கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதி மோதலை அலங்கரித்த சுவாரசியங்கள்

2776
Image Courtesy : AFP

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 12ஆவது அத்தியாயம், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியுடன் நேற்று (14) நிறைவுக்கு வந்தது. 

போராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லோர்ட்ஸ்….

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியினை சுப்பர் ஓவர் மூலம் தோற்கடித்து கிரிக்கெட் உலகக் கிண்ண சம்பியன்களாக முதல்தடவை நாமம் சூடியிருந்தது. 

இதேநேரம், இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அதனை சுவாரசியமாக மாற்றும் சில சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

சுபர் ஓவர் வீசப்பட்ட முதல் ஒருநாள் சர்வதேச போட்டி 

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாக முன்னர், இத் தொடரின் நொக்அவுட் (அரையிறுதி, இறுதி) போட்டிகள் சமநிலை அடையும் போது குறித்த போட்டிகளில் வெற்றியாளரினை தீர்மானிக்க சுப்பர் ஓவர் வீசப்படும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) குறிப்பிட்டிருந்தது.  

அதன்படி, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் தலா 241 ஓட்டங்கள் பெற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி சமநிலையடைந்தது. இதனால், உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவர் வீசப்பட்டதோடு, இந்த போட்டியே வரலாற்றில் சுப்பர் ஒவர் வீசப்பட்ட முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியாகவும் அமைந்தது. 

வெற்றி தீர்மானிக்கப்பட்ட விதம் ஏமாற்றமளிக்கிறது: வில்லியம்சன்

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து…..

தொடர்ந்து சுப்பர் ஓவரிலும் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் சம ஓட்டங்களை (15) பெற, இறுதிப் போட்டியில் பெற்ற பௌண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கிண்ண சம்பியன்களாக மாறிக் கொண்டது. 

இலங்கை அணியின் கதையை ஞாபகமூட்டிய நியூசிலாந்து 

கடந்த 2007, 2011ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தொடர்ச்சியாக தெரிவாகியிருந்தது. எனினும், குறித்த இறுதிப் போட்டிகளில் இலங்கை அணியினை எதிர்த்து ஆடிய அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளே சம்பியன் பட்டம் வென்றன. 

இந்நிலையில் நியூசிலாந்து அணியும் இலங்கை அணியின் கதையினை இந்த ஆண்டுக்கான (2019) உலகக் கிண்ணம் மூலம் ஞாபகமூட்டியிருந்தது. நியூசிலாந்து அணி 2015, 2019 என இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு தொடர்ச்சியாக தெரிவாகிய போதிலும், இரண்டு தடவைகளும் நியூசிலாந்தினை எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளே உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன.

இதேநேரம் நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கு முன்னர் 1987, 1992 ஆம் ஆண்டுகளின் உலகக் கிண்ணத் தொடர்களில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகி தொடர்ச்சியாக தோல்விகளை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை வீரர்களின் சாதனையை முறியடித்த ஜேசன் ரோய் – பெயர்ஸ்டோ

தற்சமயம் நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.சி.சி உலகக் கிண்ண…..

44 வருடங்களின் பின்னர் நனவான இங்கிலாந்து அணியின் கனவு 

கிரிக்கெட்டின் தாயகமாக இங்கிலாந்து இருந்த போதிலும், கிரிக்கெட் உலகக் கிண்ணம் முதல் தடவையாக 1975ஆம் ஆண்டில் விளையாடப்பட்டதிலிருந்து உலகக் கிண்ணத்தை வெல்வது இங்கிலாந்து அணிக்கு கடினமான விடயங்களில் ஒன்றாகவே இருந்தது. 

அந்தவகையில் இங்கிலாந்து அணி 1975, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு தெரிவான போதிலும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியினையே தழுவியிருந்தது. 

இவ்வாறாக, கடந்த 44 வருடங்கள் ஒரு கனவாக இருந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம் இங்கிலாந்து அணிக்கு இந்த ஆண்டிலேயே நனவாகி இருக்கின்றது. 

எனினும், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி தமது முதல் உலகக் கிண்ண வெற்றியினை சுவைக்க இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.  

வித்தியாசமான ஆறு ஓட்டங்கள்

உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் வெற்றி இலக்கினை (242) நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பாடிக் கொண்டிருக்கும் போது, இங்கிலாந்து வெற்றிபெற 3 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன்போது, போட்டியின் இறுதி ஓவரின் நான்காவது பந்தில் வித்தியாசமான முறையில் ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டது. 

நான்கு வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசே உலகக் கிண்ணம்: மோர்கன்

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும்……

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்டின் பந்தினை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ், டீப் மிட் விக்கெட் திசையில் பந்தினை தட்டி இரண்டு ஓட்டங்கள் பெற முயன்றார். இந்நிலையில் இரண்டாம் ஓட்டம் பெற முயன்ற போது நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் ஸ்டோக்ஸினை ரன் அவுட் செய்ய முயன்றார். எனினும், குறித்த ரன் அவுட்டுக்காக வீசப்பட்ட பந்து ஸ்டோக்கின் துடுப்பு மட்டையில் தவறுதலாக பட்டு பௌண்டரி கோட்டினை தாண்டியது. 

இதனால், கப்டிலினால் வீசப்பட்ட பந்துக்கு நான்கு ஓட்டங்கள் வழங்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் பெற்ற இரண்டு ஓட்டங்களுடன் சேர்த்து இறுதி ஓவரின் நான்காவது பந்தில் மொத்தமாக 6 ஓட்டங்கள் பெறப்பட்டன. இது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கான முக்கிய திருப்பமாகவும் இருந்தது. 

எனினும், இது தற்போது அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறாக சில முக்கிய விடயங்கள் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு சுவாரசியம் சேர்த்திருந்தன. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<