இந்தியாவுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலும் மோசமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சுக்காக பலோ ஓன் (Follow on) செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மீண்டும் ஒருமுறை இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராட வேண்டியுள்ளது.

பல்லேகலவில் நடைபெற்றுவரும் போட்டியில் இரண்டாவது நாளான இன்று (13) ஹர்திக் பாண்டியாவின் அதிரடி சதம் மற்றும் குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சினால் இந்திய அணி மற்றொரு வெற்றியை நெருங்கியுள்ளது.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து கௌரவத்தை காத்துக்கொள்ளக் இலங்கை இமாலய இலக்கொன்றை எட்ட வேண்டியுள்ளது. இதன்படி இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் இன்னும் 333 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை இன்னிங்ஸ் தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரே ஓவரில் 26 ஓட்டம்

ஆட்டத்தின் இரண்டவது நாளான இன்று 329 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு விஷ்வ பெர்னாண்டோ ஆரம்பத்தில் நெருக்கடி கொடுத்தார். போட்டி ஆரம்பித்து இரண்டாவது ஓவரில் அவர் வீசிய பௌன்ஸர் பந்தில் விரிதிமான் சாஹா சிக்கினார். சாஹா 16 ஓட்டங்களோடு வெளியேறியதை அடுத்து இந்திய அணியின் கடைசி வரிசை வீரர்கள் சற்று தடுமாற்றம் கண்டனர்.

எனினும் 9ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய குல்தீப் யாதவ் ஆடுகளத்தில் நிலைத்திருக்க மறுமுனையில் துடுப்பாடிய ஹர்திக் பாண்டியா இலங்கை பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்தார்.

இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான T-20 மோதல் அடுத்த மாதத்தில்

இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான T-20 மோதல் அடுத்த மாதத்தில்

இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC), அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு

குறிப்பாக மலிந்த புஷ்பகுமார வீசிய 116ஆவது ஓவரில் பண்டியா முதல் இரண்டு பந்துகளுக்கு பவுண்டரிகள் மற்றும் அடுத்து மூன்று பந்துகளுக்கு சிக்ஸர்கள் என்று விளாச அவர ஓட்டம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

அந்த ஓவரில் மாத்திரம் அவர் மொத்தம் 26 ஓட்டங்களை விளாசினார். அதாவது டெஸ்ட் போட்டியில் ஓவர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற இந்திய துடுப்பாட்ட வீரராக அவர் சாதனை படைத்தார். சர்வதேச அரங்கில் இவரை விடவும் பிரையன் லாரா (28), ஜோர்ஜ் பெய்லி (28) மற்றும் ஷஹிட் அப்ரிடி (27) ஆகிய மூன்று வீரர்களுமே ஒரு ஒவருக்கு அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று அல்லது அதற்கு அதிக சிக்ஸர்கள் விளாசிய மூன்றாவது இந்திய வீரராகவும் பாண்டியா இதன்போது பதிவானார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ், அப்ரிடி மற்றும் ஏ.பி டிவிலியர்ஸ் ஆகிய வீரர்கள் மாத்திரமே அடுத்தடுத்து நான்கு சிக்ஸர்கள் விளாசியுள்ளனர்.

பாண்டியாவின் அதிவேக சதம்

இந்திய அணி தனது ஒன்பதாவது விக்கெட்டை பறிகொடுத்தபோதே மறுமுனையில் துடுப்பாடிய பாண்டியா தனது அரைச் சதத்தை அடைந்தார். தொடர்ந்து பத்தாவது விக்கெட்டுக்காகவும் அவர் 66 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற இந்திய அணியின் மொத்த ஓட்டங்கள் 400ஐ கடந்திருந்தது. இதன்போது மறு முனையில் இருந்த மொஹமது ஷமி தனது விக்கெட்டை காத்துக் கொள்ள தடுத்தாடியபோது மறுமுனையில் பாண்டியா பந்துகளை பவுண்டரி எல்லைக்கு செலுத்தினார்.

இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது கன்னி சதத்தை பெற்றுக்கொண்டார். பாண்டியாவின் முதல்தர கிரிக்கெட்டிலும் இது அவரது முதல் சதமாக இது இருந்தது. முன்னதாக அவரது அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் 90 ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கன்னி முதல்தர சதத்தை பெறும் ஐந்தாவது இந்திய வீரர் பாண்டியா ஆவார். இதற்கு முன் விஜய் மன்ஜ்ரேகர், கபில் தேவ், அஜய் ரத்ரா மற்றும் ஹர்பஜன் சிங் இவ்வாறு சதம் பெற்றுள்ளனர்.

ஒரு ஓட்டத்துடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த பாண்டியா இரண்டாம் நாள் ஆட்டத்தின் பகல்போசன இடைவேளைக்கு முன்னரே சதம் கடந்தார். அதாவது போட்டியின் எந்த ஒரு தினத்திலும் பகல்போச இடைவேளைக்குள்ளேயே சதம் பெற்ற முதல் இந்திய வீரர் பாண்டியா ஆவர். எனினும் அப்போது இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்ததால் பகல்போசன இடைவேளை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 86 பந்துகளில் சதம் பெற்ற பாண்டியா விரேந்தர் செவாக்கிற்கு அடுத்து வெளிநாட்டு மண்ணில் அதிவேக டெஸ்ட் சதம் பெற்ற இந்திய வீரராகவும் சாதனை படைத்தார். தவிர அவர் இந்த இன்னிங்ஸில் மொத்தம் 7 சிக்ஸர்களை விளாசி டெஸ்ட் இன்னிங்ஸில் அதிகூடிய சிக்ஸர் அடித்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் செவாக் மற்றும் ஹர்பஜன் சிங்குடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். நவ்ஜத் சிது 1994இல் இலங்கைக்கு எதிராக 8 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

பாண்டியா தனது அரைச் சதத்தைப் பெற 61 பந்துகளுக்கு முகம்கொடுத்ததோடு அடுத்த 25 பந்துகளில் சதத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு போட்டிகளில் வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்கவேண்டும் – வாஸ்

உள்நாட்டு போட்டிகளில் வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்கவேண்டும் – வாஸ்

இலங்கை கிரிக்கெட் (SLC) உள்நாட்டு போட்டிகளில் 2016/17 இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய..

போட்டி பகல்போசன இடைவேளைக்கு பின்னர் ஆரம்பமானபோது  அடுத்த 3 ஆவது பந்திலேயே பண்டியா லக்ஷான் சந்தகனின் பந்துக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்சுக்காக 122.3 ஓவர்களில் 487 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணிக்காக முதல் நாளில் ஆரம்ப வீரர் ஷிகர் தவானும் சதம் பெற்றார்.

இந்திய அணியின் கடைசி வரிசை விக்கெட்டுகளைக் கூட சாய்க்க தடுமறிய இலங்கை பந்துவீச்சாளர்களில் சந்தகன் 32.5 ஓவர்களில் 132 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தகன் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது இது முதல் முறையாகும்.

குறைந்த ஓவர்களில் சுருண்ட இலங்கை

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் மொஹமட் ஷமி 5 ஓவர்களுக்குள்ளேயே வெளியேற்றினார். அனுபவ வீரர் உபுல் தரங்க 5 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெற்று வெளியேறியதோடு, திமுத் கருணாரத்னவினால் 4 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

தொடர்ந்து வந்த வீரர்களும் விக்கெட்டை காத்துக்கொள்ளவில்லை. கடந்த போட்டியில் நம்பிக்கை தரும் வகையில் சதம் அடித்த குசல் மெண்டிஸ் (18) மறுமுனையில் ஆடிய சந்திமாலுடன் ஏற்பட்ட குழப்பத்தில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த மெத்திவ்ஸ் ஓட்டம் ஏதும் பெறாமலேயே வெளியேறினார்.

அணித்தலைவர் சந்திமால் நிதானமாக ஆடி அணியை கௌரவமான நிலைக்கு அழைத்துச் செல்ல முயன்றாலும் அவராலும் நீடிக்க முடியவில்லை. 87 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்ற அவர் அஷ்வினின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல பெற்ற 26 ஓட்டங்கள் இலங்கையின் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும்.

இலங்கை அணியின் கடைசி வரிசை வீரர்களில் இருவர் டக் அவுட் ஆக 37.4 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கே சுருண்டது. இலங்கை அணி தனது சொந்த மண்ணில் மிகக் குறைந்த ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வரிசையில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது. 1994 இல் பாகிஸ்தானுக்கு எதிராக 28.2 ஓவர்களில் சுருண்டது மற்றும் 2016இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 34.2 ஓவர்களுக்கு சுருண்டது இந்த வரிசையில் முதல் இரு இடங்களில் உள்ளன.

சைனமன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மற்றொரு சுழல்பந்து வீச்சாளரான அஷ்வின் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 352 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இந்த தொடரில் இந்திய அணி இரண்டாவது தடவையாகவும் இலங்கை அணியை பலோ ஓன் செய்ய அழைத்தது. இதன்படி இரண்டாவது நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தனது இரண்டாவது இன்னிஸை ஆரம்பித்த இலங்கை அணி எஞ்சி இருக்கும் நேரத்திலும் விக்கெட்டுகளை காத்துக்கொள்ள முடியாமல் போனது.

ஆரம்ப வீரர் உபுல் தரங்க யாதவ்வின் பந்துக்கு 7 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்படி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணி 13 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 19 ஓட்டங்களை பெற்றுள்ளது. திமுத் கருணாரத்ன 12 ஓட்டங்களுடனும் நைட்வொட்ச்மனாக (Nightwatchman) களமிறங்கிய மலிந்த புஷ்பகுமார ஓட்டமின்றி ஆட்டமிழக்காமலும் உள்ளனர்.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் மொத்தம் 15 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தில் இன்னும் மூன்று நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இமாலய ஓட்டங்களை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் காணப்படுகின்றது.

ஏற்கனவே தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி இந்த போட்டியிலும் வென்றால் தொடரை முழுமையாக கைப்பற்றிவிடும்.

நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.

ஸ்கோர் விபரம்

India - BattingToss: India
Shikhar Dhawanc Chandimal b Pushpakumara119 (123)
KL Rahulc Karunarathne b Pushpakumara85 (135)
Chesteshwar Pujarac Mathews b Sandakan8 (33)
Virat Kohlic Karunarathne b Sandakan42 (84)
Ajinkya Rahaneb Pushpakumara17 (48)
Ravinchandran Ashwinc Dickwella b Fernando31 (75)
Wriddhiman Sahac Perera b Fernando16 (43)
Hardik Pandyac Perera b Sandakan108 (96)
Kuldeep Yadavc Dickwella b Sandakan26 (73)
Mohammed Shamic & b Sandakan8 (130
Umesh YadavNot Out3 (14)
TotalExtras (24)487 (122.3 overs)
Sri Lanka - BowlingOMRW
Vishwa Fernando263872
Lahiru Kumara2311040
Dimuth Karunaratne70300
Dilruwan Perera81360
Lakshan Sandakan35.341325
Malinda Pushpakumara232823
Sri Lanka - BattingToss: India
Dimuth Karunarathnec Saha b Shami4 (15)
Upul Tharangac Saha b Shami5 (5)
Kusal MendisRun Out (Ashwin/Kuldeep)18 (19)
Dinesh Chandimalc Rahul b Ashwin48 (87)
Angelo MathewsLBW b Pandya0 (3)
Niroshan Dickwellast Saha b Kuldeep29 (31)
Dilruwan Pererac Pandya b Kuldeep0 (4)
Malinda Pushpakumarab Kuldeep10 (27)
Lakshan Sandakanc Dhawan b Ashwin10 (24)
Vishwa Fernandob Kuldeep0 (10)
Lahiru KumaraNot Out0 (1)
TotalExtras (11)135 (37.4 overs)
India - BowlingOMRW
Mohammed Shami6.51172
Umesh Yadav3.10230
Hardik Pandya61281
Kuldeep Yadav132404
Ravichandran Ashwin8.42222
Sri Lanka - BattingToss: India
Dimuth Karunarathnec Rahane b Ashwin16 (48)
Upul Tharangab Umesh Yadav 07 (31)
Malinda Pushpakumarac Saha b Shami01 (32)
Kusal MendisLBW b Shami12 (21)
Dinesh Chandimalc Pujara b Kuldeep Yadav36 (89)
Angelo MathewsLBW b Ashwin 35 (96)
Niroshan Dickwellac Rahane b Umesh Yadav41 (52)
Dilruwan Pererac Pandya b Ashwin8 (23)
Lakshan Sandakanc Saha b Shami8 (24)
Vishwa FernandoNot Out4 (17)
Lahiru Kumarab Ashwin10 (15)
TotalExtras (3)181 (F/O) (74.3 overs)
India - BowlingOMRW
Mohammed Shami156323
Ravichandran Ashwin28.36684
Umesh Yadav135212
Kuldeep Yadav174561
Hardik Pandya1020