2-1 என ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி

159

இன்று (29) மும்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 224 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2-1 என தொடரில் முன்னிலை பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் ஷர்மா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரின் சதங்களுடன் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழந்து 377 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஒருநாள் தொடரை தக்கவைத்த மேற்கிந்திய தீவுகள் அணி

நேற்று (27) நடைபெற்ற இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு…

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 71 ஓட்டங்களை பெற்றிருந்த போது தவான் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசிய இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 211 ஓட்டங்களை பகிர்ந்திருந்த போது தனது 21 ஆவது சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மா 162 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்த அம்பதி ராயுடு 100 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 377 ஓட்டங்களை தமது இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் மேற்கிந்திய அணி சார்பாக கெமார் ரோச் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

378 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்களான ஷாய் ஹோப் ஓட்டமெதுவும் பெறாமலும் சிம்ரோன் ஹிட்மயர் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்ததன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி 36.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 224 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  இத்தோல்வியானது அவ்வணியின் இரண்டாவது மிகப்பெரிய மோசமான தோல்வியாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகபட்சமாக அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதோடு ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமட்  13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இளையோர் ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியிலும் மொஹமட் சமாஸ்

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் நாளை ஆரம்பமாகும்… 

இன்றை போட்டியின் ஆட்ட நாயகனாக 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 377/5 (50) – ரோஹித் ஷர்மா 162, அம்பதி ராயுடு 100, ஷிகர் தவான் 38, கெமார் ரோச் 74/2

மேற்கிந்திய தீவுகள் – 153 (36.2) – ஜேசன் ஹோல்டர் 54*, மார்லன் சாமுவேல்ஸ் 18, கலீல் sriஅஹமட் 13/3, குல்தீப் யாதவ் 42/3

முடிவு இந்திய அணி 224 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க