகெனஸ் 

லெகெனசுக்கு எதிரான போட்டியில் 5-0 என இலகு வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் ஒரு புள்ளி இடைவெளியில் இரண்டாவது இடத்திற்கு முன்னெற்றம் கண்டது. 

மெஸ்ஸியின் இரட்டை கோலால் லா லிகாவில் பார்சிலோனா முதலிடம்

லியோனல் மெஸ்ஸியின் இரட்டைக் கோல் மற்றும் இரண்டு ……

பிரேசில் பதின்ம வயது வீரர் ரொட்ரிகோ பெற்ற கோல் மூலம் 7ஆவது நிமிடத்தில் முன்னிலையை எட்டிய ரியல் மெட்ரிட்டுக்கு அடுத்து 90 வினாடிகளுக்குள் டோனி க்ரூஸ் இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.  

தனது முதலாவது கோல் முயற்சி தடுக்கப்பட்ட நிலையில் அணித்தலைவர் செர்ஜியோ ராமோஸ் பெனால்டி மூலம் கோல் ஒன்றை பெற்றார். இந்நிலையில் இரண்டாவது பாதியில் ரியல் மெட்ரிட்டுக்கு மற்றொரு பெனால்டி கிடைக்க அதனை கரிம் பென்சமா கோலாக மாற்றினார்.

தொடர்ந்து போட்டியின் மேலதிக நேரத்தில் லூகா ஜோவிக் தலையால் முட்டி ரியல் மெட்ரிட்டுக்கு ஐந்தாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.  

அரசியல் பதற்றம் காரணமாக வார இறுதியில் நடைபெறவிருந்த பார்சிலோனாவுக்கு எதிரான எல் கிளசிகோ போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தனது முந்தைய லீக் போட்டியில் மலகா அணியிடம் சந்தித்த தோல்விக்கு ரியல் மெட்ரிட் சிறந்த பதில் கொடுத்துள்ளது.      

ஜுவன்டஸ் எதிர் கெனோ

ஆட்டத்தின் 96ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற பெனால்டி கோல் மூலம் கெனோ அணியுடனான போட்டியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஜுவன்டஸ் சிரீ A புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு மீண்டது. 

போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் லியோனாம் பனுக்கி பெற்ற கோல் மூலம் ஜுவன்டஸ் முன்னிலை பெற்றபோதும் 4 நிமிடங்களுக்குள் கிறிஸ்டியன் குவாமே பதில் கோல் திருப்பினார். இழுபறியோடு நீடித்த போட்டியின் கெனோ அணி பிரான்சிஸ்கோ கொசட்டே சிவப்பு அட்டை பெற்றதால் அந்த அணி பாதிப் போட்டியை 10 வீரர்களுடனேயே ஆடியது.

மறுபுறம் 87ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் அன்ட்ரியோ ரபியோட் வெளியேற்றப்பட்டதால் ஜுவன்டசும் 10 வீரர்களுடன் ஆட வேண்டி ஏற்பட்டது. 

எனினும் போட்டி முடியும் தறுவாயில் ரொனால்டோ கிடைத்த பெனால்டி கிக்கை கோலாக மாற்றினார். 

இந்தப் போட்டியில் 41 வயதான கோல் காப்பாளர் பப்போன் களமிறங்கியதன் மூலம் அவர் ஜுவன்டஸ் அணிக்காக 513 லீக் போட்டிகளில் களமிறங்கிய அலெசன்ட்ரோ டெல் பீரோவின் சாதனையை சமன் செய்தார். 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<