BPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு சிறைத் தண்டனை

499
Image Courtesy - Newsd.in

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரில், நேற்று (15) சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பிரஜையொருவருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் ஒரு மாத சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

டோனியின் சாதனையை 4 ஆண்டுகளில் முறியடித்த சர்ப்ராஸ் அஹமட்

ஒரு அணித்தலைவராகவும் ஒரு விக்கெட் காப்பாளராகவும்….

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில், சில்ஹெட் சிக்ஸர்ஸ்கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் ராஜ்ஷாஹி கிங்ஸ்குல்னா டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் நேற்று நடைபெற்றன. இந்த போட்டிகளின் போது, மைதானத்திலிருந்த நபர் ஒருவர் தொடர்ந்தும், இந்தியாவில் உள்ள நபர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முற்பட்டுள்ளதுடன், சூதாட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்த பங்களாதேஷ் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், குறித்த இந்திய பிரஜை சூதாட்டம் தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டது. இதன் பின்னர், குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கான தண்டனை குறித்து பிரதம நீதவான் மொஹமட் மெயினுல் ஹுசைன், சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

புதிய டெஸ்ட் வீரர்களின் தரப்படுத்தலில் பாக். தென்னாபிரிக்க வீரர்களுக்கு முன்னேற்றம்

நிறைவடைந்த தென்னாபிரிக்க பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் ….

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர்,

குறித்த நபர் மைதானத்திலிருந்து பல தடவைகள் சூதாட்டத்தை மேற்கொள்ளும் நோக்கில் இந்திய நபர்களை தொடர்பு கொண்டமை உறுதி செய்யப்பட்டமையினை அடுத்து, அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பிரஜையென குறித்த நபர் கூறினாலும், கடவுச்சீட்டு மற்றும் இந்தியாவிலிருந்து வந்ததற்கான எந்தவித ஆவணங்களும் அவரிடம் இருக்கவில்லை. குறித்த நபருக்கு ஹிந்தி மொழியில் மாத்திரமே பேச முடிகிறது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மேலும் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என குறிப்பிட்டதனையடுத்து, அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதுஎன்றார்.

இதேவேளை, இந்திய பிரஜை தொடர்பில் குறிப்பிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஹுசைன் இமாம், கைதுசெய்யப்பட்டுள்ள நபரின் பெயர் இம்ரான் பஷார் எனவும், அவர் இந்தியாவின் பீஹாரில் உள்ளவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<