செல்சி முதல் வெற்றி; மான்செஸ்டர் யுனைடட் அதிர்ச்சி தோல்வி

98

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் இன்று (24) நடைபெற்ற இரண்டு முக்கிய போட்டிகளில் செல்சி அணி போராடி வெற்றி பெற்றதோடு மான்செஸ்டர் யுனைடட், கிறிஸ்டல் பௌஸிடம் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

அதேபோன்று ஜெர்மனியின் புன்டஸ்லிகா தொடரில் பலம் பெற்ற பொருசியா டுட்மண்ட் இன்று நடைபெற்ற போட்டியில் இலகு வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது. 

ப்ரீமியர் லீக்கில் முதல் வெற்றிக்காக போராடும் செல்சி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயினின் லா லிகா மற்றும் பிரான்ஸின் லீக் 1 தொடர்களின்…

டொம்மி அப்ரஹாம் பெற்ற இரண்டு அபார கோல்கள் மூலம் நோர்விக் அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செல்சி அணி இந்தப் பருவத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. 

போட்டி ஆரம்பித்து 3 ஆவது நிமிடத்திலேயே அப்ரஹாம் மூலம் செல்சி தனது முதல் கோலை புகுத்தியது. 24 வயதான அப்ரஹாம் 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ப்ரீமியர் லீக்கில் செல்சிக்காக விளையாடும் இளம் வீரராகவே இந்தப் போட்டியில் களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் நோர்விக் அணி, டொட் கெட்வெல் மூலம் பதில் கோல் திருப்பியது.  

இந்நிலையில் முதல் பாதியின் நடுப்பகுதியில் மேசன் மௌண்ட் கோல் புகுத்த செல்சி மீண்டும் முன்னிலை பெற்ற போதும் டீமு புக்கி (Teemu Pukki) கடினமான கோல் ஒன்றை பெற்று போட்டியை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவந்தார்.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய செல்சி அணிக்காக அப்ரஹாம் 68 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை திருப்ப அது அந்த அணியின் வெற்றி கோலாக மாறியது.  

இந்த வெற்றியின் மூலம் நோர்விக் அணியுடனான கடந்த பதினாறு போட்டிகளில் தோல்வியுறாத அணியாக செல்சி நீடித்து வருகிறது.  

இதேவேளை வான் ஆன்ஹோல்ட் கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கிறிஸ்டல் பெளஸ் ஓல்ட் டிரபர்டில் 1989 இற்குப் பின் தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. 

93 ஆவது நிமிடத்தில் வைத்து மான்செஸ்டர் யுனைடட் பின்கள வீரர்களிடையே ஏற்பட்ட தடுமாற்றத்தை பயன்படுத்தி ஆன்ஹோல்ட் நெருக்கமான தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தி கிறிஸ்டல் பெளஸின் வெற்றியை உறுதி செய்தார். 

எனினும் போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பெளஸ் வீரர் ஜோர்டன் அயெவ் நெருக்கடி இன்றி கோல் ஒன்றை பெற்றார். இந்நிலையில் பதில் கோல் திருப்ப போராடிய மான்செஸ்டர் யுனைடட் அணி ஸ்பொட் கிக் ஒன்றை தவறவிட்டது அந்த அணிக்கு பெறும் ஏமாற்றமாக அமைந்தது. மார்கஸ் ரஷ்போர்ட் உதைத்த அந்தப் பெனால்டி கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. 

முதல் பாதியில் போராடிய இலங்கை நேபாளத்திடம் வீழ்ந்தது

தற்போது நடைபெற்று வரும் 15 வயதின்கீழ் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன…

மான்செஸ்டர் யுனைடட் அணி இந்த வாரத்தில் தவறவிட்ட இரண்டாவது பெனால்டி உதை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும் டானில் ஜேம்ஸ் கோல் புகுத்தி யுனைடட் அணிக்காக பதில் கோல் ஒன்றை திருப்பினார்.      

இதேவேளை ஜெர்மன் லீக்கில் புதிதாக முன்னேற்றம் கண்ட கோன் கழகத்திற்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டி பொருசியா டோர்ட்முண்ட், புன்டஸ்லிகா பருவத்தில் தனது முதல் இரண்டு போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<