ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவராகிறார் லட்சுமி

212
BCCI

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஜி.எஸ் லட்சுமி (51 வயது) ஐசிசி-யின் முதல் பெண் போட்டி நடுவராக (Match Refree) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான லட்சுமி, கடந்த 2008/2009 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியிருந்தார். அதுமாத்திரமின்றி, பெண்களுக்கான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரிலும், மூன்று டி-20 கிரிக்கெட் தொடர்களிலும் அவர் போட்டி நடுவராக பணியாற்றியுள்ளார்.

ஆடவர் கிரிக்கெட்டில் வரலாற்று பெயர் பதித்த பெண் நடுவர்

அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 31 வயதுடைய க்ளையர் பொலோசக் என்ற பெண் நடுவர் ………

இந்த நிலையில், லட்சுமியின் பெயரை சர்வதேச போட்டி நடுவர்கள் குழுவில் இணைத்துக் கொண்டுள்ளதாக .சி.சி நேற்று (14) அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஓமான்நமிபியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் லட்சுமி போட்டி நடுவராக பணியாற்ற உள்ளார். இதன்மூலம் ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர் என்ற பெருமையையும் லட்சுமி பெற்றுக்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பில் லட்சுமி கருத்து வெளியிடுகையில், ”.சி.சியின் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் விளையாடியுள்ளேன். அதேபோல கள நடுவராகவும் செயற்பட்டுள்ளேன். ஒரு வீராங்கனையாகவும், கள நடுவராகவும் நான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சர்வதேசப் போட்டிகளிலும் சிறந்த போட்டி நடுவராக செயற்படுவதற்கான நம்பிக்கை தனக்கு இருக்கின்றதுஎன அவர் தெரிவித்தார்.

மேலும், ”இந்த தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, பிசிசிஐ மற்றும் எனது மூத்த நிர்வாகிககள் உள்ளிட்டோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்என்றார்.  

IPL தொடரில் குறைந்த விலையில் பிரகாசித்த வீரர்கள்

இந்தியன் ப்ரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ………

இதேநேரம், அவுஸ்திரேலியாவின் எலோயிஸ் ஷெரிடனும் .சி.சியின் போட்டி நடுவர் அபிவிருத்திக் குழுவில் இடம்பெற்றுள்ளார். 2018/2019 பருவகாலத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான பிக்பேஷ் டி-20 லீக் தொடரில் 2 போட்டிகளின் போது மேலதிக கள நடுவராகச் செயற்பட்ட எலோயிஸ் ஷெரிடன், பெண்களுக்கான பிக்பேஷ் டி-20 லீக் தொடரில் 4 போட்டிகளில் கள நடுவராகவும் செயற்பட்டுள்ளார். அத்துடன் 2018 ஒக்டோபர் மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலியாவின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளின் இறுதி ஆட்டத்திலும் அவர் போட்டி நடுவராகச் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, போட்டி நடுவர் அபிவிருத்திக் குழு பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குழுவில் ஏற்கனவே லோரன் அஜென்பெக், கிம் கோடன், சிவானி மிஷ்ரா, சூ ரெட்பர்ன், மேரி வோல்ட்ரன் மற்றும் ஜெகலின் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், லட்சுமி மற்றும் ஷெரிடன் ஆகியோரது நியமனங்களை .சி.சியின் முதுநிலை முகாமையாளர் அட்ரியன் கிரிப்பித் வரவேற்றுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த சில தினங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளேயர் போலோசக் ஆடவர் ஒருநாள் போட்டியில் நடுவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<