முக்கியமான பலர் இன்றி இலங்கை வரும் இந்திய குழாம் அறிவிப்பு

3353
India Cricket

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கையில் ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய குழாமை இந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (25) அறிவித்துள்ளது.

[rev_slider LOLC]

அதன்படி, இந்திய குழாமில் அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் எம்.எஸ். டோனி ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடருக்கு இந்திய அணியின் தலைமை பொறுப்பு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மாவிடம் வழங்கப்பட்டிருப்பதோடு, உப தலைவராக மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் பெயரிடப்பட்டுள்ளார்.

முத்தரப்பு T-20 தொடருக்கு இந்திய அணியில் பல மாற்றங்கள் இடம்பெறலாம்

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள “சுதந்திர கிண்ண” T-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அணித்தலைவர் விராட் கோஹ்லி, அதேபோன்று வேகப்பந்து

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர வேகப்பந்து வீச்சாளர்களாக செயற்படும் புவ்னேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ராஹ்வுக்கும் இந்த சுற்றுப்பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் சகலதுறை வீரர் ஹார்திக் பாண்டியா ஆகியோரும் இணைக்கப்படவில்லை.  

‘சுதந்திர கிண்ணத்திற்கான குழாமை தேர்வு செய்வதற்கு எதிர்வரும் வேலைப்பளு கொண்ட போட்டி அட்டவணை குறித்தி அவதானம் செலுத்தப்பட்டது’ என்று இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் குறிப்பிட்டார். ‘எமது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதுமான ஓய்வு வழங்குவது, அவர்களது போட்டி திறனை அதிகரிக்கும் மற்றும் காயங்களை தவிர்க்கும் என்று எமது உயர் செயல்திறன் குழு பரிந்துரைத்தது’ என்றும் அவர் தெரிவித்தார்.  

‘எம்.எஸ். டோனி ஓய்வை கோரியதால் அவர் அணித் தேர்வில் கருத்தில் கொள்ளப்படவில்லை’ என்று எம்.எஸ்.கே. பிரசாத் குறிப்பிட்டார். இதனால் முத்தரப்பு தொடரில் ரிஷாப் பாண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் விக்கெட் காப்பாளராக செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதன்படி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கடைசியில் நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஏமாற்றத்தை தந்த பின் அணியில் இருந்து விடுபட்ட மொஹமட் சிராஜ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். கடைசியாக மேற்கிந்திய தீவுகளில் ஒரே ஒரு T20 போட்டியில் ஆடிய ரிஷாப் பாண்ட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி அணித்தலைவரான அவர் மேலதிக விக்கெட் காப்பாளராகவும் உள்ளார்.    

தவிர, தீபக் ஹூடா, வொஹிஷ்டன் சுந்தர், விஜே சங்கர் ஆகியோரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு தொடருக்கான இந்திய T20 குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை

2019 உலகக் கிண்ண

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டியே இந்த முத்தரப்பு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மின்னொளியிலேயே அனைத்துப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. ஆரம்ப சுற்றில் ஒரு அணி ஏனைய அணியுடன் தலா இரண்டு போட்டிகளில் ஆடவுள்ளது.

வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகும் சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஆடவுள்ளன. முதுல் சுற்றின் முடிவில் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் மார்ச் 18ஆம் திகதி இடம்பெறும் இறுதிப் போட்டியில் ஆடும்.

இந்திய குழாம்

ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷிகர் தவான், கே.எல். ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திரா சாஹல், அக்சார் படேல், விஜே ஷங்கர், ஷர்துல் தகூர், ஜெய்தேவ் உனத்கட், மொஹமட் சிராஜ், ரிஷாப் பாண்ட்.