இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம்

629

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தொடரின் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அனுபவ ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சகிப் அல் ஹசன் ஆசிய போட்டியில் விளையாடுவது சந்தேகம்

பங்களாதேஷ் கிரிக்கெட்…

இம்மாதம் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணி, 15 பேர் கொண்ட பலமான குழாத்தை அறிவித்திருந்தது.

எனினும் தற்போது அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவதில் உறுதியற்ற நிலை காணப்படுகிறது. அவரின் விரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மாற்று வீரராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மொமினுல் ஹக் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார் என பங்களாதேஷ் தேர்வுக்குழு தலைவர் மின்ஹஜுல் அபேடின் நன்னு தெரிவித்துள்ளார்.

தமிம் இக்பால் பங்களாதேஷ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராக வலம் வருகின்றார். இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2 சதங்கள் மற்றும் ஒரு அரைச்சதம் அடங்களாக 287 ஓட்டங்களை பெற்றிருந்தார். சிறந்த துடுப்பாட்ட பிரதிகளுடன் இருக்கும் இவர், இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இருந்தால், பங்களாதேஷ் அணிக்கு அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம்.

ஆசிய கிண்ணத்தில் கோஹ்லிக்கு ஓய்வு; இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா

தமிம் இக்பாலின் உபாதை குறித்து கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் தேர்வுக்குழு உறுப்பினர் ஹபிபுல் பஷார்,

தமிம் இக்பால் களத்தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரது வலதுகை விரலொன்றில் உபாதை ஏற்பட்டது. பின்னர் எக்ஸ்ரே பரிசோதனைக்கு அவரின் உபாதை உட்படுத்தப்பட்டது. இதில் பெரியளவிலான காயங்கள் இல்லாவிடினும், விரலில் சிறிய முறிவு ஏற்பட்டிருந்ததை வைத்தியர்கள் உறுதிசெய்தனர்.

அத்துடன் காயம் ஏற்பட்டுள்ள விரலில் நீண்ட காலம் வலி இருக்கும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக தமிம், முதல் போட்டிக்கு முன் தயாராகுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மொமினுல் ஹக் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். ஒருவேளை தமிம் இக்பால் முதல் போட்டிக்கு முன் உபாதையிலிருந்து நீங்காவிடின் மொமினுல் ஹக் இறுதி பதினொருவரில் விளையாடுவார் என குறிப்பிட்டார்.

இதேவேளை ஆசிய கிண்ண குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த பங்களாதேஷ் அணியின் புதுமுக வீரர் நஜ்முல் ஹுசைன், விரல் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதுடன், முன்னணி வீரர் சகிப் அல் ஹசன் விரல் உபாதையிலிருந்து 20 சதவீதம் மாத்திரமே குணமடைந்துள்ளதாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இவ்வாறு வீரர்களின் உபாதை மற்றும் உடற்தகுதி என்பன ஆசிய கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியின் எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க