முன்னணி வீரர்கள் உபாதையில்: நியூசிலாந்து ஒருநாள் குழாமில் பல மாற்றம்

69
(Photo by Marty MELVILLE / AFP) (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடிவருகின்றது. இந்த T20 தொடரினை அடுத்து இந்திய – நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்தின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் இன்று (30) அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து குழாத்திலிருந்து நீக்கப்பட்ட ஜொப்ரா ஆர்ச்சர்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான…..

இந்த தொடருக்கான நியூசிலாந்து குழாம் ட்ரென்ட் போல்ட், மேட் ஹென்ரி மற்றும் லொக்கி பெர்குஸன் போன்ற முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களை உபாதை காரணமாக இழந்திருக்கின்றது. இந்நிலையில் ஸ்கொட் குக்கலெஜின், ஹேமிஷ் பென்னட், கைல் ஜேமிஸன் ஆகியோர் இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் டிம் சௌத்தியுடன் இணைந்து நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சிற்கு பலம் சேர்க்கின்றனர். 

இந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஸ்கொட் குக்கலெஜின் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு, கைல் ஜேமிஸன் 16 ஒருநாள் போட்டிகளில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். 

அதேநேரம், இதுவரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் ஆடாத கைல் ஜேமிஸன் இந்திய A அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் தொடரில் தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, நியூசிலாந்து குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான  இஸ் சோதி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மாத்திரம் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை நோக்கும் போது, ஹென்ரி நிக்கோலஸ், மார்டின் கப்டில் போன்றோர் முன்வரிசை வீரர்களாக வந்து பலம் சேர்க்க டொம் லேதம், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் மத்திய வரிசை வீரர்களாக பெறுமதி தருகின்றனர். இதேவேளை, கொலின் டி கிரான்ட்ஹோமே, ஜேம்ஸ் நீஷம் மற்றும் மிச்சல் சான்ட்னர் ஆகியோர் நியூசிலாந்து அணியின் பிரதான சகலதுறை வீரர்களாக காணப்படுகின்றனர். 

விதிமுறை மீறிய குற்றச்சாட்டில் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய…..

நியூசிலாந்து அணி, இந்தியாவுடன் விளையாடவுள்ள ஒருநாள் போட்டிகளே அவர்கள் 2019ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் விளையாடும் முதலாவது ஒருநாள் தொடர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஹமில்டன் நகரில் ஆரம்பமாக, இரண்டாவது போட்டி பெப்ரவரி மாதம் 08ஆம் திகதியிலும், மூன்றாவது போட்டி பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியும் நடைபெறவிருக்கின்றன. 

இந்திய ஒருநாள் குழாம் 

கேன் வில்லியம்ஸன் (அணித்தலைவர்), ஹேமிஷ் பென்னட், டொம் ப்லன்டல், கொலின் டி கிரான்ட்ஹோமே, மார்டின் கப்டில், கைல் ஜேமிஸன், ஸ்கொட் குக்கலெஜின், டொம் லேதம், ஜிம்மி நீஷம், ஹென்ரி நிக்கோல்ஸ், மிச்செல் சான்ட்னர், இஸ் சோதி (முதல் ஒருநாள் போட்டிக்கு மட்டும்), டிம் சௌத்தி, ரொஸ் டெய்லர்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<