இந்தியாவின் வெற்றியைத் தடுக்குமா தொடரும் மழை?

214
©AFP

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. மேற்கிந்திய தீவுகள் முதல் இனிங்ஸில் 196 ஓட்டங்களோடு சுருண்டது.

பிளாக்வுட் 62 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாக எடுத்தார். இந்திய அணயின் பந்துவீச்சில் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இனிங்ஸை விளையாடிய இந்தியா முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கட் இழப்புக்கு 126 ஓட்டங்களை  எடுத்து இருந்தது. ராகுல் 75 ஓட்டங்களோடும், புஜாரா 27 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை(31) 2ஆவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ராகுல் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 182 பந்துகளில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 100 ஓட்டங்களை  எடுத்தார். 6ஆவது டெஸ்டில் விளையாடும் ராகுலுக்கு இது 3ஆவது சதமாகும்.

ராகுல் 158 ஓட்டங்களைக்  குவித்து ஆட்டமிழந்தார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கட்டுகள் இழப்புக்கு 358 ஓட்டங்களைக்  குவித்து இருந்தது.

திங்கட்கிழமை(01) 3ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடி இந்தியா, 9 விக்கட்டுகளை இழந்து 500 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. ராஹானே 108 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாகப் பந்துவீச்சில் ராஸ்டன் சேஸ் 5 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி தமது ஆட்டத்தை நிறுத்திய பின் போட்டியில் மழை பெய்தது. இந்த மழை இறுதி வரை தொடந்ததால் போட்டியின் 3ஆவது நாள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. பின் 4ஆது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால் நேற்றைய தினம்  வெறுமனே 15.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

இதன் படி நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட  நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 48 ஓட்டங்களை இழந்து தடுமாறி வருகிறது. இதில் பரத்வயிட் 23 ஓட்டங்களையும், டேரன் பிராவோ 20 ஓட்டங்களையும் பெற்றனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமத் ஷமி 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின்  இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 256 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. தற்போது வரை போட்டியின் போக்கு இந்திய அணியின் பக்கம் காணப்பட்டாலும் இன்றும் மழை பொழியுமாயின் போட்டி சமநிலையில் முடிவுறும் நிலை காணப்படுகிறது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 196/10
ப்ளாக்வூட் 62, சாமுவேல்ஸ 37, கமின்ஸ் 24*
ரவி அஷ்வின் 52/5, மொஹமத் ஷமி 23/2, இஷாந்த் சர்மா 53/2

இந்தியா – 500/9d
லோகேஷ் ராஹுல் 158, ரஹானே 108*, ஷா 47, புஜாரா 46, கோஹ்லி 44
செஸ் 121/5

மேற்கிந்திய தீவுகள் – 48/4
பரத்வயிட் 23, டேரன் பிராவோ 20
மொஹமத் ஷமி 25/2

மேற்கிந்திய தீவுகள் அணி 256 ஓட்டங்கள் பின்னிலையில்