இந்திய துடுப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் அழுத்தம் கொடுத்த இலங்கை

2075
India vs Sri Lanka, 3rd test - Day 01

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் வலுவான துடுப்பாட்டத்திற்கு எதிராக இலங்கை பந்துவீச்சாளர்கள் சிறந்த அழுத்தம் கொடுத்துள்ளனர்.

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை சாய்த்து போட்டியில் ஸ்திரமான நிலையை பெற்றனர்.  

இந்திய கிரிக்கெட்டிலும் நிற பேதமா? தமிழக வீரர் அபினவ் முகுந்த் வேதனை

விளையாட்டு உலகில் நிற பேதம் மற்றும் இன பாகுபாடு என்பது அதிகளவில் இல்லாவிட்டாலும், ஒரு சில நாடுகளிலும் குறிப்பிட்ட சில போட்டிகளில்

இந்த தொடரில் மூன்றாவது தடவையாகவும் இந்திய அணித்தலைவர் விராட் கோலி நாணய சுழற்சியில் வென்று மீண்டும் ஒருமுறை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். தொடர் முழுவதும் அவர் முதலில் துடுப்பெடுத்தாடவே தீர்மானித்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது நாளை எட்டும்போது ஆடுகளம் உடைப்பு ஏற்பட்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் இலங்கை அணியும் முதலில் துடுப்பெடுத்தாட எதிர்பார்த்திருந்தது. பல்லேகல ஆடுகளத்தில் முதல் நாளில் அதிக புற்கள் கொண்டிருந்தாலும் ஏற்கனவே சிறு சிறு வெடிப்புகளை கணமுடிந்தது.

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மாத்திரம் செய்யப்பட்டிருந்தது. .சி.சி ஒழுக்காற்று நடவடிக்கையாக போட்டித் தடைக்கு உள்ளான ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் இடதுகை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் (Wristspinner) குர்தீப் யாதவ் அழைக்கப்பட்டார்.

[/vc_column_text]

[/vc_column][/vc_row]

இலங்கை அணியிலும் இடதுகை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் இணைக்கப்பட்டிருந்தார். ஓய்வு வழங்கப்பட்ட ரங்கன ஹேரத்துக்கு பதில் அழைக்கப்பட்ட லக்ஷான் சந்தகனே அவராவார். 2004 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு டேவ் மொஹமட் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு போல் அடம்ஸ் ஆகியோர் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளராக விளையாடிய பின்னர் ஒரே போட்டியில் இரு சிறப்பு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த டெஸ்டில் இலங்கை அணியில் மேலும் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த நுவன் பிரதீப் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டனர்.

ராகுல், தவான் இணைப்பாட்ட சாதனை

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் வேகமான ஆரம்பத்தை தந்தனர். இருவரும் ஆட்டம் பகல்போசன இடைவேளைக்கு நிறுத்தப்படும்போதே 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களை குவித்தனர். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளிலும் காட்டிவரும் தவான் கிட்டத்தட்ட 100 வீத துடுப்பாட்ட வேகத்துடன் ஓட்டங்களை குவித்தார். இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் ஓவருக்கு 4.75 ஓட்ட வீதத்தை பெற்றனர்.

இதன்போது ராகுல் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக 50 க்கும் கூடிய ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தடவை தொடர்ந்து 50 ஓட்டங்களை பெற்ற எவெர்டன் வீக்ஸ், அன்டி பிளவர், ஷிவனாரின் சந்தர்போல், குமார் சங்கக்கார மற்றும் கிரிஸ் ரொஜர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

Photos: Sri Lanka Media vs India Media

Sri Lanka Media Team Beat India Media team by 2 wickets in the cricket match happened on 8th August 2017 at CCC grounds colombo.

எனினும் மலின்த புஷ்பகுமாரவின் பந்துக்கு ஆக்ரோஷமாக ஆட முயன்று இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் தமது விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக ஆடிய ராகுல் 135 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 85 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி மேலும் 31 ஓட்டங்களை பெறுவதற்குள் தவான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருவரும் ஆரம்ப விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். அதாவது இலங்கை மண்ணில் விருந்தாளி அணி ஒன்று பெற்ற ஆரம்ப விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன் 1993 ஆம் ஆண்டு SSC மைதானத்தில் இந்திய வீரர்களான பிரபாகர் மற்றும் சித்து பகிர்ந்துகொண்ட 171 ஓட்டங்களுமே அதிகூடியதாக இருந்தது.

இதன்போது மாற்று வீரராக இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்ட தவான் மற்றொரு சதத்தை பெற்றார். தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை பெற்ற தவான் 123 பந்துகளில் 17 பௌண்டரிகளுடன் 119 ஓட்டங்களை பெற்றார்.  

கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவர் இரண்டு சதங்களை பெறுவது இது முதல் முறையாகும். கடைசியாக ராகுல் டிராவிட் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு சதங்களை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக பெற்றார். டெஸ்ட் தொடர் ஒன்றில் தவான் ஒன்றுக்கு மேல் சதம் பெறுவது இது முதல் முறையாகும்.

எனினும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வீழ்த்தப்பட்ட பின் அடுத்து வந்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிவரும் புஜாரா 33 பந்துகளில் 8 ஓட்டங்களை பெற்ற நிலையில் சன்தகனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அணித் தலைவர் விராட் கோலி நிதானமாக ஆடி ஓட்டங்களை பெற்றபோதும் அவரால் தொடர்ந்து விக்கெட்டை காத்துக்கொள்ள முடியவில்லை. 84 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 42 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். ரஹானே 17 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதோடு அஷ்வின் 31 ஓட்டங்களை பெற்ற நிலையில் விஷ்வ பொர்னாண்டோவின் பந்துக்கு வெளியேறினார்.

கௌரவத்தை காக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இலங்கை

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி தொடர் முழுவதிலும் தோல்வி அடையும் நெருக்கடியை தவிர்க்கும்…

இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதாவது இந்திய அரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் 188 ஓட்டங்களை சேர்த்த நிலையில் அந்த அணி மேலும் 133 ஓட்டங்களை பெறுவதற்குள் ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி ஓட்டம் பெறும் வேகமும் ஓவருக்கு 4.75 என்ற வீதத்தில் இருந்து 3.65 வீதமாக வீழ்ச்சி கண்டது.

இலங்கை அணி சார்பில் ஆறு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவும் ஐந்து ஓவர்கள் பந்து வீசினார். எனினும் கடந்த முறை போல் அவரால் விக்கெட் வீழ்த்த வாய்ப்பு கிட்டவில்லை. தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் முதல்தர போட்டிகளில் அனுபவம் பெற்ற புஷ்பகுமார 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். சன்தகன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் விரிதிமான சாஹா 13 ஓட்டங்களுடனும் ஹார்திக் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.