செல்சியை வீழ்த்தி நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்ட மன்செஸ்டர் யுனைடட்

65

செல்சி அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. 

செல்சியின் சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் இலங்கை நேரப்படி இன்று (18) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் மன்செஸ்டர் யுனைடட் 38 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் அந்த அணி 3 புள்ளிகளாலேயே பின்தங்கியுள்ளது. 

லிவர்பூல் தொடர்ந்து வெற்றி: மெட்ரிட்டுடன் புள்ளிகளை சமன் செய்த பார்சிலோனா

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் ………

மன்செஸ்டர் யுனைடட் அணி 1964-65 பருவத்திற்குப் பின் செல்சி அணிக்கு எதிராக கோல் விட்டுக்கொடுக்காமல் லீக் தொடரில் இரட்டை வெற்றிகளை பெற்றது இது முதல் முறையாகும். அதேபோன்று 1987-88 பருவத்திற்கு பின்னர் செல்சி அணிக்கு எதிராக மன்செஸ்டர் யுனைடட் இரட்டை லீக் வெற்றிகளை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.  

உச்ச பரபரப்பு கொண்டதாக ஆரம்பமான இந்தப் போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் அதிகம் வாய்ப்புகளை பெற்று நெருக்கடி கொடுத்த நிலையில் சொந்த மண்ணில் செல்சி அணி தடுமாற்றத்துடனேயே விளையாடியது.  

போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடியும் நேரத்தில் அன்தோனியோ மார்சியல் மன்செஸ்டர் யுனைடட்டை முன்னிலை பெறச் செய்தார். அரோன் வான் பிசக்கா பரிமாற்றிய பந்தை அவர் வலைக்குள் புகுத்தினார். 

முதல் பாதி: மன்செஸ்டர் யுனைடட் 1 – 0 செல்சி

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே கோர்ட் சவுமா செல்சி சார்பில் பதில் கோல் திருப்பியபோதும் அது சர்ச்சைக்குரியதாக இருந்தது. தொலைக்காட்சி நடுவர் உதவி மூலம் பரிசோதிக்க, அந்த கோல் கோனர் கிக் கிடைத்த பின் செல்சி பின்கள வீரர் சீசர் அஸ்பிலிகுடா மன்செஸ்டர் யுனைடட் பின்கள வீரரை தள்ளிவிட்ட நிலையிலேயே கோல் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.    

இதன்போது மிச்சி பட்சுயை உதைத்து சிவப்பு அட்டையில் இருந்து தப்பிய ஹர்ரி மகுயிரே 66 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக இரண்டாவது கோலை புகுத்தினார். ப்ரூனோ பெர்னான்டஸின் கோனரை தலையால் முட்டியே அணித் தலைவரான மகுயிரே அந்த கோலை புகுத்தினார். 

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்: யாருக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு?

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இரண்டாவது ………

இந்நிலையில் செல்சி அணி பெற்ற மற்றொரு கோலும் நிராகரிக்கப்பட்டது. 76 ஆவது நிமிடத்தில் மேசன் மௌன்ட் உதைத்த ப்ரீ கிக்கை ஒலிவியர் கிரௌட் தலையால் முட்டி வலைக்குள் புகுத்தினார். ஆனால் அப்போது அவரது கால் ஓப் சைட் நிலையில் இருந்ததாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.  

முழு நேரம்: மன்செஸ்டர் யுனைடட் 2 – 0 செல்சி

கோல் பெற்றவர்கள்

மன்செஸ்டர் யுனைடட் –  அன்தோனியோ மார்சியல் 45’, ஹர்ரி மகுயிரே 66’

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<