ஐந்தாவது டி20 போட்டியிலும் தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம்

85
Getty image

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை இந்தியா வீசி முடிக்காததால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துஇந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 163 ஓட்ட்களை எடுத்தது. பின்னர் 164 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கடைசி நேரத்தில் தடுமாறி தோல்வியை சந்தித்தது.

இதனால் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது.

இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்…

எனினும், ரோஹித் சர்மாவு இடது கால் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. இதனையடுத்து கேஎல் ராகுல் தற்காலிக தலைவராகச் செயற்பட்டு அணியை வழிநடத்தியிருந்தார்

இதுஇவ்வாறிருக்க, இந்த போட்டியின் போது இந்தியா குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை

.சி.சி.யின் விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் பிரிவு 2.22இன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு

நியூசிலாந்து சென்றிருக்கும், இந்திய கிரிக்கெட் அணி அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20…

இதன்படி, குறித்த போட்டியில் இந்திய அணி ஒரு ஓவர் குறைவாக வீசியது. இதனையடுத்து போட்டி நடுவர் கிறிஸ் ப்ரோட்டினால் விசாரணை நடத்தப்பட்டு போட்டியில் நடந்த இந்த தவறு ரோஹித் தரப்பில் ஒப்பு கொள்ளப்பட்டது

இதனால் இந்திய அணி வீரர்களுக்கு இந்த போட்டிக்கான சம்பளத்தில் தலா 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெலிங்;டனில் நடைபெற்ற 4ஆவது டி20 போட்டியில் இரண்டு ஓவர்கள் தாமதமாக வீசியிருந்த இந்திய அணிக்கு .சி.சியினால் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<